8TH - TAMIL - NOTES OF LESSON - JULY 4TH WEEK

 

நாள்                :           25 -07-2022 முதல்  29 -07-2022       

மாதம்                :           ஜூலை

வாரம்               :             நான்காம் வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. வினைமுற்று

                                                                            2. திருக்குறள்

அறிமுகம்                 :

Ø  இன்று நீங்கள் காலை எழுந்த உடன் என்னென்ன செய்தீர்கள் என்பதனைக் கூறுங்கள் என வினாக்  கேட்டு அறிமுகம் செய்தல்

Ø  திருக்குறள் நீதிகதைகளைக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  வினைச்சொல்லை அறிந்து கொள்ளுதல்

Ø  வினைமுற்றுகளின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

Ø  வாழ்வியல் கருத்துகளை நீதி நூல்கள் வழியே அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  வினைச்சொல்லையும் அதன் வகைகளையும் எடுத்துகாட்டுடன் விளக்குதல்

Ø  வாழ்வியல் கூறும் திருக்குறள் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

Ø  மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்                   :

வினை முற்று



திருக்குறள்

 

விளக்கம்  :

வினைமுற்று

Ø  ஒன்றன் செயலைக் குறிப்பது வினை.

Ø  முற்றுப் பெற்ற வினைச் சொல் வினைமுற்று அல்லது முற்று வினை

Ø  தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினை முற்று

Ø  ஏவல் வினை முற்று, வியங்கோள் வினைமுற்று

Ø  திருக்குறள் சிறப்புகள், நூற் குறிப்பு , ஆசிரியர் குறிப்பு

Ø  நடுவுநிலைமை,கூடா ஒழுக்கம்,கல்லாமை,குற்றங்கடிதல்,இடனறிதல்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  வினைச்சொல் பற்றி அறிந்து கொள்ளல்

Ø  வினைமுற்று வகைகளை அறிதல்

Ø  நடைமுறை எடுத்துகாட்டுகளுடன் புரிந்துக் கொள்ளல்

Ø  திருக்குறள் சிறப்பு பற்றி அறிதல்

Ø  திருக்குறள் நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்

Ø  திருக்குறள் கூறும் அறக் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø  மனப்பாடக் குறளை மனனம் செய்தல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  வினை என்பது யாது?

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

MOT

Ø  வினைமுற்று வகைகள் யாவை?

Ø  நடுவுநிலைமை என்பது யாது?

HOT

Ø  ஏவல் வினைமுற்று,வியங்கோள் வினை முற்று வேறுபாடு யாது?

Ø  திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது?

கற்றல் விளைவுகள்                  :

Ø  வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

Ø  நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

தொடர் பணி                            :

Ø   வினைமுற்று சொற்களை எழுதி அவற்றிற்குரிய படங்களை சேகரித்து ஒட்டி வருக

Ø   நீ அறிந்த நீதி கதை ஒன்றினை எழுதி வருக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post