10TH - TAMIL - WEEKLY QUESTION - C TYPE - 29-08-22

  

29-08-2022 TO 02-09-2022

பத்தாம் வகுப்பு - தமிழ்

வாரத்தேர்வு வினாத்தாள்

C-TYPE - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கானது


பத்தாம் வகுப்பு

தமிழ்  – வாரத்தேர்வு

பாடம் : இயல் : 5                                                                          மதிப்பெண்கள் : 40

I) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                     4×2=8

1.“ கழிந்த கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

2..செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

3.. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக

4.. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

  இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம்

  இருக்கிறதா?இல்லையா?

  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                      3×3=9

5. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

6. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

7. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

            இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

III) அடிமாறாமல் எழுதுக:- ( ஒரு பாடல் மட்டும் )                                          1×3=3

.8. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் நீதி வெண்பா பாடல்

9. “ புண்ணிய புலவீர் “ எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடல்

IV) நிற்க அதற்குத் தக:-                                                               1×5=5

10. பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

V)  படிவம் – நிரப்புக:-                                                                1×5=5

11. விழுப்புரம், பாரதி நகர், தேரடி வீதி. கதவிலக்க எண் 57 இல் வசிக்கும் தமிழன்பனின் மகள் எழிலரசி  அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர்கிறார். தேர்வர் தம்மை எழிலரசியாக நினைத்து படிவம் நிரப்புக

V)  12) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக,                                      1×5=5

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

வேற்றுமைத் தொடர்

சொல்

அம்மா சொன்னார்

 

சொல்லிச் சென்றார்

 

கதையைச் சொன்னார்

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

 

பார்

துளிர் பார்த்தாள்

 

பார்த்துச் சிரித்தாள்

 

துளிருடன் பார்த்தேன்

 

VII) கட்டுரை எழுதுக:-                                                                1×5=5

13 “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ – குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு ஒப்புதல் பெற வேண்டி கடிதம் எழுதுக.


வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post