பத்தாம் வகுப்பு
தமிழ்
காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்
இயல் 1 முதல் இயல் 6 வரை
மொழித்திறன் வினாக்கள் - தொகுப்பு
மொழித்திறன் பயிற்சிகள்
( இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண்
) புத்தக வினாக்கள்
இவற்றில்
சில வினாக்கள் ஐந்து மதிப்பெண்கள் வினாக்களில் கேட்கக்கூடும்
இயல் -2
அ ) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை
அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:- ( 2 மதிப்பெண் )
இன்சொல்,எழுகதிர்,கீரிபாம்பு,பூங்குழல் வந்தாள்,மலைவாழ்வார்,முத்துப்பல
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. ( 5 மதிப்பெண் )
ஆ ) பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.
மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும்
மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.
பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.
2. அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.
4. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.
5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.
இ ) பாரதியின் வசன நடை – சிட்டுக்குருவி ( 5 மதிப்பெண் )
சிறிய
தானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள் ; சின்னத்தலை ; வெள்ளைக் கழுத்து ; அழகிய மங்கல்
வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு ; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய
பட்டுப்போர்த்த முதுகு ; சிறிய தோகை ; துளித்துளிக் கால்கள் ; இத்தனையும் சேர்த்து
ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து
கொண்டு என் வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.
இது போன்று உங்களுக்குப்
பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசன நடையில் எழுதுக.
ஈ ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை
விடுவிக்க:- ( 2 மதிப்பெண் )
1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
2. பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்
3. இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.
4. நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
5. ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்
( காடு,புதுமை,விண்மீன்,காற்று,நறுமணம் )
உ ) நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
( 2 மதிப்பெண் )
1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது.
2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது ; அச்செடியை
வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் ; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து
நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில்
அமர்கின்றன.
4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட
புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும் ; கசகசத்த உயிரினங்கள்.
5. நின்று விட்ட மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும்
விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
6. குயில்களின் கூவலிசை.புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்,இலைகளின் அசைவுகள்,
சூறைக்காற்றின் ஆலோலம்.
( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின்
ஏக்கம், நீரின் சிலிர்ப்பு )
கலைச்சொல் அறிக:-
இயல் - 2 |
Storm
– Tornad0
– Tempest
– Land
breeze – Sea
breeze – Whirlwind
- |
அகராதியில் காண்க:-
இயல் - 2 |
அகன்சுடர்- ஆர்கலி
– கட்புள்
– கொடுவாய்
– திருவில்
- |
வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.
பாடங்களை காணொளி வாயிலாக காண :-
YOUTUBE : https://youtube.com/user/000ramakrishnan
நமது வலைதளக் குழுக்களில் இணையும்
WHATSAPP : https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz
TELEGRAM : https://t.me/tamzhivithai
FACE BOOK PAGE : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share