செங்கல்பட்டு - காலாண்டு வினாத்தாள்
செப்டம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|||||||||||||
1. |
அ. பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
1 |
|
|||||||||||||
2. |
ஆ. மணி வகை |
1 |
|
|||||||||||||
3. |
ஈ. பாடல் கேட்டவர் |
1 |
|
|||||||||||||
4. |
ஆ. இன்மையிலும் விருந்து |
1 |
|
|||||||||||||
5. |
ஈ. இலா |
1 |
|
|||||||||||||
6. |
அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது |
1 |
|
|||||||||||||
7. |
ஈ. மன்னன், இறைவன் |
1 |
|
|||||||||||||
8. |
இ. அறியா வினா, சுட்டு விடை |
1 |
|
|||||||||||||
9. |
ஆ. தளரப் பிணைத்தால் |
1 |
|
|||||||||||||
10. |
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
|
|||||||||||||
11. |
ஆ. அன்மொழித்தொகை |
1 |
|
|||||||||||||
12. |
ஈ. முத்துகுமாரசாமிப் பிள்ளைத்தமிழ் |
1 |
|
|||||||||||||
13. |
அ, எண்ணும்மை |
1 |
|
|||||||||||||
14. |
இ. செம்மை + கீரை |
1 |
|
|||||||||||||
15. |
இ. வயிறு |
1 |
|
|||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
||||||||||||||||
16. |
காலை நேரம் தொடர்வண்டியில்
வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர்
.அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார்
.எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் |
2 |
|
|||||||||||||
17. |
அ. பாரதியார் எவ்வாறு போற்றப்படுகிறார்? ஆ. எதன் மூலம் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளைப் பெற்றிருக்கிறோம்? |
1 1 |
|
|||||||||||||
18. |
·
வருக, வணக்கம் ·
வாருங்கள். ·
அமருங்கள், நலமா? ·
நீர் அருந்துங்கள். |
2 |
|
|||||||||||||
19 |
v மரம் வளர்ப்போம்;காற்றின் பயன் அறிவோம் v மரம் நடுவோம்;காற்றை பெறுவோம் |
2 |
|
|||||||||||||
20. |
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு
எனலாம். |
2
|
|
|||||||||||||
21
|
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2
|
|
|||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 2 |
||||||||||||||||
22 |
v உடுப்பதூஉம் உண்பதூஉம் – இன்னிசை அளபெடை. v செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
இன்னிசை அளபெடை |
1 1 |
|
|||||||||||||
23 |
அ. புற்கட்டு
ஆ) ஆட்டுமந்தை |
2 |
|
|||||||||||||
24 |
கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ கிளர் – பகுதி, த் – சந்தி, த்(ந்) – ந் ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ- பெயரெச்ச விகுதி |
2 |
|
|||||||||||||
25. |
அ) உள்ளளவும் நினை ஆ) மூன்று நாள் |
2 |
|
|||||||||||||
26. |
அ. கொடுப்பதற்கு கோடு இடக்கூடாது. ஆ. விதி அவனை வீதிக்கு கொண்டு வந்து விட்டது. |
2 |
|
|||||||||||||
27. |
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக்
காது கேட்குமா? |
2 |
|
|||||||||||||
28.
|
மன்றல் – திருமணம், மருள் – மயக்கம்,
வியப்பு |
2
|
|
|||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 1 |
||||||||||||||||
29 |
Ø திருக்குறள் Ø சங்க காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை Ø கையுறை பாவைக் கூத்து, பொம்மலாட்டம் |
3
|
|
|||||||||||||
30
|
சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா? மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது இருப்பிடம் எங்கே? சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே? மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம் சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர். மின் காற்று :
விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப் பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம் கொள்வேன் சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும் விரும்பும் விதமாக இருப்பேன். மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை. என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம். |
3 |
|
|||||||||||||
31. |
·
காலமாற்றத்தால்
வீட்டின் முன்புறம் திண்ணை வைத்து யாரும் வீடு கட்டுவதில்லை. காரணம் சமூக விரோதிகள்,
சமூகத்திற்கு தீங்கு விளைவிப்போர் இரவில் தங்கும் இடமாக மாறி வருவதால் இவை காணப்படுவதில்லை. ·
திருவிழாக்காலங்களில்
தங்களுடைய உறவினர்களை அழைத்து விருந்து படைப்பதே இன்றைய விருந்தோம்பலாக மாறியுள்ளது. ·
முன் பின் அறிமுகம்
இல்லாதவர்களை இன்றைய சூழலில் யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை. |
3 |
|
|||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||||||||||||||
32 |
v
அன்னை மொழியானவள் v
அழகான செந்தமிழானவள் v
பழமைக்கு பழமையாய்
தோன்றிய நறுங்கனி v
பாண்டியன் மகள் v
திருக்குறளின்
பெருமைக்கு உரியவள் v பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள் |
3 |
|
|||||||||||||
33. |
v தொழில் செய்வதற்கு தேவையான கருவி,அதற்கு ஏற்ப காலம்,செயலின்
தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும்
பொருத்தமாக அமைகிறது. v மனவலிமை,குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல்,நூல்களைக்
கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும். v இயற்கையான நுண்ணறிவு,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும்
நடைபெறாது v
ஒரு செயலைச்
செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து
தான் நாம் செயல்பட வேண்டும். |
3
|
|
|||||||||||||
34. |
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. |
|
|
|||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||||||||||||||
35 |
|
3 |
|
|||||||||||||
36. |
அணி
: உவமை அணி. உவமை அணியில்
உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய
மூன்றும் வெளிப்படையாக வரும். உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது உவமேயம் : கோலோடு நின்றான் இரவு உவமஉருபு : போலும் விளக்கம் : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான
ஆயுதங்களைக்கொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம். |
3 |
|
|||||||||||||
37 |
Ø
ஆற்றுநீர் பொருள்கோள் Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது. Ø பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. |
3 |
|
|||||||||||||
பகுதி
– 4 |
||||||||||||||||
38 |
அ)
|
5 |
|
|||||||||||||
38 |
ஆ.
