7TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 3RD WEEK

   

நாள்               :           19-09-2022 முதல் 23-09-2022       

மாதம்                          செப்டம்பர்

வாரம்               :            மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             திருப்புதல் - இயல்  1 முதல் 3

பொது நோக்கம்                                       :

Ø  இயல் -1 முதல் 3 வரை  உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை முதல் பருவத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்

Ø  முக்கிய வினாக்களில் பயிற்சி அளித்தல்

Ø  காடு மனப்பாடப் பாடலை மனனம் செய்து பயிற்சி பெறல்

Ø  சில முக்கிய வினாக்கள்

o    எங்கள் தமிழ் மனப்பாடப்பாடல், காடு, திருக்குறள், புலி தங்கிய குகை மனப்பாடப் பாடல்களை மனனம் செய்தல்

o    பாடலில் உள்ள நயங்களை அறிதல்

o     தம் வயிற்றுக்கு தாய் எதனை உவமையாக் கூறுகிறார்?

o    தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

o    தமிழில் அற இலக்கியம் மிகுதியாகத் தோன்ற காரணம் என்ன?

o    பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

o    முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டி பெரியார் கூறியது யாது?

o    பேச்சு மொழிக்கும், எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு நான்கினை விளக்குக.

o    சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

o    குற்றியலுகரம் என்ற சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

o    தாய் மொழி பற்றுக் குறித்து கட்டுரை எழுதுக.

o    காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன யாவை?

o    வழக்கு என்றால் என்ன?

o    தகுதி வழக்கின் வகைகள் யாவை?

o    நான் விரும்பும் தலைவர் – கட்டுரை எழுதுக

Ø  மேற்கண்ட வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post