7TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 2ND WEEK

    

நாள்               :           10-10-2022 முதல் 14-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :            இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             கலங்கரை விளக்கம்

                                        கவின் மிகு கப்பல்

                                        தமிழரின் கப்பற் கலை

அறிமுகம்                                 :

Ø   முதல் பருவத் தேர்வு விடுமுறையில் யார் யார் எந்தெந்த ஊர்களுக்கு சென்று வந்தீர்கள்?

Ø  எந்த வாகனம் மூலம் சென்று வந்தீர்கள்?

Ø  நாம் ஒரு ஊருக்கு செல்லும் போது எந்தெந்த வாகங்னகள் மூலம் செல்லலாம் என கூறுங்கள் எனக் கேட்டறிந்து ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  சங்கப் பாடலை சீர் படிக்கும் திறனும், கருத்தை உணரும் திறனும் பெறுதல்

Ø  தமிழர்களின் கப்பல் கட்டும் கலையை இலக்கியங்கள் மூலம் கண்டு வியத்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்.

Ø  போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களை அடையாளம் காணுதல்

Ø  கலங்கரை விளக்கம் என்பதனை அறிதல்

Ø  கலங்கரை விளக்கத்தின் பயன்களைக் கூறல்

Ø  சங்க இலக்கியத்தில் கப்பல் பற்றி அறிதல்

Ø  மருதன் இளநாகனார் பற்றி அறிதல்

Ø  கப்பல் செல்லும் போக்கினை சங்க இலக்கியம் மூலம் காணுதல்

Ø  கப்பல் கட்டும் கலையில் தமிழர்கள் சிறந்து விளக்கியதை உரைநடை பகுதி வாயிலாக அறிதல்

Ø  கப்பல் கட்டும் கலையில் சிறந்து விளங்கியதை சங்க இலக்கியம் காட்டும் மேற்கோள் வழியாக அறிதல்

நினைவு வரைபடம்                   :

                                                                          கலங்கரை விளக்கம்







கவின் மிகு கப்பல்

தமிழர் கப்பற் கலை

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

கலங்கரை விளக்கம்

Ø  டியலூர் உருததிரங்கண்ணனார் சங்க காலப் புலவர்

Ø  . இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்நதவர்.

Ø   இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்று படை, பட்டினப் பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

Ø  கலங்கரை விளக்கம் தூண் போல் காட்சி அளிக்கிறது.

Ø  விண்னை முட்டும் மாடத்தை உடையது

கவின் மிகு கப்பல்

Ø  கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்கலை தன் துறை நோக்கி அழைக்கிறது.

Ø  உலகம் புடைப்பெயர்ந்தது போன்ட அழகிய தோற்றத்தை உடையது நாவாய்.

Ø  பெரிய கடல் நீரினை பிளந்து கொண்டு செல்லும்

Ø  கலங்கரை விளக்கின் ஓளியால் நாவாயை ஓட்டுபவன் திசை அறிந்து நாவாயை செலுத்துவான்

தமிழரின் கப்பற் கலை

Ø  முந்நீர் வழக்கம் – தொல்காப்பியம்

Ø  கடலோட கால்  - திருக்குறள்

Ø  உலகு கிளர்ந்தென்ன உரு கெழு வங்கம் – அகநானூறு

Ø  அருஙகலம் தரீஇயர் நீர்மிவை சேந்தன் திவாகரம்

Ø  சிறிய நீர்நிலைகளை கடக்க : தோணி, ஓடம்,படகு,புணை,தெப்பம்

Ø  அளவில் பெரியவை : கலம், வங்கம், நாவாய்

Ø  கப்பல் கட்டும் கலைஞர்கள் – கம்மியர்கள்

Ø  கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்

Ø  கப்பலின் உறுப்புகள் : எரா,பருமல்,வங்கு,கூம்பு,பாய்மரம்,சுக்கான்,நங்கூரம்.

Ø  கப்பல் செலுத்துபவரை – மாலுமி, மீகாமன்,நீகான்,கப்பலோட்டி

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

கலங்கரை விளக்கம்




Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

தமிழரின் கப்பற் கலை



மாணவர் செயல்பாடு :

o  செய்யுளினை சீர் பிரித்து அறிதல்

o  புதிய சொல்லிற்கான பொருள் காணுதல்

o  அகராதியைப் பயன்படுத்துதல்

o  கலங்கரை விளக்கத்தின் பயன் அறிதல்

o  கப்பலின் அழகினை சங்க இலக்கியம் மூலம் அறிதல்

o  உரைப்பத்தியினை பிழையின்றி வாசித்தல்

o  கப்பல் குறித்த பல்வேறு தகவல்களை அறிதல்

o  கப்பலின் உறுப்புகளை அறிதல்

o  கப்பல் செலுத்துபவரை பற்றி அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  கலங்கரை விளக்கம் எனபது யாது?

Ø  நாவாய் என்றால் என்ன?

Ø  முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடும் நூல் எது?

MOT

Ø  வேயாமாடம் என்பது யாது?

Ø  நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

Ø  கப்பலின் உறுப்புகள் யாவை?

HOT:

Ø  கலங்கரை விளக்கம் கப்பலோட்டிகளுக்கு தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும்?

Ø  தரைவழிப் பயணம், கடல் வழிப் பயணம் குறித்து வேறுபாடு கூறுக.

Ø  இக்காலத்தில் மக்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு கப்பலை பெரிதும் விரும்பாதது எதன் காரணமாக இருக்கும்?

கற்றல் விளைவுகள்                  ::

Ø  710 – பாடப்பொருள் ஒன்றினை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

Ø  709 – ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்.

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  இயல்பு வழக்கு, தகுதி வழக்கு இரண்டிற்கும் படத் தொகுப்பு உருவாக்குக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post