10TH - TAMIL - WEEKLY QUESTION - A TYPE - 29-08-22

 

29-08-2022 TO 02-09-2022

பத்தாம் வகுப்பு - தமிழ்

வாரத்தேர்வு வினாத்தாள்

A-TYPE - மீத்திற மாணவர்களுக்கானது


பத்தாம் வகுப்பு

தமிழ்  – வாரத்தேர்வு - 11

பாடம் : இயல் : 5                                                                          மதிப்பெண்கள் : 40

I) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                     5×2=10

1. பிரான்சு தேசிய நூலகத்தில் அச்சிடப்பெறாத தமிழ் நூல்கள் எவை?

2..தணிந்தது – பகுபத உறுப்பிலக்கணம் தருக

3.. கா.ப. செய்கு தம்பி பாவலர் “ சதாவதானி “ பட்டம் பெற்ற நிகழ்வினைக் கூறுக.

4.. குறிப்பு விடைகள் யாவை?

5. உரையாடலில் இடம் பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். (…………………….)
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (…………………….)
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (…………………….)

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                      4×3=12

5. எதிர் நிரல் நிறை பொருள்கோளை எடுத்துக்காட்டு விளக்குக.

6. எதிர்காலத்தில் நீ பயில விரும்பும் கல்விக் குறித்து கூறுக. அதனால் சமூகம் பெறும் பயன் யாது?

7. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் – சுருக்கமாக எழுதுக

8. வினா, விடை வகைகளை விளக்குக

IV) அடிமாறாமல் எழுதுக:-                                                                         2×3=6

.8. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் நீதி வெண்பா பாடல்

9. “ புண்ணிய புலவீர் “ எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடல்

IV) விரிவான விடை எழுதுக:-                                                                   1×7=7

10 ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட

 புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின்

 கருத்துகளை விவரிக்க.

V)  படிவம் – நிரப்புக:-                                                                1×5=5

11 விழுப்புரம், பாரதி நகர், தேரடி வீதி. கதவிலக்க எண் 57 இல் வசிக்கும் தமிழன்பனின் மகள்

 எழிலரசி  அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர்கிறார். தேர்வர் தம்மை

 எழிலரசியாக நினைத்து படிவம் நிரப்புக.

வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post