அன்பார்ந்த
ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். எமிஸ் இணையதளம்
மூலம் சென்ற படித்த மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்ணை பதிவு செய்ய வேண்டும்
என கூறப்பட்டுள்ளது. அந்த எமிஸ் இணைய தளத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு பதிவேற்றம் செய்ய
வேண்டும் என்பதனை இந்த காணொளி வாயிலாக கூறப்பட்டுள்ளது. உங்களுடைய எமிஸ் எண் ( 8 இலக்கம்
) மற்றும் கடவுச்சொல் ( தொலைபேசி முதல் நான்கு எண் @ உங்களுடைய பிறந்த வருடம் ) இவற்றைக்
கொண்டு உள்ளீடு செய்து நாம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படிநிலைகள்:-
1.
முதலில் EMIS | Tamil Nadu Schools
(tnschools.gov.in) என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
2.
திரையில் இவ்வாறு தோன்றும் அதில் உங்களின் எமிஸ் எண் மற்றும் கடவுச்சொல் உள்ளீடு செய்யுங்கள்
User
name : 00000000 ( eight digit emis number )
Password
: 0000@1111 ( first four digit mobile number and @ after your birth year )
3. பின்னர் தோன்றும் திரையில் MY PROFILE என்பதன் கீழ் ACADEMIC SCORES என்று இருக்கும். அதனை CLICK ( சொடுக்கு ) வதன் மூலம் மற்றொரு திரைத் தோன்றும்.
4. பின்னார் தோன்றும் ACADMIC YEAR என்பதில் 2021 – 2022 என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
5. அடுத்தது EXAM TYPE என்பதில் ANNUAL EXAM என்பதனை தேர்வு செய்க.
6. CLASS எனபதில் அவரவர்களுடைய CLASS தோன்றும் அதனை தேர்வு செய்ய வேண்டும்.
7. SECTION என்பதில் எந்த SECTION என்பதனை தேர்வு செய்து SUBMIT என்பதனை கொடுக்கவும்.
8. பின்னர் மாணவர்களின் பெயர் பட்டியல் தோன்றும்.
9. ஒவ்வொரு மாணவருக்கும் எதிரே உள்ள ACTION என்பதில் உள்ள PENCIL ICON மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் உள்ளீடு செய்யலாம்.
இந்த முறையில் நீங்கள் மதிப்பெண் உள்ளீடு செய்து அந்த பணியினை நிறைவு செய்யலாம்.
நன்றி வணக்கம்.
தமிழ்விதை
கல்விவிதைகள்