10TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 4TH- WEEK

 

நாள்                 :           22 -08 -2022 முதல்  26 -08 -2022        

மாதம்                        ஆகஸட்            

வாரம்               :          நான்காம்  வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                     1. நீதி வெண்பா

                                                       2. திருவிளையாடற் புராணம்

அறிமுகம்                 :

Ø  மேசையின் மீது சில வகைப் பொருட்களை வைத்து மாணவர்களில் ஒருவரை அழைத்து மேசையில் உள்ள பொருட்களை கவனிக்க வைத்து, அதனை மறைத்து விட்டு நினைவில் உள்ளவற்றை கூற வைத்து அறிமுகம் செய்தல்.

Ø  கல்வியின் மூலம் சாதித்தவர்களைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும்,சுவைக்கவும்,இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  விளையாடு முறை மூலம் சிலப் பொருட்களை காண்பித்து ஆர்வமூட்டல்

Ø  நீதி வெண்பாவில் கூறப்பட்டுள்ள கல்வியின் சிறப்பினைக் கூறல்

Ø  நீதி வெண்பா பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  ஆசிரியர் பற்றிய செய்தியினைக் கூறல்

Ø   திருவிளையாடற் புராணம் – ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு கூறல்

Ø  செய்யுளின் பொருள் விளக்கம் கூறல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணச் செய்தல்

Ø  மனப்பாடப்பகுதிப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்                   :

நீதி வெண்பா







திருவிளையாடற் புராணம்



 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

நீதி வெண்பா

Ø  ஆசிரியர் : கா.ப.செய்கு தம்பி பாவலர்

Ø  ஊர் : கன்னியாகுமரி – இடலாக்குடி

Ø  ஆண்டு : 1874 – 1950

Ø  பட்டம் : சதாவதானி

Ø  திறன் : 15 வயதிலே செய்யுள் இயற்றும் திறன்

Ø  கல்வியின் முக்கியத்துவம் பற்றி செய்யுள் விளக்குகிறது

திருவிளையாடற் புராணம்

Ø  ஆசிரியர் : பரஞ்ஜோதி முனிவர்

Ø  திருவிளையாடற் புராணம் நூல் குறிப்பு :

o   மூன்று காண்டங்கள். 64 படலங்கள் உள்ளது

o   மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம்

Ø  கபிலரின் நண்பர் – இடைக்காடனார்

Ø  மன்னன் – குசேல பாண்டியன்

Ø  இடைக்காடனார் குசேல பாண்டியனிடம் பாடல் பாட வருகிறார்

Ø  மன்னர் இடைக்காடனாரை இகழ்கிறார்

Ø  இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுகிறார்

Ø  இறைவன் கடம்பவனத்தை விட்டு நீங்குகிறார்

Ø  மன்னன் பிழையை உணர்ந்து புலவர்களிடம் மன்னிப்புக் கோரினார்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

நீதிவெண்பா

திருவிளையாடற் புராணம்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அகராதியைக் கொண்டுக் காணல்

Ø  செய்யுளின் விளக்கத்தை நடைமுறை வாழ்வுடன் ஒப்பிடல்

Ø  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  நீதி வெண்பா பாடலை எழுதியவர் யார்?

Ø  திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

MOT

Ø  சதாவதானம் பற்றி கூறுக

Ø  இடைக்காடனார் இறைவனிடம் எதற்கு முறையிட்டார்? என்னவாக முறையிட்டார்?

HOT

Ø  எதிர் காலத்தில் நீங்கள் பயில விரும்பும் கல்வி யாது? அதனால் இவ்வுலகிற்கு என்ன பயன்?

Ø  சொல்லேருழவன் , வில்லேருழவன் – என்பது குறித்து கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø  செய்யுள் உணர்த்தும் கல்வி சார்ந்த கருத்துகளை அறிந்து சுவைத்தல்,இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு உணர்ந்து பேசுதல், எழுதுதல்.

Ø  புராண இலக்கியத்தின் மொழி, தொடர் அமைப்புகளை அறிதல், அறிவால் பெறப்படும் சமூக மதிப்பு காலந்தோறும் மாறாதிருப்பதைப் படித்து சுவைத்தல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post