10TH - TAMIL - SUPPLYMENTRY EXAM QUESTION - AUGUST 2022 - PDF


 

மாதிரி பொதுத் தேர்வு  வினாத்தாள் 2022 - 2023

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

 

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                                                                                   15×1=15

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது.

அ) இலையும் சருகும்      ஆ) தோகையும் சண்டும்             இ) தாளும் ஓலையும்                  ஈ) சருகும் சண்டும்

2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை                    ) உவமைத்தொகை    ) அன்மொழித்தொகை  ) உம்மைத்தொகை

3 “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்         ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்         இ) மருத்துவரிடம் நோயாளி

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

4 . “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்                        ஆ) அறிவியல்                            இ) கல்வி                                  ஈ) இலக்கியம்.

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்                ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                        ஈ) அங்கு வறுமை இல்லாததால்

6. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________

அ) நாட்டைக் கைப்பற்றல்           ஆ) ஆநிரை கவர்தல்                  இ) வலிமையை நிலைநாட்டல்  

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

7 சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________

அ) அகவற்பா                  ஆ) வெண்பா                 இ) வஞ்சிப்பா                 ஈ) கலிப்பா

8. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி___________

) உவமை       ) தற்குறிப்பேற்றம்        ) உருவகம்     ) தீவகம்

9. ‘ சாகும் போது தமிழ் படித்துச் சாக வேண்டும்    - என்றன்

    சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று கூறியவர்..

) திரு.வி.க                  ) க.சச்சிதானந்தன்                   ) நம்பூதனார்                ) தனிநாயக அடிகள்

10. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்             ஆ) கம்பர்          இ) தேவநேயப் பாவாணர்          ஈ) வைரமுத்து

11. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்             ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசு                 ஈ) புளிமா தேமா பிறப்பு

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

‘ காற்றே,வா

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா

இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு “

12.’ மயலுறுத்து ‘ என்பதன் பொருள்________

அ. விளங்கச் செய்                       ஆ. மயங்கச் செய்           இ. அடங்கச் செய்            ஈ. சீராக

13. ப்ராண ரஸம் – என்பதன் பொருள்

அ. உயிர்வளி     ஆ, கார்பன் -டை-ஆக்ஸைடு       இ. ஹைட்ரோ கார்பன்             ஈ. கந்தக – டை - ஆக்ஸைடு

14. ‘ மிகுந்த ‘ – இலக்கணக் குறிப்பு தருக.

அ. வினையெச்சம்          ஆ. முற்றெச்சம்               இ. பெயரெச்சம்              ஈ. வினைத்தொகை

15. நீரலைகளின் – பிரித்தெழுதுக

அ. நீர் + அலைகளின்     ஆ. நீரின் + அலைகளின்             இ. நீரலை + களின்                    ஈ. நீர் + அலைகளின்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..

16. “ உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

       வடுக்காண் வற்றாகும் கீழ் “

            - இக்குறளில் அமைந்துள்ள அளபெடைகளின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவலர்

ஆ. பரஞ்சோதி முனிவர் திருமறைக் காட்டில் பிறந்தவர்.

18. தேம்பாவணி – குறிப்பு வரைக

19. தண்ணீர் குடி, தயிர்க் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்கவும்.

20. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

21.  ‘ பல்லார் ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                          5×2=10

22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை?

23. “ ஒலித்து “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.

24. பழமொழிகளை நிறைவு செய்க:

            அ) உப்பில்லாப் _________

            ஆ) ஒரு பானை ________

25. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

26. கலைச்சொல் தருக:- அ) VOWEL      ஆ)  DISCUSSION

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

குறிப்பு :- எதிர்மறையாக மாற்றுக

அ) மீளாத்துயர்               ஆ) பார்த்த படம்

27. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத் தொடரை இரு தொடர்களாக்குக.

28. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்கவும்.

அ) பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்.

ஆ) ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                       2×3=6

29. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

30.உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31. ஜெயகாந்தனின் திரைப்படப் படைப்புகளைக் கூறுக

 

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                                 2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. பெருமாள் திருமொழி – நூற் குறிப்பு வரைக.

33. பூவின் நிலைகளை வரிசைப்படுத்தி எழுதுக.

34.  அடிபிறழாமல் எழுதுக

( அ ) ‘ வாளால் அறுத்துச் ‘ – எனத் தொடங்கும் குலசேகராழ்வார் பாடல்

 ( அல்லது )

( ஆ ) “ தூசும் துகிரும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                2×3=6

35. சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

 

36. “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

      பண்பும் பயனும் அது “

            - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

37. உலகத்தோ    டொட்ட வொழுகல்       பலகற்றும்

     கல்லார்        அறிவிலா           தார் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.

( அல்லது )

ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

 

39. அ) பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

( அல்லது )

ஆ. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக



41 பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.

பெயர் : அருளன், தந்தை : செல்வம், முகவரி : கதவு எண்.25, திலகர் தெரு, மதுரை வடக்கு-2.

42. அ) பள்ளியிலும், வீட்டிலும் நீ கடைப்பிடிக்கக் கூடிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.

( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

(i). கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?

(ii). புறத்தே காட்சிப்படாமல் உள்ளே பொதிந்திருக்கும் மலர்கள் யாவை?

(iii). இனிப்பான பூக்கள் எது?

(iv) எந்தப் பூ குடிநீருக்கு மணத்தை ஏற்றும்?

(v)  மூங்கில் அரிசி என்றால் என்ன?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                     3×8=24

43. அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்கவும்.

( அல்லது )

ஆ) தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

44. அ) இராமானுசர் நாடகத்தினைச் சுருக்கி கதையாய் எழுதுக.

( அல்லது )

ஆ) “ மங்கையராய்ப் பிறப்பதற்கே “ என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ள மூவர் பற்றி சுருக்கி எழுதுக.

45. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பிடுக..

குறிப்புகள் : முன்னுரை – கல்பனா சாவ்லா இளமைப் பருவம் – விண்வெளிப் பயணம் – விண்வெளி சாதனைகள் – முடிவுரை

( அல்லது )

ஆ) ஆ) குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச் சென்ற நிகழ்வைக் கட்டுரையாக எழுதுக.

முன்னுரை – பொருட்காட்சி வகைகள் – சென்னையில் அரசு பொருட்காட்சி – துறை அரங்குகள் – பொழுது போக்கு விற்பனை – பொருட்காட்சியால் விளையும் நன்மைகள் – முடிவுரை.

இந்தவினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post