நாள் : 05 -09 -2022 முதல் 09 -09 -2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. நிகழ்கலை
2. பூத்தொடுத்தல்
3. முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
அறிமுகம் :
Ø உங்கள் ஊர் திருவிழாக்களில்
நடைபெறக் கூடிய கலைகள்
குறித்து கூறுக
Ø நீங்கள் அறிந்த பூக்களின் பெயர்களைக் கூறுக.
Ø உனது வீட்டின் அருகில் குழந்தைகள் உள்ளனரா? அவர்களின்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.
நோக்கம் :
Ø தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து,அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் தங்களின் பங்களிப்பை நல்குதல்.
Ø எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.
Ø கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற
பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு)
Ø திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்வுகள் பற்றிக் கூறல்
Ø கரகாட்டம், மயிலாட்டம் பற்றிக் கூறல்
Ø காவடியாட்டம், ஒயிலாட்டம் பற்றியக் காணொளிகளை காட்டி விளக்குதல்
Ø தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் பற்றிக் கூறல்
Ø தப்பு ஆட்டம், புலி
ஆட்டம்,
தெருக் கூத்து, தோற்பாவைப் பற்றிக் கூறல்
Ø பூவின் மென்மையை பெண்களோடு ஒப்பிடப்பட்டுள்ளதைக் கூறல்
Ø பூக்க்கட்டும்
கலையினை பற்றிக் கூறல்
Ø முருகனை குழந்தையாக பாவித்து எழுதப்பட்டுள்ள பாடலை விளக்குதல்
Ø செய்யுளின் பொருளைக் கூறல்
Ø பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
கருத்து வரைபடம் :
நிகழ்கலை
பூத்தொடுத்தல்
முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
விளக்கம் :
( தொகுத்தல் )
நிகழ்கலை
Ø பழந்தமிழ் மக்களின் கலை,
புதுமை, அழகியல் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் ஆகியவற்றின் எச்சங்களை அறிய கலைகள்
துணை செய்கின்றன.
Ø கரகாட்டம் : தலையில்
கரகம் வைத்து ஆடுவது
Ø மயிலாட்டம் : கரகாட்டத்தின்
துணை ஆட்டம்
Ø காவடியாட்டம் : இரு முனைகளிலும்
பாரம் தாங்கி ஆடும் ஆட்டம்
Ø ஒயிலாட்டம் : கம்பீரத்துடன்
ஆடுவது தனி சிறப்பு
Ø தேவராட்டம், சேவையாட்டம்
: வானத்து தேவர்களால் ஆடப்படுவது
Ø பொய்க்கால் குதிரையாட்டம்
: போலச் செய்தல் என்னும் பண்பை அடிப்படையாகக் கொண்டது.
Ø தப்பு ஆட்டம் : தப்பு
என்னும் இசைக் கருவிக் கொண்டு ஆடுவது
Ø புலி ஆட்டம் : தமிழ்
மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது
Ø தெருக் கூத்து : நாட்டுப்புற
மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை.
Ø தோற்பாவைக் கூத்து :
தோலால் செய்யப்பட்ட பொம்மைக்களைக் கொண்டு ஆடுவது
பூத்தொடுத்தல்
Ø கவிஞர் : உமா மகேஸ்வரி
o
ஊர்
: மதுரை
o
கவிதைகள்
: நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை
Ø பூத்தொடுக்கும் அழகினை
அழகாக விவரிக்கிறார்.
Ø பெண் அந்த பூவினை எப்படி
கட்டுவது என்பதனை கவிதை வடிவமாக தந்துள்ளார் கவிஞர்.
முத்துக்
குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
Ø குமரகுருபரர்
Ø 17ம் நூற்றாண்டினைச்
சேர்ந்தவர்.
Ø முருகனை குழந்தையாக பாவித்து
பாடப் பெற்றது.
Ø பிள்ளைத்தமிழ் 96 வகை
சிற்றிலக்கியங்களில் ஒன்று
Ø ஆண்பாற் பிள்ளைத்தமிழ்,
பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகை உண்டு.
Ø அணிகலன் : சிலம்பு, கிண்கிணி,
அரை நாண், சுட்டி, குண்டலம், குழை, சூழி
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
நிகழ்கலை - பகுதி 1
பூத்தொடுத்தல்
முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை
வாசித்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø நிகழ்கலைகளின் வடிவங்களை
உணர்தல்
Ø நிகழ்கலைகள் தற்பொழுது
எவை ஆடப்படுகிறது என்பதனை உணர்தல்.
Ø நிகழ்கலைகளுக்கு இசைக்கப்படும்
கருவிகளை அறிதல்
Ø எளிய சொற்களைக் கொண்டு
கவிதைப் படைக்கும் இயல்பை பூத்தொடுத்தல் பகுதியில் உணர்தல்
Ø பூவின் மென்மையை பெண்மையோடு
ஒப்பிடப்படுவதை உணர்தல்
Ø முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
– நூல் வெளி அறிதல்
Ø முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழில்
முருகன் குழந்தையாக பாவிக்கப்பட்டதை அறிதல்
Ø முத்துக் குமாரசாமி பாடலை
இனிய இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு :
LOT :
Ø பழந்தமிழர் எச்சங்களை
எவ்வாறு அறியலாம்?
Ø பூத்தொடுத்தல் கவிதையை
இயற்றியவர் யார்?
Ø முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்
பாடலை இயற்றியவர் யார்?
MOT
Ø கரகாட்டம் குறித்து கூறுக
Ø பூத்தொடுத்தல் கவிதையின்
கருபொருள் யாது?
Ø செங்கீரைப் பருவம் என்பது
யாது?
HOT
Ø நிகழ்கலைகளை வளர்த்தெடுக்க
நீங்கள் செய்வன யாவை?
Ø பூத்தொடுத்தல் போன்று
பெண்கள் செய்யும் இதர பணிகள் சிலவற்றைக் கூறுக.
Ø ஆண்பாற் பிள்ளைத்தமிழின்
கடைசி மூன்று பருவங்கள் குறித்துக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
Ø தமிழர் தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்
செய்யவும் மொழிவழியாகத் தங்களின் பங்களிப்பைத் தருதல்.
Ø எளிய சொற்களும், கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து கவிதை படித்தல்,
படைத்தல்.
Ø கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற மொழிநடையைச் சிற்றிலக்கியம் வாயிலாகப்
படித்தறிந்து சந்த நயத்தினைப் பிரித்துணர்ந்து சுவைத்தல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை