9TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 4TH WEEK

   

நாள்                 :           22-08-2022 முதல்  26-08-2022        

மாதம்                        ஆகஸ்ட்          

வாரம்               :             நான்காம் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                                   1.  வல்லினம் மிகா இடங்கள்

அறிமுகம்                 :

Ø  முன்னர் கற்ற வல்லினம் மிகும் இடங்களிலிருந்து சில வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி

நோக்கம்                                   :

Ø  வல்லினம் மிகா இடங்களை அறிந்து பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  வல்லினம் பற்றி வினாக்களைக் கேட்டல்

Ø  வல்லினத்தில் மிகா எழுத்துகளைப் பற்றி கூறுதல்

Ø  வல்லினம் மிகா இடங்களை விளக்குதல்

Ø  வல்லினம் ஏன் மிகக் கூடாது என்பதனை பொருள் விளக்கத்துடன் கூறல்

கருத்து  வரைபடம்                   :

வல்லினம் மிகா இடங்கள்


விளக்கம்  :

( தொகுத்தல் )

வல்லினம் மிகா இடங்கள்

Ø  அது,இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் மிகாது

Ø  எது கண்டாய்? எவை தவறு? – இவ்வினாக்களின் பின் மிகாது

Ø  எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

Ø   மூன்றாம்,ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது

Ø  விளித் தொடர்களில் வல்லினம் மிகாது

Ø  பெயெரெச்சத்தில் வல்லினம் மிகாது

Ø  இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

Ø  படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது

Ø  வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

Ø  வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

Ø  எட்டு,பஹ்து தவிர பிற எண்ணுப்பெயர்களில் மிகாது

Ø  உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  வல்லினம் பற்றி அறிதல்

Ø  வல்லினங்களின் முக்கியத்துவத்தை அறிதல்

Ø  வல்லினம் மிகா இடங்களை அறிந்து தொடர்களைப் பயன்படுத்துதல்

Ø  வல்லினம் மிகா இடங்களின் இலக்கணங்களை அறிதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  வல்லின எழுத்துகள் யாவை?

Ø  வல்லினத்தில் எவை மிகும், மிகா இடங்களில் வரும் எழுத்துகள்?

MOT

Ø  வினைத்தொகை என்பது யாது? அதில்  வல்லினம் மிகுமா?

Ø  பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது என்பதற்கு சான்று தருக

HOT

Ø  தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களை கண்டறிந்து அதன் இலக்கணம் அறிக.

o   வங்கி கடன்

o   பழங்களை பறிக்காதீர்கள்

o   திட்ட குழு

o   அரசு ஆணை பிறப்பித்தது

o   சிறப்பு பரிசு

 

கற்றல் விளைவுகள்                  :

Ø  வல்லினம் மிகும் மிகா இடங்களை அறிந்து ஒற்றுப் பிழையின்றி எழுதுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post