முன்னுரை : முல்லைப்பாட்டில்
உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி
மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம்
எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர்
நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம்
கொண்ட அரும்புகள். முதுப் பெண்கள்
மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர். இது விரிச்சி என அழைக்கப்படும் ஆற்றுப்படுத்துதல் : இடைமகள் பாசியால் வாடிய இளங்கன்றை காணல் உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல் முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன்
வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர் முடிவுரை : இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப்
பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம். |
5 |
|
|||||||||||||
39 |
சேலம் 03-03-2021 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
5 |
|
|||||||||||||
39 |
ஆ. குறிப்புச்சட்டகம் நூலின் தலைப்பு நூலின் மையப் பொருள் மொழிநடை வெளிப்படுத்தும் கருத்து நூலின் நயம் நூல் கட்டமைப்பு சிறப்புக்கூறு என படிநிலைகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
|||||||||||||
40 |
ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை
எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி கலை
என் சிறப்பைப் பற்றி எழுது என்றது கலைஞர்
என் கலையைப் பற்றி எழுது என்றார் நான்
எழுதுகிறேன் கலையே உயிர் என்று |
5 |
|
|||||||||||||
41. |
படிவத்தில் அனைத்துப் பகுதிகளும் எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
5 |
|
|||||||||||||
42 |
அ. 1.
தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான
இடத்தில் வைத்துக்கொள்வேன். 2.
குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3.
உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன். 5.
வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன். இவைப் போன்று ஏற்புடைய விடைகள் எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
5 |
|
|||||||||||||
42 |
ஆ. மொழிபெயர்க்க மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப்
பற்றி சில வார்த்தைகளைக் கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும்
சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம்
வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத்
தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில்
மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும்
நன்றி. |
5 |
|
|||||||||||||
|
பகுதி
– 5 |
|
|
|||||||||||||
43 |
அ. வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. Ø மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம். முன்னுரை, பொருள், முடிவுரை
என உட்தலைப்புகள் இட்டு ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
8 |
|
|||||||||||||
|
ஆ.
நிகழ்கலை வடிவங்கள் : சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள்.
பழந்தமிழ் மக்களின் கலை,அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும்
நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன. நிகழும் இடங்கள் : நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும்.
கோயில் திருவிழாக்களில் இவ்வகை கலைகளை நாம் காணலாம். ஒப்பனைகள் : பல்வேறு
விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர்.
தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளை காணலாம். சிறப்பு, பழமையும் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை
அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறை கூத்து, தெருக்
கூத்து போன்றவை முன்னோர்களின் பழமை வாய்ந்த
கலைகள் ஆகும். அருகி வரக் காரணம்: ·
நாகரிக வளர்ச்சி ·
கலைஞர்களுக்கு
போதிய வருமானம் இல்லை ·
திரைத்துறை வளர்ச்சி ·
அறிவியல் தொழில்
நுட்ப வளர்ச்சி நாம் செய்ய வேண்டுவன: ·
நமது இல்லங்களில்
நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது. ·
நமது ஊர் கோவில்
திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது. ·
ஊடகங்களில் இக்கலைகளைப்
பற்றி விளம்பரப்படுத்துவது. |
8 |
|
|||||||||||||
44. |
அ.
முன்னுரை : பசியென்று
வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø
அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான். Ø
அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார். Ø
கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி
உறங்கினான். Ø
ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று
வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல்
போற்றுதலுக்கு உரியது. |
8 |
|
|||||||||||||
|
ஆ) குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி
இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில்
வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன்
பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின்
அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன்
இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்கு படிக்கத்
தெரியாது என கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை ·
மேரிக்கு படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. ·
ஒரு நாள் மிஸ்
வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு
வர வேன்டும். ·
மேரிக்கு புதிய
நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள்
நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள்
கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்த
பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் ·
மிஸ்வில்சன்
மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி ·
அவளின் மேல்படிப்பு
செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக
டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு
படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும்
இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு
மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப்
புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக்
கண்டோம். |
8 |
|
|||||||||||||
45 |
அ.
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண்
தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை
தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச்
செய்தார். Ø
வீரமாமுனிவர்
தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø
தமிழ் தாத்தா
உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான
மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை
கொண்ட மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø
தமிழ் மூன்று
சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். மேற்கண்ட குறிப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்குக |
8 |
|
|||||||||||||
45 |
ஆ. குறிப்புச் சட்டம்
முன்னுரை : விண்வெளிக்கு
பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில்
காணலாம். பிறப்பும், கல்வியும் : பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961
இல் பிறந்தார். பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி கல்வி : கர்னலில்
பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் ·
டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம். ·
. 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம். ·
பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்றார். விண்வெளிப் பயணம்: ·
1995 இல் நாசா
விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம்
செய்தார், ·
சுமார் 372 மணிநேரம்
விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார். வீர மரணம் : ·
2003இல் ஜனவரி
16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்
107 இல மீண்டும் பயணம் செய்தார். ·
அந்த விண்கலம்
ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச்
சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர் விருது: ·
நியூயார்க் நகரின்
ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ·
பிப்ரவரி 1ந்
தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ·
2011 முதல் வீரதீர
சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை
உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும். மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
8 |
|
|||||||||||||