6TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST - 4TH WEEK

  

நாள்                :           22-08-2022 முதல்  26-08-2022       

மாதம்                :           ஆகஸட்

வாரம்               :           நான்காம் வாரம்                                    

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :       1. மொழி முதல் இறுதி எழுத்துகள்

அறிமுகம்                                 :

Ø  எழுத்துகளின் வகை தொகைகளை வினாக்கள் மூலம் கேட்டு பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள், எழுத்துகள் அட்டவணை, எழுத்து அட்டை

நோக்கம்                                   :

Ø  தமிழில் பிழையின்றி எழுதுதல்.

Ø  மொழிக்கு முதலில் , இறுதியில், இடையில் வரும் எழுத்துகளை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  மொழி என்றால் என்ன என்பதனை விளக்குதல்

Ø  எழுத்துகள் அட்டவணை மற்றும் எழுத்து அட்டைகளைக் கொண்டு பாடப்பகுதியினை விளக்குதல்

Ø  மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், வராத எழுத்துகள் பற்றி கூறல்

Ø  மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள், வராத எழுத்துகள் கூறல்

Ø  மொழிக்கு இடையில் வரும் எழுத்துகளைக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

மொழி முதல், இறுதி எழுத்துகள்



 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

மொழி முதல் இறுதி எழுத்துகள்

Ø  மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள்

o   க,ச,த,ந,ப,ம  - இவ்வரிசையின் எல்லா உயிர் மெய்யெழுத்துகள்

o   ங,ஞ,ய,வ – இவற்றுள் சில மட்டும்.

o   ங – இந்த ஓர் எழுத்து மட்டும் வரும். ( ஙனம் )

o   ஞ – ஞ,ஞா,ஞெ,ஞொ

o   ய – ய,யா,யு,யூ,யோ,யெள

o   வ – வ,வா,வி,வீ,வெ,வே,வை,வெள

Ø  மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்

o   மெய்யெழுத்து – 18

o   ட,ண,ர,ல,ழ,ள,ற,ன

o   ஆய்த எழுத்து

o   ங,ஞ,ய,வ – வரிசையில் குறிப்பிட்ட முதல் எழுத்துகளை தவிர பிற எழுத்துகள் வராது

Ø  மொழி இறுதி எழுத்துகள்

o   உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.

o   ஆய்த எழுத்து

o   க்,ங்,ச்,ட்,த்,ப்,ற்

o   ங -வரிசை

o   எ கர வரிசையில் – கெ முதல் னெ

o   ஒகர வரிசையில் நொ தவிர பிற எழுத்துகள் வராது

Ø  சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்

o   மெய்யெழுத்துகள் – 18

o   உயிர் எழுத்துகள் – 12

o   ஆய்த எழுத்து      - 01

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்



Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்




செயல்பாடு :

( மாணவர் செயல்பாடு )

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   முன் வகுப்பில் கற்றதைக் கொண்டு எழுத்துகளை அடையாளம் காணுதல்

Ø   மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளை அடையாளம் காணல்

Ø   மொழிக்கு முதலில் வராத எழுத்துகளை அடையாளம் காணல்

Ø   மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளை அடையாளம் காணல்

Ø   மொழிக்கு இறுதியில் வராத எழுத்துகளை அடையாளம் காணல்

Ø   சொல்லின் இடையில் வரும் எழுத்துகளை அடையாளம் காணல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  உயிர் எழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Ø  மெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

MOT :

Ø  மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளை கூறுக.

Ø  மொழிக்கு இறுதியில் வராத எழுத்துகள் எவை?

HOT

Ø  ஆய்த எழுத்து ஏன் மொழிக்கு முதலிலோ? இறுதியிலோ வருவதில்லை?

Ø  சொல்லின் இடையில் வரும் எழுத்துகளுக்கு சில எடுத்துக்க்காட்டுகளைக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø   614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல், அகராதியைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்துக் கொள்ள முயலுதல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  மொழிக்கு முதலில், இறுதியில் வரும் எழுத்துகளைக் கண்டு பத்து சொற்கள் எழுதி வருதல்

_______________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post