பத்தாம் வகுப்பு
தமிழ்
காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்
இயல் 1 முதல் இயல் 6 வரை
எட்டு மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு
எட்டு மதிப்பெண்
புத்தக
வினாக்கள்
நெடுவினாக்கள்
1. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்மன்றத்தில்
பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
2 ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின்
மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம்
தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்
இயல் – 2
1.. புயலிலே
ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.?
2. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
- கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும்
பாராட்டி உரை செய்க.
இயல் – 3
2 உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து எழுதுக.
இயல் – 4
1. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும்
மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச்
செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும்
முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும்
தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள்
மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல்
செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….
3.“ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்
“ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
இயல் – 5
பிச்சை புகினும்
கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
2 தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள
இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை
மேற்கண்ட
குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை
‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
இயல் – 6
1 நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின்
ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.
பாடங்களை காணொளி வாயிலாக காண :-
YOUTUBE : https://youtube.com/user/000ramakrishnan
நமது வலைதளக் குழுக்களில் இணையும்
WHATSAPP : https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz
TELEGRAM : https://t.me/tamzhivithai
FACE BOOK PAGE : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share