நாள் : 22- 08 -2022 முதல் 26 - 08-2022
மாதம் : ஆகஸட்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கல்வி அழகே அழகு
அறிமுகம் :
Ø ஏதேனும்
முக்கிய விழாக்கள், திருமணங்கள், உங்களின் பிறந்த நாள் விழா இவற்றை நீங்கள் எவ்விதம்
கொண்டாடுவீர்கள்?
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø நீதி
நூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்
Ø செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø மாணவர்களையும்
பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்
Ø செய்யுளினை
இனிய இராகத்தில் பாடுதல்
Ø செய்யுளின்
பொருள் விளக்கம் கூறல்
Ø அன்றாட
வாழ்வில் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் :
கல்வி அழகே அழகு
விளக்கம் :
( தொகுத்தல் )
கல்வி அழகே அழகு
Ø ஆசிரியர்
குறிப்பு :
o பெயர்
: குமரகுருபரர்
o இயற்றிய
நூல்கள்
§ கந்தர்
கலிவெண்பா
§ கயிலைக்
கலம்பகம்
§ சகலகலாவல்லி
மாலை
§ மீனாட்சியம்மை
பிள்ளைத் தமிழ்
§ முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத் தமிழ்
Ø ஒளிரும்
மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன் தேவையில்லை
Ø கல்வி
கற்றவருக்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை
வாசித்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø செய்யுளின் புதிய சொற்களுக்கு
அகராதிக் கண்டு பொருள் காணுதல்
Ø செய்யுளினை இனிய இராகத்தில்
பாடுதல்
Ø பாடல் வழியே கல்வியின்
சிறப்பைப் பெறுதல்
Ø செய்யுள் பொருள் விளக்கம்
அறிந்து வாழ்வில் நடைமுறைப்படுத்துதல்
மதிப்பீடு :
LOT :
Ø கற்றவருக்கு அழகு தருவது________
Ø கலனல்லால் – என்பதனை
பிரித்துக் கூறுக_______
MOT
Ø அழகு என்னும் சொல் அமையுமாறு
தொடர் கூறுக
Ø யாருக்கு அழகு செய்ய
வேறு அணிகலன்கள் தேவையில்லை?
HOT
Ø கல்வியின் பயன்களாக நீங்கள்
கருதுவனவற்றை கூறுக.
Ø கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகள்
சிலவற்றைக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
Ø 807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற
பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில
குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதி
வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை