ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது கல்விவிதைகள் வலைதளம் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் பல்வேறு விதமான கற்றல் வளங்களை இலவசமாக வழங்கி வருகிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. மாணவர்களுக்கு நாம் பாடத்தினை புரிய வைத்து அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வதற்காக வினாத்தாளினை உருவாக்கி வழங்குகிறோம். அந்த வினாத்தாளினை உருவாக்கி வழங்கும் பணியினை நமது கல்விவிதைகள் வலைதளம் செய்து வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் பத்தாம் வகுப்பிற்கு வாரத்தேர்வு வினாத்தாளினை பதிவேற்றம் செய்து வருகிறோம். அது ஒரு வினாத்தாளாக தான் வடிவமைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை ஒரு வாரத் தேர்விற்கு மூன்று வினாத்தாளினை உருவாக்கி வழங்கியுள்ளோம். அந்த வினாத்தாளின் தன்மையானது மீத்திற மாணவர்களுக்கானது, நடுநிலை மாணவர்களுக்கானது, மெல்லக் கற்கும் மாணவர்களுக்கானது என தரம் பிரித்து வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வினாத்தாளும் 40 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும்.
நன்றி வணக்கம்.
29-08-2022 TO 02-09-2022
பத்தாம் வகுப்பு - தமிழ்
வாரத்தேர்வு வினாத்தாள்
A-TYPE - மீத்திற மாணவர்களுக்கானது
B-TYPE - நடுநிலை மாணவர்களுக்கானது
C & D-TYPE - மெல்லக் கற்கும் மாணவர்களுக்கானது