10TH - TAMIL - QRTLY - ONE MARK COLLCETIONS - PDF

 பத்தாம் வகுப்பு

தமிழ்

காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்

இயல் 1 முதல் இயல் 6 வரை

ஒரு மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு

இயல் – 1

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-

1. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது _______

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்                                                 

2. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___________________

) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும்இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா   ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா

4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________

) பாடிய;கேட்டவர்          ) பாடல்;பாடிய  ) கேட்டவர்;பாடிய  ) பாடல்;கேட்டவர்

5. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை --

) குலை வகை  ) மணிவகை   ) கொழுந்து வகை        ) இலை வகை

இயல் – 2

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை இ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை

2. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்.

  செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே

 செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள்  தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி                  ஆ) செய்தி 1,2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி                ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

3. ‘பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                  ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

4. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை ) அன்மொழித்தொகை

) உம்மைத்தொகை

5. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்                 -          1. மேற்கு

ஆ) கோடை                    -          2. தெற்கு

இ) வாடை                      -          3. கிழக்கு

ஈ) தென்றல்                    -          4. வடக்கு

அ) 1,2,3,4                       ஆ) 3,1,4,2                      இ) 4,3,2,1           ஈ) 3,4,1,2

இயல் – 3

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர் –

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு          

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு        

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2.’ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ என்னும் அடியில் பாக்கம் என்பது --------

அ) புத்தூர்          ஆ) மூதூர்                      இ) பேரூர்          ஈ) சிற்றூர்

3. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு      ) எழுவாய்       ) உவம உருபு   ) ரிச்சொல்

4. காசிக்காண்டம் என்பது –

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5.‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-------

அ) நிலத்திற்கேற்ற விருந்து                       ஆ) இன்மையிலும் விருந்து          

இ) அல்லிலும் விருந்து                              ஈ) உற்றாரின் விருந்து

இயல் – 4

1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்            ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்           இ) மருத்துவரிடம் நோயாளி         

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : 1. கண்காணிப்பு கருவி,அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

2. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3. பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்                    ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும்             ஈ) வானத்தையும் பேரொலியையும்

4. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி  ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி  ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா             ஆ) சீலா             இ) குலா            ஈ) இலா

இயல் – 5

1. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

2. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

அ) அருமை + துணை ஆ) அரு + துணை  இ) அருமை + இணை ஈ) அரு + இணை

3.”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது _______வினா.

 “ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல்                       ஆ) அறிவினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை                    ஈ) கொளல் வினா, இனமொழி விடை

4. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”  -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்             ஆ) அறிவியல்                  இ) கல்வி           ஈ) இலக்கியம்

5. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்    ______

அ) அமைச்சர், மன்னன்    ஆ) அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன் 

ஈ) மன்னன்,இறைவன்

இயல் – 6

1. குளிர் காலத்தைப் பொழுதாக்க் கொண்ட நிலங்கள்________

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்           ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்         ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

2.     ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். – இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.

ஆ) ஒயிலாட்டத்தில் ஒரு வரிசையில்  நின்று ஆடப்படுகிறது.

இ) ஒயிலாட்டம் ஒரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.

ஈ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது

 3. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்       ஆ) தளரப் பிணைத்தால்  இ) இறுக்கி முடிச்சிட்டால்

ஈ) காம்பு முறிந்தால்

4.   கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக் கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?     ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?

இ) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்    ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்              ஈ) அங்கு வறுமை இல்லாததால்

 

 

CLICK HERE TO GET PDF


வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.

இந்த வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு இணைய வழியில் தேர்வு எழுத

கீழ் உள்ள விரைவுத் துலங்கள் குறியீட்டை வருடவும்

 

                                          











                                                                  

         

         

         

                  

         

         

பாடங்களை காணொளி வாயிலாக காண :-

YOUTUBE :  https://youtube.com/user/000ramakrishnan             

நமது வலைதளக் குழுக்களில் இணையும்

WHATSAPP :   https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz      

TELEGRAM :    https://t.me/tamzhivithai

FACE BOOK PAGE :  https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post