10TH - TAMIL - QRTLY - FIVE MARK COLLCETIONS - PDF

 

 பத்தாம் வகுப்பு

தமிழ்

காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்

இயல் 1 முதல் இயல் 6 வரை

5 மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – தமிழ்

காலாண்டுத் தேர்வு பயிற்சிப் புத்தகம் 

 ஐந்து மதிப்பெண்

புத்தக வினாக்கள்

செய்யுள் நெடுவினாக்கள்

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக..

2. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

3. ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

4. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….

5. இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

6. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

கடித வினாக்கள்

1 மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

2 உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

3 பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப் பொருள் – மொழிநடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்

நயம் பாராட்டுக

1 தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

            தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

  ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

            உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

  வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

            மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

  தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

            தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

                                                                        கா.நமச்சிவாயர்

“ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

      அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

      உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

     இலையிலிட வெள்ளி எழும் “

                                                            காளமேகப் புலவர்

3 நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

    குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

கோல வெறிபடைத்தோம்;

    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

   பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?                 - பாரதியார்

படிவ வினாக்கள்

1.        திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அறிவழகனின்  23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்து போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் காமராஜர் நகர், பாரதியார் தெருவில், 51ம் இலக்க எண்ணில்  தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர  விரும்புகிறார். திரு.சுந்தர வடிவேலு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு பிணைப்பாளராக கையொப்பமிடுகிறார்.  தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.

2. விழுப்புரம், பாரதி நகர், தேரடி வீதி. கதவிலக்க எண் 57 இல் வசிக்கும் தமிழன்பனின் மகள் எழிலரசி  அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர்கிறார். தேர்வர் தம்மை எழிலரசியாக நினைத்து படிவம் நிரப்புக.

3. நூலக உறுப்பினர் படிவம் நிரப்புக

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல்

காட்சி

 

1


4


 

2


5



3


6


 

மொழிபெயர்ப்பு / நிற்க அதற்குத் தக வினாக்கள்

மொழிபெயர்ப்பு

இயல் - 1

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

இயல் – 2

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

இயல் – 3

Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

இயல் – 4

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

இயல் – 5

யாழிசை

It’s like new lute music

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.

               பாரதிதாசன்

Wondering at the lute music

Coming from the chamber

Entered I to look up to in still

My grand – daughter

Learning by rote the verses

Of a didactic compilation

 

Translated by Kavingar Desini

 

இயல் – 6

Koothu

          Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.

நிற்க அதற்குத் தக

இயல் - 1

இன்சொல் வழி

தீய சொல் வழி

பிறர் மனம் மகிழும்

அறம் வளரும்

புகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் சேருவர்

அன்பு நிறையும்

பிறர் மனம் வாடும்

அறம் தேயும்

இகழ் பெருகும்

நல்ல நண்பர்கள் விலகுவர்

பகைமை நிறையும்

இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

இயல் – 2

வானொலி அறிவிப்பு....

            ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில்    மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.

இயல் – 3

தம்பி.. உனக்குப் பிடிச்ச காய் சொல்லு ? “           -          “ கேரட் “

“ பிடிச்ச பழம்?”                                                  -          “ ஆப்பிள்”

பிடிச்ச காலை உணவு?                          -          “ நூடுல்ஸ் “

“ மத்தியானத்துக்கு “                                          -          “ ஃப்ரைடு ரைஸ் “

“ ராத்திரி….?”                                                    -          “ பீட்ஸா அல்லது பாஸ்தா”

  இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. “ சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர் “ என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும், சாம்பார் சாதமும்.கத்திரிக்காய் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில்.’ ஆம்’ காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள்” ஆடு,மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்.

மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

இயல் – 4

தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.

இயல் – 5

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

இயல் – 6

அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள்.ஒரு புறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள்….இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.

இக்கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.

 CLICK HERE TO GET PDF

 

வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.    

பாடங்களை காணொளி வாயிலாக காண :-

YOUTUBE :  https://youtube.com/user/000ramakrishnan             

நமது வலைதளக் குழுக்களில் இணையும்

WHATSAPP :   https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz      

TELEGRAM :    https://t.me/tamzhivithai

FACE BOOK PAGE :  https://www.facebook.com/groups/215175780078251/?ref=share


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post