8TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST - 5TH WEEK

 

நாள்                :           29- 08 -2022 முதல்  02- 09-2022       

மாதம்                :           ஆகஸ்ட்

வாரம்               :             ஐந்தாம் வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. புத்தியைத் தீட்டு

அறிமுகம்                 :

Ø  அறிவே ஆற்றல் என்பதனை குறிக்கும் கதைகளைக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  அறிவினாலும், அன்பினாலும் பிறரை வெல்லும் வழிதனை அறிதல். அறிவே சிறந்த ஆற்றல் என்பதனை உணருதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  மாணவர்களையும் பின் தொடர்ந்து பாட வைத்தல்

Ø  பாடலின்  பொருள் விளக்கம் கூறல்

Ø  அன்றாட வாழ்வில் அறிவின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறல்

Ø  பாடலின் வழியே அறக்கருத்துகளை அறிதல்

கருத்து  வரைபடம்                   :

புத்தியைத் தீட்டு



 

விளக்கம்  :

( தொகுத்தல் )

புத்தியைத் தீட்டு

Ø  ஆசிரியர் குறிப்பு :

o    பெயர் : ஆலங்குடி சோமு

o    திரையிசை பாடலாசிரியர்

o    கலைமாமணி விருது பெற்றவர்

o    அறிவே சிறந்த ஆற்றல்

o    அறிவும், உழைப்புமே மனிதனை வாழ்வில் உயரச் செய்யும்.

o    கோபம் வரும் போது வன்முறைக்கு செல்லாமல் அறிவை பயன்படுத்த வேண்டும்.

o    பகைவருக்கும் அன்பு காட்ட வேண்டும்.

o    மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்க கோயில்

o    இருப்பது சில காலம். இதில் அகம்பாவம் தேவையில்லாத ஒன்று

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்



·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  பாடலில் புதிய சொற்களுக்கு அகராதிக் கண்டு பொருள் காணுதல்

Ø  பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பாடல் வழியே அறிவின் சிறப்பைப் பெறுதல்

Ø  பாடலில் உள்ள நயங்களை அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  இப்பாடலை எழுதியவர் ________

Ø  தடம் என்பதன் பொருள்_______

MOT

Ø  மாணிக்க கோயில் என்று கவிஞர் எதனை குறிப்பிடுகிறார்?

Ø  பகைவரிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என கவிஞர் கூறுகிறார்?

HOT

Ø  உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

தொடர் பணி                            :

Ø   பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   அறிவின் பெருமையை கூறும் பழமொழிகளை எழுதி வருக ________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post