10TH - TAMIL - WEEKLY QUESTION - B TYPE - 29-08-22

 

29-08-2022 TO 02-09-2022

பத்தாம் வகுப்பு - தமிழ்

வாரத்தேர்வு வினாத்தாள்

B-TYPE - நடுநிலை மாணவர்களுக்கானது


பத்தாம் வகுப்பு

தமிழ்  – வாரத்தேர்வு

பாடம் : இயல் : 5                                                                          மதிப்பெண்கள் : 40

I) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                     5×2=10

1.  “ கழிந்த கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

2.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

3..அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக

3.. கா.ப. செய்கு தம்பி பாவலர் “ சதாவதானி “ பட்டம் பெற்ற நிகழ்வினைக் கூறுக.

4.. வெளிப்படை விடைகள் யாவை?

5. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.
காமராசர் நகர் எங்கே இருக்கிறது?
இந்த வழியாகச் செல்லுங்கள்என்று விடையளிப்பது.

III) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                      4×3=12

6. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

7. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

8.                             ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

          ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு ( translation ) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது ( Interpreting ) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளருக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் ( Headphone )  கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன்  உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.

            இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

9.  விடையின்  வகைகளை விளக்குக

IV) அடிமாறாமல் எழுதுக:-                                                                         2×3=6

10. “ அருளைப் பெருக்கி “ எனத் தொடங்கும் நீதி வெண்பா பாடல்

11. “ புண்ணிய புலவீர் “ எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடல்

IV) விரிவான விடை எழுதுக:-                                                                   1×7=7

12 ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

V)  படிவம் – நிரப்புக:-                                                                1×5=5

13 விழுப்புரம், பாரதி நகர், தேரடி வீதி. கதவிலக்க எண் 57 இல் வசிக்கும் தமிழன்பனின் மகள் எழிலரசி  அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர்கிறார். தேர்வர் தம்மை எழிலரசியாக நினைத்து படிவம் நிரப்புக.

வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post