மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் 2022 - 2023
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15
)
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும். 15×1=15
1.
எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்____
அ)
எள்கசடு ஆ) பிண்ணாக்கு இ) ஆமணக்கு ஈ) எள்கட்டி
2.
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது _________________
அ)
தொழிற்பெயர் ஆ) முதனிலைத்
திரிந்த தொழிற்பெயர்
இ)
முதனிலைத் தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர்
3 இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக்
கற்றுக் கொண்டவர்________
அ)
தமிழழகனார் ஆ) அப்பாத்துரையார் இ) தேவ நேய பாவாணர் ஈ) இரா.இளங்குமரனார்
4
கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின்
இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________
அ)
தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே
எழுதினார்
இ)
அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ)
அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
5.
புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.
தவழும்போது
ஒரு பெயர்
விழும்போது
ஒரு பெயர்
உருளும்போது
ஒரு பெயர்
திரண்டோடும்
போது ஒரு பெயர் – அவை என்ன?
அ)
நீர்,மழை,ஆறு,ஓடை ஆ) மேகம்,மழை,நீர்,வெள்ளம்.
இ)
மாரி,கார்,நீர், புனல் ஈ) மழை,புனல்,மேகம்,நீர்
6.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று ______,_____ வேண்டினார்.
அ) கருணையன்,எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத்,தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத,
பூமிக்காக
7 ‘ கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது
‘ – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையாலணையும் பெயரும் முறையே ___________
அ)
பாடிய ; கேட்டவர் ஆ) பாடல் ; பாடிய இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர்
8.மெய்கீர்த்தி
என்பது
அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால்
கல்லால் பொறிக்கப்படுபவை
ஆ)
மன்னர்களின் புகழை ஓலைச்சுவடிகளில் எழுதி வைப்பது.
இ)
ஒருவரது புகழைப் புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை
ஈ)
அறக்கருத்துகள் அடங்கிய நூல்
9.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுப்படுத்தக் காரணமாக
அமைவது.
அ) எழுவாய் ஆ) வேற்றுமை
உருபு இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
10.
பாரதியார் காற்றை’ மயலுறுத்து ‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________
அ)
மணம் வீசும் காற்றாய் நீ வா ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா
இ)
மயிலாடும் காற்றாய் நீ வா ஈ)
மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
11.
எர்லி மார்னிங் எழுந்து வாக்கிங் சென்று வந்து டீ குடித்த அம்மா,நீயூஸ் பேப்பரைப் படித்துக்
கொண்டிருந்தார். – இத்தொடரில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் வரிசையைத்
தேர்க.
அ)
வைகறை,நடைபயிற்சி,பத்திரிக்கை,தேநீர் ஆ)
அதிகாலை, நடந்து, தேநீர், பத்திரிக்கை
இ)
காலை, நடை, தேநீர், செய்தி ஈ) வைகறை, நடைபயிற்சி,தேநீர்,செய்தித்தாள்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
‘
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே
சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த
தேதமிழ் ஈண்டு “
12.இப்பாடல்
இடம் பெற்ற நூல்
அ.
நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
13.
பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி
அ. இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல் நிறை அணி
14.
தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது
அ.
சங்கப் பலகை ஆ. கடல் இ.
அணிகலன் ஈ. புலவர்கள்
15.
தொழிற்பெயர் அல்லாத சொல்
அ.
துய்ப்பதால் ஆ. அணிகலன் இ. மேவலால் ஈ.
கண்டதால்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )
பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. நமக்கு
உயிர் காற்று
காற்றுக்கு
வரம் மரம் – மரங்களை
வெட்டி
எறியாமல் நட்டு வளர்ப்போம் – ‘ இது போன்று உலக காற்று நாள் ‘ விழிப்புணர்வுக்கான இரண்டு
முழக்கத் தொடர்களை எழுதுக.
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. செயற்கை நுண்ணறிவு கருவியான வாட்சன்,சில
நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்று நோயைக் கண்டுபிடித்தது
ஆ. மொழிபெயர்ப்பு,மொழியில் புதுக் கூறுகளை
உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
18. ஜப்பானில்
சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர் குறித்து எழுதுக.
19. “
கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது
உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன்
தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான்
யார்?
20. பாசவர்,வாசவர்,பல்நிண
விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
21. பாடலோடு
பொருந்தாத இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. சொற்களை
இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
தேன்,மணி,மழை,மேகலை
23. “ உரைத்த “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. பொருத்தமான
நிறுத்தக் குறியிடுக.
