நாள் : 12-09-2022 முதல் 16-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருப்புதல் - இயல் 3
பொது நோக்கம் :
Ø இயல் -3 இல் உள்ள பாடப்பகுதிகளில்
உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்
Ø மாணவர்களை முதல் பருவத்
தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்
Ø மனப்பாடப் பாடல், ஒரு
மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில்
பயிற்சி அளித்தல்
Ø மொழித் திறன் பயிற்சிகளில்
மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்
சிறப்பு நோக்கம் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு
சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்
Ø முக்கிய வினாக்களில்
பயிற்சி அளித்தல்
Ø காடு மனப்பாடப் பாடலை
மனனம் செய்து பயிற்சி பெறல்
Ø சில முக்கிய வினாக்கள்
o பாடலில் உள்ள நயங்களை
அறிதல்
o தம் வயிற்றுக்கு தாய் எதனை உவமையாக் கூறுகிறார்?
o தாய் தன் வயிற்றை புலி
தங்கி சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
o பாஞ்சாலங்குறிச்சியில்
வீடுகள் எவ்வாறு இருக்கும்?
o பாஞ்சாலங்குறிச்சியின்
இயற்கை வளம் எத்தகையது?
o முத்துராமலிங்கத் தேவரைப்
பாராட்டி பெரியார் கூறியது யாது?
o நேதாஜியுடன் முத்துராமலிங்கத்
தேவர் கொண்ட தொடர்பினைப் பற்றி எழுதுக
o சிறந்த தலைவருக்குரிய
பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
o வழக்கு என்றால் என்ன?
o தகுதி வழக்கின் வகைகள்
யாவை?
o நான் விரும்பும் தலைவர்
– கட்டுரை எழுதுக
Ø மேற்கண்ட
வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை