9TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 1ST WEEK

  

நாள்                 :           01 -08-2022 முதல்  05-08-2022        

மாதம்                        ஆகஸட்          

வாரம்               :            ஆகஸட் முதல் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                                         1.  அகழாய்வுகள்

2. வல்லினம் மிகும் இடங்கள்

3. திருக்குறள்

அறிமுகம்                 :

Ø  கீழடி அகழாய்வு சார்ந்த செய்தித்தாள்களை கொண்டு அறிமுகம் செய்தல்

Ø  கரும்பலகையில் வல்லினம் மிகும், மிகா இடங்களுக்கான உதாரணம் எழுதி அறிமுகம் செய்தல்

Ø  நீதிக்கதைகளைக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  அகழாவுகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் அறிதல்

Ø  வல்லினம் என்பதனையும் தொடர்களில் அவை இடம் பெறும் முக்கியத்துவம் குறித்து அறிதல்

Ø  நீதி நூல்கள் மூலம் அறக்கருத்துகளை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  அகழாய்வு முக்கியத்துவத்தை கூறல்

Ø  பட்டிமண்டபம் போன்று மாணவர்களை பங்கேற்று வாசிக்க வைத்தல்

Ø  வல்லின எழுத்துகளை அறிதல்

Ø  வல்லின எழுத்துகளில் வலி மிகும் எழுத்துகள் குறித்து அறிதல்

Ø  திருக்குறளின் சிறப்பினை அறிதல்

Ø  பொறையடைமை,தீவினை அச்சம், கேள்வி, தெரிந்துதெளிதல்,ஒற்றாடல், வினைத்தூய்மை,பழைமை, தீ நட்பு, பேதமை குறித்து அறிதல்

கருத்து  வரைபடம்                   :

அகழாய்வுகள்







வல்லினம் மிகும் இடங்கள்

திருக்குறள்

 

 

விளக்கம்  :

அகழாய்வுகள்

Ø  அகழாய்வுகள் என்பது வரலாற்றை அறிய உதவுகிறது.

Ø  அகழாய்வுகள் மூலம் தமிழக பண்பாட்டினை அறியலாம்

Ø  அகழாய்வுகள் வரலாறு முழுமை பெற உதவுகிறது

Ø  தமிழகத்தின் தொன்மையானப் பகுதிகளை அகழாய்வுகள் இன்றியமையாதது.

வல்லினம் மிகும் இடங்கள்

Ø  அ,இ என்னும் சுட்டெழுத்துப் பின் வல்லினம் மிகும்

Ø  இரண்டாம் வேற்றுமைத் தொடரில் வலி மிகும்

Ø  நான்காம் வேற்றுமை விரிகளில் வலி மிகும்.

Ø  ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

Ø  ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

Ø  ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

Ø  இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

Ø  உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

                                 திருக்குறள்

Ø  பொறையுடைமை, தீவினை அச்சம்

Ø  கேள்வி, தெரிந்து தெளிதல்

Ø  ஒற்றாடல், வினைத்தூய்மை

Ø  பழைமை, தீ நட்பு, பேதமை

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  பட்டிமண்டபத்திற்கு ஏற்ற வகையில் பேசுதல்

Ø  முக்கியச் சொற்களையும், பொருள் புரியாச் சொற்களையும் அடிக்கோடிடல்.

Ø  அகழாய்வுகள் பற்றி அறிதல்

Ø  வல்லினம் மிகும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல்

Ø  வல்லினம் மிகும் இடங்களை அறிந்து தொடர்களைப் பயன்படுத்துதல்

Ø  நீதிக் கருத்துகளை அறிதல்

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை பின்பற்றுதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  அகழாய்வு என்பது யாது?_______

Ø  வல்லினம் என்பது யாது?

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

MOT

Ø  அகழாய்வு ஏன் மேற்கொள்ள வேண்டும்?

Ø  இருபெயரொட்டுப் பண்புதொகையில் வல்லினம் மிகும் என்பதற்கு சான்று தருக.

Ø  பொறையுடைமையில் வள்ளுவர் கூறிய கருத்துகள் யாவை?

HOT

Ø  அகழாய்வுகள் மூலம் நாம் எவற்றை எல்லாம் அறிந்துக் கொள்ளலாம்?

Ø  தொடர் தரும் பொருளைக் கூறுக.

o   சின்னக் கொடி – சின்ன கொடி

o   தோப்புக்கள் – தோப்புகள்

o   கடைப்பிடி – கடைபிடி

o   நடுக்கல் – நடுகல்

Ø  கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

கற்றல் விளைவுகள்                  :

Ø  பட்டிமன்றம்,சொற்போர் போன்ற சொல்வன்மையை வளப்படுத்தும் செயல்களில் பயிற்சி பெறுதல், தொல்லியல் எச்சங்களைப் பாதுகாத்தல்

Ø  வல்லினங்களைப் பயன்படுத்தும் இடமறிந்து எழுதுதல்

Ø  அற நூலில் சொல்லப்பட்ட நன்னெறிக் கருத்துகளின் முறைமையையும் செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல் பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post