நாள் : 12 -09 -2022 முதல் 16-09 -2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. கம்பராமாயணம்
2. பாய்ச்சல்
3. அகப்பொருள் இலக்கணம்
அறிமுகம்
Ø மாணவர்கள் சென்று வந்த சுற்றுலாக்கள் பற்றிய தகவல்களை கூற வைத்தல்
Ø ஊர் திருவிழாக்களில் நடைபெறும் சில கலைகளை பற்றி கேட்டல்
Ø நாம் வாழ எவை எவை நமக்குத் தேவை ?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.
நோக்கம் :
Ø கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற
பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்
Ø கதைகளைப்
படித்து மையக் கருத்துணர்தல். கதை குறித்து கலந்துரையாடல்
Ø தமிழர்
தம் அக வாழ்வினை இலக்கணம் வழியாக அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு)
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø கம்பரைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் கூறல்
Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளின் பொருள் விளக்கம் கூறல்
Ø செய்யுளினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø செய்யுள் வழியாக அன்றாட வாழ்வில் கலைகளை போற்றுதல்
Ø கதையினை உணர்ந்து படித்தல்
Ø கதையின் வழியாக் கூறப்பட்டுள்ள கலையின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்
Ø பொருள் இலக்கணம் சிறப்புப் பற்றிக் கூறல்
Ø அகப்பொருள் இலக்கணம் பற்றி விளக்குதல்
Ø முதற் பொருள், கரு பொருள் பற்றி கூறல்
கருத்து வரைபடம் :
கம்பராமாயணம்
பாய்ச்சல்
அகப்பொருள் இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
கம்பராமாயணம்
Ø ஆசிரியர் : கம்பர்
o
முதலில்
இட்ட பெயர் இராமாவதாரம்
o
ஆறு
காண்டங்களை உடையது
o
கல்வியில்
பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்,
o
கம்பர்
சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சேர்ந்தவர்.
o
பாலகாண்டம்
– ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
o
அயோத்தியா
காண்டம் - கங்கைப் படலம், கங்கை காண் படலம்
o
யுத்த
காண்டம் – கும்பருணன் வதைப் படலம்
பாய்ச்சல்
Ø ஆசிரியர் - கந்தசாமி
Ø ஊர் : நாகப்பட்டிணம்,
மயிலாடுதுறை
Ø நூல்கள் : தக்கையின்
மீது நான்கு கண்கள், விசாரணை கமிஷன்,தொலைந்து போனவர்கள், சூரியவம்சம், சாந்தகுமாரி
Ø கலைஞனின் வாழ்வினைப்
படம் பிடித்துக் கூறுகிறது பாய்ச்சல்.
Ø அனுமார் வேடமிட்டவரின்
ஒப்பனைகளை கூறுகிறது
அகப்பொருள் இலக்கணம்
Ø பொருள் : ஒழுக்கமுறை
Ø அகப்பொருள் : அன்புடைய
தலைவன், தலைவி இடையிலான உறவு நிலை அகத்திணை
Ø முதற்பொருள் : நிலமும்,
பொழுதும்
Ø நிலம் : குறிஞ்சி, முல்லை,மருதம்,
நெய்தல்,பாலை
Ø பொழுது : பெரும் பொழுது,
சிறு பொழுது
Ø பெரும்பொழுது : ஆண்டின்
ஆறு கூறுகள்
Ø சிறுபொழுது : நாளின்
ஆறு கூறுகள்
Ø கருபொருள் : தெய்வம்,
மக்கள், தொழில், பூ, விலங்கு, பறை,பண் …..
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
கம்பராமாயணம்
இனிய இராகத்தில் கேட்க
தண்டலை மயில்களாட
வெய்யோன் ஒளி
பாய்ச்சல்
அகப்பொருள் இலக்கணம்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை
வாசித்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø மனப்பாடப்பகுதியினை இனிய
இராகத்தில் பாடுதல்
Ø செய்யுளின் பொருள் உணர்தல்
Ø நிகழ்கலை கலைஞரின் கலையை
உணர்தல்
Ø கலையைப் போற்றுதல்
Ø பொருள் என்பது குறித்து
அறிதல்
Ø அன்பின் ஐந்திணை என்பதனை
அறிதல்
Ø முதற்பொருளின் நிலமும்,
பொழுதும் அறிதல்
Ø அகப்பொருளின் கருபொருள்களை
உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø கம்பராமாயணம் இயற்றியவர்
யார்?
Ø பாய்ச்சல் கதையில் வரும்
கலை எது?
Ø பொருள் என்பது
_________ஐ குறிக்கும்.
MOT
Ø சரயு ஆறின் தன்மைகளாக
கம்பர கூறுவது யாது?
Ø பாய்ச்சல் கதையின் கருபொருள்
யாது?
Ø முதற்பொருள் என்பது யாது?
HOT
Ø குகன் குறித்து நீ அறிந்த
தகவல்களைக் கூறுக.
Ø பகல் வேடக் கலைஞர்களும்
அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்து நீ கூறுக.
Ø ஓராண்டின் ஆறு கூறுகள்
யாவை?
கற்றல் விளைவுகள் :
Ø அழகியலும் கலைநயமும்
இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப் படித்தல், அதனுள்
பொதிந்துள்ள பொருள்,சொல்,ஓசை நயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும் ஆர்வம் பெறல்.
Ø கதையைப் படித்து மையக் கருத்துணர்தல். கதைக் குறித்து கலந்துரையாடுதல்
Ø தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின் வாயிலாக, இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய
மக்களின் வாழ்க்கைமுறையைப் புரிந்து கொள்ளுதல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை