அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் - மே - 2022
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15
)
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும். 15×1=15
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
அ) குலைவகை ஆ) மணிவகை இ)
கொழுந்து வகை ஈ) இலைவகை
2.
‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? ‘ என்று நூலகரிடம் வினவுதல்
அ)
அறிவினா ஆ) கொளல்
வினா இ) அறியா வினா ஈ) ஏவல் வினா
3 ‘ ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம் ‘ – என்ற புதிருக்கான விடையைத்
தேர்க.
அ) காடு ஆ) நாடு இ)
வீடு ஈ) தோடு
4.’
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்’ – இப்பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
அ) மணிமேகலை ஆ)
தேம்பாவணி இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
5.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
அ)
அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
இ)
அறிவியல் முன்னேற்றம் ஈ)
வெளிநாட்டு முதலீடுகள்
6.
மலர்விழி பாடினாள் – இத்தொடர்
அ) பொதுமொழி ஆ) தனிமொழி இ) தொடர் மொழி ஈ) அடுக்குத் தொடர்
7 கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
– என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு.
அ) வனத்தின் நடனம் ஆ) மிதக்கும் வாசம் இ) மொட்டின் வருகை ஈ) காற்றின் பாடல்
8.மெய்கீர்த்தி
என்பது
அ) புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால்
கல்லால் பொறிக்கப்படுபவை
ஆ)
மன்னர்களின் புகழை ஓலைச்சுவடிகளில் எழுதி வைப்பது.
இ)
ஒருவரது புகழைப் புலவர்கள் புகழ்ந்து பாடும் இலக்கிய வகை
ஈ)
அறக்கருத்துகள் அடங்கிய நூல்
9.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுப்படுத்தக் காரணமாக
அமைவது.
அ) எழுவாய் ஆ) வேற்றுமை உருபு இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
10.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது.
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ)
கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
11.
‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.
அ)
கான் அடை – காட்டைச் சேர் ஆ)
கால் உடை – காலால் உடைத்தல்
இ)
கான் நடை – காட்டுக்கு நடத்தல் ஈ)
கால் நடை – காலால் நடத்தல்
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
“
செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை
எந்தமிழ்நா
எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?
முத்தைத்
தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை
நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “
12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந் + தமிழ் + நா ஆ)
எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா ஈ)
எந்தம் + தமிழ் + நா
13) ‘ செந்தமிழ் ‘ என்பது:
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?
அ) தம் தாயை ஆ) தமிழ் மொழியை இ)
தாய் நாட்டை ஈ) தம் குழந்தையை
15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.
அ) தமிழர் ஆ)
சான்றோர் இ) வேற்று
மொழியினர் ஈ) புலவர்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. வசன கவிதை – குறிப்பு வரைக
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. சொற்பொழிவுகளைக்
கேட்பதன் மூலமாக ம.பொ.சி. இலக்கிய அறிவு பெற்றார்.
ஆ. 1906 – ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார்
ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்
18. குறிப்பு வரைக – அவையம்
19. மன்னுஞ்
சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”
- இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களைத்
தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
20. தாவரங்களின் இளம்பயிர் வகைகளைக் குறிக்கும் சொற்களில்
நான்கினை எழுதுக.
21. ‘ முயற்சி ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
22. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில்
அமைக்க.
( அ ) இன்சொல் ( ஆ ) எழுகதிர்
23. “ வாழ்க “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
( அ ) விடு – வீடு (
ஆ ) கொடு – கோடு
25. வெண்பா, ஆசிரியப்பாவின் ஓசைகளை எழுதுக
26. கலைச்சொல் தருக:- அ) BELIEF ஆ)
PHILOSOPHER
குறிப்பு: செவி மாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா
கூட்டப் பெயர்களை எழுதுக.
( அ) கல் ( ஆ ) ஆடு
27. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை
நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக
அமைவது எவ்வாறு?
28. சந்தக் கவிதையில் வந்த பிழையைத் திருத்துக.
“ தேணிலே ஊரிய
செந்தமிழின் – சுவை
தேரும்
சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர்
உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின்
புருவோமே”
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-
2×3=6
29. “ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது”
- இது
போல் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30.உரைப்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
அறம்
கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி
‘ அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் ‘ என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப்
பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்
காஞ்சி குறிப்பிடுகிறது.அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.
அ)
அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை?
ஆ)
அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது?
இ)
மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது?
31. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர்
ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. கம்பராமாயணம் – நூற்குறிப்பு வரைக.
33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன
யாவை?
34. அடிபிறழாமல்
எழுதுக
( அ ) “ அன்னைமொழியே“ எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்
பாடல்
( ஆ ) “நவமணி வடக்க யில்போல்“ எனத் தொடங்கும் தேம்பாவணிப்
பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில்
ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள்
சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில்
உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
36. தீவக அணியை விளக்கி,அதன் வகைகளை எழுதுக.
37.
கருவியும் காலமும்
செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை
அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) கருணையன் தாய் மறைவுக்கு
வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய
கவிதாஞ்சலியை விவரிக்க.
( அல்லது )
ஆ)’ காலக்கணிதம்’ கவிதையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள
கருத்துகளுள் உங்களைக் கவர்ந்த ஐந்து கருத்துகளை எழுதுக.
39. அ) பெருந்தொற்று ஏற்படுவதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகளை
விவரித்துச் சிற்றூரில் உள்ள உங்களது தாத்தா பாட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதுக..
( அல்லது )
ஆ. உங்கள் தெருவில்
மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும்
இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
41. வீட்டு
எண்: 21, வ.உ.சிதம்பரனார் தெரு, கரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம்
வகுப்பினை நிறைவு செய்த வெற்றிச் செல்வனின் மகன் குணசேகரன் மேல்நிலை வகுப்பில் சேர
விரும்புகிறார். தேர்வர் தன்னை குணசேகரனாகக் கருதி கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்புச்
சேர்க்கை விண்ணப்பப்படிவத்தினை நிரப்புக.
42. அ) இன்சொல் பேசுவதால் விளையும் நன்மைகள் ஐந்தினை எழுதுக.
( அல்லது )
ஆ)
மொழிபெயர்க்க.
The Golden sun gets up early in the morning and starts
its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The
colourful birds start twitting their morning melodies in percussion.The cute
butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze.
The breeze gently blows everywhere and makes everything pleasant
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி. அவனுக்குள்ளே
சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு
தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது. இந்த மகிழ்ச்சிப்
பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான
அறத்தை மனிதன் ஏற்க வேண்டும். சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை
அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை, ஆனால் சங்ககால அறங்கள்
இயல்பானவை.
( I ). மனிதன் எப்படிப்பட்டவன்?
( ii ). மனிதனுக்கு எப்போது மகிழ்ச்சி பெருகுகிறது?
( iii ) மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க மனிதன் என்ன செய்ய
வேண்டும்?
( iv ) அறநெறிக்காலம் எனப்படுவது எது?
( v ) சங்ககால அறங்கள்
எப்படிப்பட்டவை?
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சான்று தந்து விளக்குக.
( அல்லது )
ஆ) தமிழ் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
44. அ) அழகர்சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில்
மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக..
( அல்லது )
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
45. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.
அ ) முன்னுரை – ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘
– சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு
தருவோம் ‘ - முடிவுரை
( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு, ‘மக்கள் பணியே மகத்தான பணி ‘ என்ற
தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை
– தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொதுவாழ்வில் தூய்மை
– எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை
By