10TH - TAMIL - QRTLY - MOZHI THIRAN - UNIT 1 - COLLCETIONS - PDF

 

 பத்தாம் வகுப்பு

தமிழ்

காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்

இயல் 1 முதல் இயல் 6 வரை

மொழித்திறன் பயிற்சிகள் - தொகுப்பு


பத்தாம் வகுப்பு – தமிழ்

காலாண்டுத் தேர்வு பயிற்சிப் புத்தகம் 

மொழித்திறன் பயிற்சிகள்

( இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் )  புத்தக வினாக்கள்

இவற்றில் சில வினாக்கள் ஐந்து மதிப்பெண்கள் வினாக்களில் கேட்கக்கூடும்

இயல் -1

அ ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:- ( 2 மதிப்பெண் )

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

ஆ ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

( குவியல், குலை,மந்தை,கட்டு )

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

 

புல்

 

பழம்

 

ஆடு

 

இ ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக ( 2 மதிப்பெண் )

1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.

ஈ ) தொடர்களில் உள்ள தடித்த அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக. ( 2 மதிப்பெண் )

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

உ ) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-  ( 2 மதிப்பெண் )

          குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்

ஊ )எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக. ( 2 மதிப்பெண் )

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

 

 

எறும்புந்தன் கையால் எண் சாண்

 

 

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

 

 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

 

 

 

இயல் - 1

Vowel –

Consonant –

Homograph –

Monolingual –

Conversation –

Discussion -

 

இயல் - 1

அடவி-

அவல் –

சுவல் –

செறு –

பழனம் –

புறவு -

 CLICK HERE TO GET PDF

வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.    

பாடங்களை காணொளி வாயிலாக காண :-

YOUTUBE :  https://youtube.com/user/000ramakrishnan             

நமது வலைதளக் குழுக்களில் இணையும்

WHATSAPP :   https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz      

TELEGRAM :    https://t.me/tamzhivithai

FACE BOOK PAGE :  https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post