10TH - TAMIL - QRTLY - TWO MARK COLLCETIONS - PDF

 

 பத்தாம் வகுப்பு

தமிழ்

காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்

இயல் 1 முதல் இயல் 6 வரை

பத்தாம் வகுப்பு – தமிழ்

காலாண்டுத் தேர்வு பயிற்சிப் புத்தகம் 

குறு வினா ( இரண்டு மதிப்பெண் ) புத்தக வினாக்கள்

( உரைநடை,செய்யுள்,இலக்கணம் )

இயல் – 1

1. வேங்கை -  என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

5 தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

இயல் – 2

1. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான

  இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

2. வசன கவிதைகுறிப்பு வரைக.

3. தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

4.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

5. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

இயல் – 3

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி ‘ – என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.                  

3. “எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

4. ‘ இறடி பொம்மல் பெறுகுவிர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

5. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

இயல் – 3

திருக்குறள்

1. “ நச்சப் படாதவன்” செல்வம் – இத்தொடரில் தடித்த சொல்லுக்குப் பொருள் தருக.

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

   கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.                                               

அ)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்

1)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

 

ஆ)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது

2)உயிரினும் ஓம்பப்படும்

 

இ)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

3)நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

 

4) எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள் இ) தேமா புளிமா காசு

ஈ) புளிமா தேமா பிறப்பு

இயல் – 4

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

2. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

5. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.  

இயல் – 5

1. “ கழிந்த கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

2.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

3. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக

4. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

5. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

  இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம்

  இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

இயல் – 6

1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

2. “நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக

3. உறங்குகின்ற கும்பகன்ன’ எழுந்திராய் எழுந்திராய்’

  காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘

  கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

4 சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்

  சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

5 கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

இயல் – 6

திருக்குறள்

1. கரப்பிடும்பை இல்லார்இத்தொடரின் பொருள் கூறுக

2. தஞ்சம் எளியர் பகைக்குஇவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

4. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

            பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

 

CLICK HERE TO GET PDF

வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.    

பாடங்களை காணொளி வாயிலாக காண :-

YOUTUBE :  https://youtube.com/user/000ramakrishnan             

நமது வலைதளக் குழுக்களில் இணையும்

WHATSAPP :   https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz      

TELEGRAM :    https://t.me/tamzhivithai

FACE BOOK PAGE :  https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post