சேரர்களின்
பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை
வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர்
சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
25. பகை
வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலை நாட்ட, போரிடும் திணை குறித்து எழுதுக.
26. கலைச்சொல் தருக:- அ) Renaissance ஆ) Aesthetics
குறிப்பு: செவி மாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா
சொல்லைக்
கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
(
காடு , காற்று , நறுமணம் )
அ)
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
ஆ)
ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்.
27. தொடர்களில்
உள்ள முதல் சொல்லைச் செழுமை செய்க.
அ)
மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
ஆ)
வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது
28. இந்த
அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்க்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ……
இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?
இல்லையா?.
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின்
வகைகளை எடுத்தெழுதுக.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29‘
நீர் ‘ தன்னைப் பற்றி பேசினால்……. உங்கள் கற்பனையில் ஆறு தலைப்புகள் தருக.
30.உரைப்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தற்போது வெளிவருகிற
சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிபடக் கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக்
கொண்டிருக்கிறது. கடவுச்சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.உரிமையாளரின்
முகத்தை அடையாளம் கண்டு திறப்பது, இன்றைய தொழில் நுட்பம். செயற்கை நுண்ணறிவு, படம்
எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
அ. திறன்பேசியைத் திறக்கும் பழைய முறைகள் எவை?
ஆ. திறன்பேசியில் படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?
இ. உயர்வகைத் திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்
எது?
31. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை
குறித்து மூன்று குறிப்புகளை எழுதுக
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. வைத்தியநாதபுரி
முருகன்,அணிந்திருக்கும் அணிகலன்களுடன் குழந்தையாகச் செங்கீரை ஆடிய நயத்தினை விளக்குக
33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன
யாவை?
34. அடிபிறழாமல்
எழுதுக
( அ ) ‘
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் ‘ எனத் தொடங்கி ‘நன்னர் நன்மொழி கேட்டனம் ‘ என
முடியும் முல்லைப்பாட்டு.
( ஆ )
“ தூசும் துகிரும் ஆரமும் அகிலும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல்
நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத்
தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும்
அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
36. வெண்பாவின்
பொது இலக்கணத்தை எழுதுக
37.
ஊழையும் உப்பக்கம்
காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்– இக்குறட்பாவினை அலகிட்டு
வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) சிலப்பதிகார
மருவூர்ப் பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு
எழுதுக
( அல்லது )
ஆ)
ஆற்றுப்படுத்துதல்
என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக
இருந்தது.அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
39. அ) ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு, முக்கியச் சாலை விதிகளை
விளக்கி,அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.
( அல்லது )
ஆ. நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் குறுங்கட்டுரையை
வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவிதை வடிவில் எழுதுக.
41 எண்-6,பாரதியார்
தெரு, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழரசுவின் மகள் பூங்கொடி.கணினிப் பயிற்றுநர்
பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை பூங்கொடியாகப் பாவித்து
பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியலை நிரப்புக.
42. அ) நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச்
சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ,உடன் பிறந்தவருடனோ
எதிர் பாராமல் சச்சரவு ஏற்படுகிறது…. இந்த சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களை பேசுகிறோம்;
கேட்கிறோம்;கை கலப்பில் ஈடுபடுகிறோம்; இது காறும் கற்ற அறங்கள் நமக்கு கைகொடுக்க வேண்டாமா?
மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும்
நன்மைகளையும் பட்டியலிடுக.
( அல்லது )
ஆ)
மொழிபெயர்க்க.
Among the five geographical divisions of the Tamil
country in Sangam literature, the Marutam region was the fit for cultivation,
as it had the most fertile lands. The
properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains
and the fertility of the soil.Among these elements of nature,sunlight was
considered indispensible by the ancient
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள்
கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம்
தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து
மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து
திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
(i). பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை
எடுத்து எழுதுக.
(ii). புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
(iii). பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
(iv) இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
(v) உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த
விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
( அல்லது )
ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின்
ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள்
– அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம்
எழுதுக
44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும்
அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு
விவரிக்கின்றன?
( அல்லது )
ஆ) மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்,அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க
45. விசும்பின் துளியும் பசும்புல் தலையும், என்னும் கருத்தை
அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று வரைக.
குறிப்புகள் : முன்னுரை – இயற்கையோடு இயைந்து வாழ்வோம் –
வானத்து மழைநீரைப் பூமியில் காப்போம் – மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம் – முடிவுரை
( அல்லது )
ஆ) ஆ)
உங்கள் பகுதியில் நடைபெற்ற
பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக
By