நாள் : 19-09-2022 முதல் 23-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருப்புதல் - 1 முதல் 3
பொது நோக்கம் :
Ø இயல் – 1 முதல் 3 இல்
உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்
Ø மாணவர்களை முதல் பருவத்
தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்
Ø மனப்பாடப் பாடல், ஒரு
மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில்
பயிற்சி அளித்தல்
Ø மொழித் திறன் பயிற்சிகளில்
மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்
சிறப்பு நோக்கம் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு
சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்
Ø முக்கிய வினாக்களில்
பயிற்சி அளித்தல்
Ø சில முக்கிய வினாக்கள்
o இன்பத்
தமிழ், காணிநிலம், சிலப்பதிகாரம், திருக்குறள் – மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்
o அனைத்து
செய்யுள் பகுதிகளிலும் உள்ள எதுகை, மோனை நயங்களை அறிதல்
o சமூக
வளர்ச்சிக்கும், நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
o தமிழ்மொழி
அறியாமையை எவ்வாறு அகற்றும்?
o நீங்கள்
அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
o தமிழ்
எழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
o விடுப்பு
விண்ணப்பம் எழுதுக.
o இயற்கை
போற்றத்தக்கது ஏன்?
o மனிதர்களுக்கு மருந்தாத
விளங்குவது எது?
o உங்களுக்கு தெரிந்த மருத்துவமுறைகள்
யாவை?
o செயற்கைகோள் எவற்றுக்கெல்லாம்
பயன்படுகிறது?
o எவற்றுக்கெல்லாம் புதிய
கண்டுப்பிடிப்புகள் தேவை என்பது குறித்து எழுதுக.
o டீப் – புளு பற்றிக்
குறித்து எழுதுக.
o எந்திர மனிதனின் பயன்களை
எழுதுக.
o மொழிக்கு
முதலில் வரும் உயிர்மெய்யெழுத்துகள் யாவை?
Ø மேற்கண்ட
வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை