நாள் : 22-08-2022 முதல் 26-08-2022
மாதம் : ஆகஸட்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
அறிமுகம் :
Ø உங்கள் வீட்டின் அருகில் யாரேனும் பிரச்சனை செய்தால்
என்ன செய்வீர்கள்?
Ø இருவருக்கு நடக்கும்
பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மையம் எது?
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø சொற்கள் மற்றும் தொடர்களில்
பயின்று வரும் வினைமுற்றுகளை அறிந்து பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்.
Ø விதி
விளக்க முறை மூலம் இலக்கணப் பகுதியினைக் கற்பித்தல்
Ø வழக்கு என்பதனை விளக்குதல்
Ø வழக்கின் வகைகளை எடுத்துக்காட்டுடன்
விளக்குதல்
Ø இயல்பு வழக்கு – இலக்கணமுடையது,
இலக்கணப் போலி, மரூஉ
Ø தகுதி வழக்கு – இடக்கரடக்கல்,மங்கலம்,குழூஉக்குறி
Ø போலி – முதற் போலி, இடைப்போலி,
கடைப்போலி
நினைவு வரைபடம் :
வழக்கு
விளக்கம் :
(
தொகுத்தல் )
வழக்கு
Ø எழுத்திலும்
பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு
எனப்படும்.
Ø வழக்கு
– இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரு வகைப்படும்
Ø இயல்பு
வழக்கு – ஒரு பொருளை இயல்பான சொற்களால் குறிப்பிடுவது
o இலக்கணமுடையது
§ இலக்கண
நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல்
o இலக்கணப்
போலி
§ பெரும்பாலும்
சொற்களின் பகுதி முன்பின் மாறி இடம் பெறும்
§ எ.கா
: கிளை நுனி - நுனிக்கிளை
o மரூஉ
§ இலக்கண
நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள்
·
கோயம்புத்தூர் - கோவை
Ø தகுதி
வழக்கு – சொல்ல தகுதியற்ற சொற்களை சொல்ல தகுந்த சொற்களாக கூறல்
o இடக்கரடக்கல்
§ பிறரிடம்
வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல்
ஆகும்.
§ எ.கா.
கால் கழுவி வந்தேன்
o மங்கலம்
§ மங்கலமில்லாத
சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்
§ எ.கா
: விளக்கை அணை – விளக்கை குளிரவை
o குழூஉக்குறி
§ ஒரு
குழுவினார் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும்
சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
§ எ.கா
: பொன்னை பறி எனல்
Ø போலி
– சொல்லின் முதல்,இடை,இறுதியில் ஓர் எழுத்துக்கு பதிலாக வேறொரு எழுத்து வந்து அதே பொருளை
தருவது
o முதற்
போலி – மய்யம் – மையம்
o இடைப்
போலி - அரயர் – அரையர்
o கடைப்போலி
– அறம் - அறன்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o வழக்கு என்பதனை அறிதல்
o சொல்லட்டைகள் மூலம் வழக்கின்
வகைகளை அறிதல்
o இயல்பு வழக்கு, தகுதி
வழக்கு பற்றி அறிதல்
o இயல்பு வழக்கு, தகுதி
வழக்கு – இவற்றின் வகைகளை உரிய எடுத்துக்காட்டுகளுடன் அறிதல்
o போலியைப் பற்றி அறிதல்
o போலியின் வகைகளை உரிய
எடுத்துக்காட்டுகளுடன் அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø வழக்கு
என்பது யாது?
Ø இயல்பு
வழக்கு என்றால் என்ன?
MOT
Ø தகுதி
வழக்கு என்றால் என்ன?
Ø தகுதி
வழக்கின் வகைகளை எடுத்துக்காட்டுடன் கூறுக
HOT:
Ø மூவகை
போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன?
Ø மரூஉ
சொற்களால் வழங்கப்படும் ஊர்களின் பெயர்களைக் கூறுக
கற்றல் விளைவுகள் ::
Ø 710 – பாடப்பொருள் ஒன்றினை நுட்பமாக
நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø இயல்பு வழக்கு, தகுதி வழக்கு இரண்டிற்கும் படத் தொகுப்பு உருவாக்குக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை