8TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST - 3RD WEEK

 

நாள்                :           16 - 08 -2022 முதல்  19 - 08-2022       

மாதம்                :           ஆகஸட்

வாரம்               :             மூன்றாம்  வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. தலைக்குள் ஓர் உலகம்

                                                                            2. எச்சம்

அறிமுகம்                 :

Ø  உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகளை கூறுக

Ø  முன்னர் கற்ற வினைமுற்று பாடத்திலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  மூளையின் செயல்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் அறிதல்

Ø  எச்சம் மற்றும் அதன் வகைகளை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  மூளையின் அமைப்பு பற்றி அறிதல்

Ø  மூளையின் உணவு பற்றி கூறுதல்

Ø  மூளையும்,உடல் இயக்கமும்  பற்றி அறிதல்

Ø  மூளையின் வலது இடது மற்றும் அதன் உணர்வுகளை அறிதல்

Ø  எச்சம் பற்றி கூறல்

Ø  எச்சம் அதன் வகைகளைக் கூறல்

கருத்து  வரைபடம்                   :

தலைக்குள் ஓர் உலகம்




எச்சம்

 

விளக்கம்  :

தலைக்குள் ஓர் உலகம்

Ø  இந்த உலகத்தில் சிக்கலான மற்றும் விந்தையான பொருள் மனித மூளை

Ø  நியூரான்களின் வலைப்பின்னல் தான் புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம்.

Ø  மூளை, முதுகுத் தண்டில் இருந்து முளைக்கிறது

Ø  உள்மூளை, நடுமூளை, பின்மூளை. முன்மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன.

Ø  உடம்பிலுள்ள சிறுமூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

Ø  மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படு கிறது

Ø  நம் மொழி அறிவு கூட இடது பகுதியே

Ø  உணர்ச்சிகளின் பிறப்பிடம் மூளை தான்.

Ø   சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒரு முறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்.

 

எச்சம்

Ø  முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

Ø  இது பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

Ø  பெயரெச்சம் இருவகைப்படும்

o   தெரிநிலை பெயரெச்சம்

o   குறிப்பு பெயரெச்சம்

Ø  வினையெச்சம் இரு வகைப்படும்

o   தெரிநிலை வினையெச்சம்

o   குறிப்பு வினையெச்சம்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  மூளையின் முக்கியத்தும் அறிதல்

Ø  மூளையின் செயல்பாடுகள் சிறப்புகள் பற்றி அறிதல்

Ø  எச்சங்களைப் பற்றி அறிதல்

Ø  எச்சங்களின் வகைகளை அறிதல்

Ø  எச்சங்களின் வகை அறிந்து அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  உலகிலேயே சிக்கலான முக்கியமான பொருள்________

Ø  முற்றுபெறாத வினைச்சொல் _______

MOT

Ø  மனித மூளையின் வலது,இடது செயல்பாடுகளை கூறுக

Ø  எச்சங்களின் வகைகளைக் கூறுக

HOT

Ø  மனித மூளையின் அமைப்பினைக் கூறுக.

Ø  பள்ளி செயல்பாடுகளில் பயன்படும் எச்சவகைச் சொற்களை வகைப்படுத்துக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

Ø  எச்சங்களின் வகைகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   மூளையின் அமைப்பினை படம் வரைந்து வண்ணம் தீட்டுக.

Ø   அண்றாட வாழ்வில் பயன்படும் எச்ச சொற்களை வகைப்படுத்தி எழுதி வருக

 ________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post