10TH - TAMIL - SEPTEMBER -2021 - PUBLIC QUESTION ( PRIVATE CANDIDATE ) - PDF

 

செப்டம்பர் தேர்வு  வினாத்தாள் 2021 ( தனித்தேர்வர் வினாத்தாள் )

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)              கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                                 15×1=15

1. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்    ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                        ஈ) அங்கு வறுமை இல்லாததால்

2. நீலச்சட்டை பேசினார் – இத்தொடரில் “ நீலச்சட்டை“என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத் தேர்க.

அ) பண்புத்தொகை        ஆ) உவமைத்தொகை                இ) அன்மொழித்தொகை  ஈ) உம்மைத்தொகை

3 தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_________

அ) திருக்குறள்               ஆ) புறநானூறு                          இ) கம்பராமாயணம்                   ஈ) சிலப்பதிகாரம்

4. மேன்மை தரும் அறம் என்பது______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது               ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                            ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

5. திருச்சிராப்பள்ளி,கோயம்புத்தூர்,புதுச்சேரி,திருநெல்வேலி – இவ்வூர்ப் பெயர்களின் சரியான ‘ மரூஉ ‘ வரியைத் தேர்க.

அ) திருச்சி, புதுவை, நெல்லை, உதகை               ஆ) திருச்சி , கோவை, புதுவை, நெல்லை

இ) நெல்லை, உதகை, திருச்சி, கோவை  ஈ) உதகை, திருச்சி, புதுவை, கோவை

6. கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் – இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்

) ஐ, ஆல்         ) ஆல், கு        ) ஐ, கு            ) இன், கு

7 சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம்.

) மதுரை         ) புகார்                       ) வஞ்சி                      ) முசிறி

8. “ நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

            நேர்ப்பட வைத்தாங்கே

     குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

            கோல வெறிபடைத்தோம்” – பாரதியார்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) வானத்து - வைத்தாங்கே                  ஆ) காற்றையும் – குடித்தொரு

இ) நிலாவையும் – குலாவும்                    ஈ) வைத்தாங்கே – வெறிப்படைத்தோம்

9. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும்       ) தோகையும் சண்டும் ) தாளும் ஓலையும்      ) சருகும் சண்டும்

10. கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவுத் தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்                  ஆ) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்                     ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்

11. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று கொஞ்சுவது

அ) பால் வழுவமைதி                  ஆ) திணை வழுவமைதி              இ) மரபு வழுவமைதி   ஈ) கால வழுவமைதி

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “

12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா        ஆ) எந்த + தமிழ் + நா     இ) எம் + தமிழ் + நா        ஈ) எந்தம் + தமிழ் + நா

13) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை        ஆ) வினைத்தொகை      இ) உவமைத்தொகை    ஈ) உம்மைத்தொகை

14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை    ஆ) தமிழ் மொழியை       இ) தாய் நாட்டை  ஈ) தம் குழந்தையை

15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்          ஆ) சான்றோர்                இ) வேற்று மொழியினர்  ஈ) புலவர்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.

ஆ. தமிழ்த்தென்றல் திரு.வி.க.போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்

17. வசன கவிதை – குறிப்பு வரைக.

18.வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

19. ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகளில் எவையேனும் இரண்டினை எழுதுக.

20. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்ப்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

21.  ‘ விடல் ‘ என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                          5×2=10

22. கலைச்சொல் தருக:- அ) CONSULATE           ஆ)  FOLK LITERATURE

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கூட்டப் பெயர்களை எழுதுக.

            ( அ) கல் ( ஆ ) ஆடு

23. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

24.  “ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி, நாங் கெளம்பிட்டேன்……

உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

25. மயங்கிய – பகுபத உறுப்பிலக்கணம் தருக..

26. வெண்பாவின் ஓசையையும்,ஆசிரியப்பாவின் ஓசையையும் எழுதுக.

27. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

            பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி

28. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

            மேகலை, தேன், பூ, மழை, மணி

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                       2×3=6

29 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

            தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நெல்லிலோ. செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரை வாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும்?

ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

இ) தமிழ்நாட்டின் நெல்லின் வகைகளை எழுதுக.

30. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

31. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                        2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. “ மகரந்த தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய

      வாசனையுடன் வா” – என்ற பாடல் அடிகளில்

(அ) அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

(ஆ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?

(இ) சுமந்துகொண்டு – என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை அமைக்க.

33. மருவூர்ப் பாக்க கடைத்தெருவையும்,உங்கள் ஊரில் உள்ள கடைத்தெருவையும் ஒப்பிட்டு மூன்று தொடர்கள் எழுதுக.

34.  அடிபிறழாமல் எழுதுக

“ தண்டலை மயில்க ளாத்ட“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்

(அல்லது )

“அன்னைமொழியே “ எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                2×3=6

35. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

36. கவிஞர், தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

37. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

      தியற்கை அறிந்து செயல் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

                                    கவிஞன் யானோர் காலக் கணிதம்

                                    கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

                                    புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

                                    பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

                                    இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

                                    இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

                                    ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

                                    அவனும் யானுமே அறிந்தவை;அறிக!

-         கண்ணதாசன்.

( அல்லது )

ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக  மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விளக்குக

39. அ) கொரோனா பெருந்தொற்று ஊரடங்குக் காலத்தில் உங்கள் நேரத்தை எவ்வாறு பயனுறக் கழித்தீர்கள் என்பதை நண்பனுக்கு விவரித்து கடிதம் எழுதுக.

( அல்லது )

 ஆ.உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. கடலூர் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவிலுள்ள 112 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் நிலவனின் மகள் பூங்குழலி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை பூங்குழலியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

42. அ) நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ,உடன் பிறந்தவருடனோ எதிர் பாராமல் சச்சரவு ஏற்படுகிறது…. இந்த சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களை பேசுகிறோம்; கேட்கிறோம்;கை கலப்பில் ஈடுபடுகிறோம்; இது காறும் கற்ற அறங்கள் நமக்கு கைகொடுக்க வேண்டாமா?

மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                     3×8=24

43. அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சான்று தந்து விளக்குக.

( அல்லது )

ஆ) தமிழ் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

44. அ) இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனித நேயத்தை விவரிக்கவும்.

( அல்லது )

ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

45. குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக

அ) முன்னுரை – உழவுத் தொழில் – உழவர் – உழவுத் தொழிலின் இன்றியாமை – உழவர்களை மதித்தல் – உணவினை வீணாக்கமல் உண்ணுதல் – முடிவுரை

( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.

முன்னுரை – ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘ – சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு தருவோம் ‘ – முடிவுரை

 

இந்த  வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.
நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

By

www.tamilvithai.com      www.kalvivithaigal.com 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post