அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். நடப்புக் கல்வி ஆண்டு 2022 - 23 இல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தினை எவ்வாறு படிக்கிறார்கள் என்பதனை மாதம் ஒரு முறை நாமே சோதித்து மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் திறனில் எவ்வாறு அவர்களை மேம்பாடு அடையச் செய்யலாம் என யோசித்து பயிற்சியினை வழங்குவீர்கள். அந்த மாதம் ஒரு முறை அல்லது இரு முறைக் கூட உங்கள் குழந்தைகளின் தமிழ் வாசித்தல்,எழுதுதல் நிலை எவ்வாறு உள்ளதை பார்க்கலாம். அவற்றை நாம் பதிவேடுகளாக பராமரிப்பது மிக அவசியமான ஒன்று. அதிகாரிகளின் பார்வைக்கு அவையும் ஒன்று. நாம் இந்தப் பதிவேட்டினைக் கொண்டு மாணவர்களின் கற்றலை மேம்படுத்த இந்த பதிவேடு உறுதுணையாக இருக்கும். இந்த பதிவேட்டின் மூலம் மாணவர்களின் வாசித்தல், எழுதலில் உள்ள முந்தைய நிலை, தற்போதைய நிலை, மற்றும் குறிப்பு வழங்கப்பட்டிருக்கும். மாணவர்களின் முந்தைய நிலையிலிருந்து தற்போதைய நிலையில் எப்படிப்பட்ட முன்னேற்றம் தேவை என்பதனை குறிப்பில் எழுதிக் கொள்ளலாம். இந்த பதிவேட்டினை தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை உள்ள தமிழ் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் திறனை மதிப்பிடலாம். இது ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே ஆய்வு அலுவலர்கள் பார்வையிடுவர். நமக்குத் தேவைப்படின் மாணவர்களின் திறனை சோதித்துப் பார்க்க இதனை மேல்நிலை வகுப்பு வரைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பதிவேடு PERIOADIC ASSESSMENTஎனப்படுகிறது. இந்த பதிவேடு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சம்பந்தப் பட்ட ஆசிரியர் பயிற்றுநர் அவர்களால் தங்களில் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஒன்று. இந்த பதிவேடு நமக்கு தேவைப்படாது என இருக்காமல் நம் குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் எவ்வாறு நாம் கற்றுத் தரும் பாடங்களை கற்கிறார்கள் என்பதனை நாமே அறிந்துக் கொள்ள முடியும். மாதம் ஒரு முறை இதற்கென ஒரு பாட வேளை ஒதுக்கி மேற்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் மெல்ல கற்கும் மாணவர்களை நாம் கண்டறிந்து அவர்களுக்கு எப்படிப் பட்ட பயிற்சிகளை வழங்கலாம் என திட்டம் வகுக்கலாம். மெல்லக் கற்கும் மாணவர்களை அடையாளம் காணும் பதிவேடாக இவற்றை நாம் பராமரிக்கலாம்.
சரி இந்த பதிவேட்டினை நீங்கள் பெற இந்த வலைப்பதிவில் DOWNLOAD என்ற பட்டன் இருக்கும். அதனை நீங்கள் அழுத்துவதன் மூலம் இந்த பதிவேடு உங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் ஆகும். இதனை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் அளவு எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு : ஒவ்வொரு மாதமும் உங்கள் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். நம் பணிக்கான ஆதாரம். அதே போன்று மாணவர்கள் தமிழ்ப் புத்தகத்தில் வாசித்தல் பகுதியினை மேற்கொண்டனரோ அந்த உரைப்பத்தியில் நீங்கள் வாசிப்பு என எழுதி அன்றைய தினம் சுருக்கொப்பம் இடவும். இது பணி மேற்கொண்டமைக்கு அதிகாரிகள் பார்வைக்கு ஆதாரம். எழுதுதல் திறனை பார்க்க மற்றும் ஆதாரத்திற்கு உரைப் பத்தி அல்லது சொற்றொடர் அல்லது சொற்கள் கொடுத்து எழுத வைத்து அதனை கோப்பாக பராமரிக்கவும். நன்றி, வாருங்கள் பதிவேட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.