7TH - TAMIL - NOTES OF LESSON - JULY 3RD WEEK

  

நாள்                :           18-07-2022 முதல்  22-07-2022       

மாதம்                :           ஜூலை

வாரம்               :           மூன்றாம்   வாரம்                                        

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                    1. விலங்குகள் உலகம்



                                                                        2. இந்திய வன மகன்


கருபொருள்                              :

Ø   காடுகளின் பயன்கள் அறிதல்

Ø  காடுகள் காட்டு விலங்குகளின் வாழ்விடம் என்பதனை உண்ர்ந்து போற்றுதல்

Ø  காட்டை உருவாக்கிய மனிதரைப் பற்றி அறிதல்

Ø  அவரின் முயற்சியினைப் போற்றுதல்

உட்பொருள்                              :

Ø  காட்டு உயிரிகளுக்கும், சுற்றுச்சுழலுக்கும் இடையேயான தொடர்பு குறித்து புரிந்து கொள்ளுதல்

Ø  காடுகளும், காட்டு உயிரிகளும் நாட்டின் உயிர் நாடி என்பதனைப் புரிந்துக் கொள்ளுதல்

Ø  நேர்காணல் வடிவத்தில் வழங்கப்பட்ட கருத்துகளை படித்து உணரும் திறன் பெறுதல்

கற்றல் மாதிரிகள்                     :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

கற்றல் விளைவுகள்                  :

Ø  பல்வேறு கதைகள் /பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் இனங்காணல்

Ø  ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்

ஆர்வமூட்டல்                             :

Ø  வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகளின் பெயர்களைக் கூற வைத்து ஆர்வமூட்டல்.

Ø  உங்கள் வீட்டில் செடி, மரம் போண்றவற்றை வளர்த்தது உண்டா? என்னென்ன மரம், செடிக்கொடி உள்ளது? போன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டல்

படித்தல்                                    :

Ø  உரைநடைப் பகுதியினை பிழையின்றி வாசித்தல்

Ø  நேர்காணல் உணர்வுகளோடு படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைகளைக் கண்டு அதன் பொருள் அறிதல்

நினைவு வரைபடம்                   :

                                                                            விலங்குகள் உலகம்





 

இந்திய வனமகன்

 

தொகுத்து வழங்குதல்              :

 

விலங்குகள் உலகம்

 

Ø  வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும்.

Ø  காட்டு விலங்குகளின் உறைவிடமான முண்டந் துறை புலிகள் காப்பகம்

Ø  தமிழ்நாட்டில் இரண்டா வது மிகப்பெரிய காப்பகம். 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுமாடு போ ன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.

Ø  உலகில் இரணடு வ்கயொன யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை; ன்னொன்று ஆபபிரிக்க யானை

Ø  யானை 25 கிலோ புல், 65 லிட்டர் தண்ணீர் உட்கொள்ளும். நினைவாற்றல் மிகுந்த விலங்கு.

Ø  புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.

Ø  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ‘கிர் சரணாலயத்தில்’ மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

இந்திய வனமகன்

Ø  பல்வகை மரங்கள் நிறைந்த  காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார் .

Ø  அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங்.

Ø  அரசு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. அதில் என்னை நான் இணைத்துக் கொண்டேன் .

Ø  யானைகள் வந்து தங்கும் காடு தான் வளமான காடு என்பதனை பெரியோர்கள் சொல்வதனை க் கேட்டு இருக்கிறேன்.

Ø  என்னுடைய காடு பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் செய்தி வெளிவந்தது

Ø  மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! நாட்டின் வளம் காப்போம்!

வலுவூட்டல்                               :

Ø  வலையொளி மூலம் தமிழ் எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  புலிகள் காப்பகம் ________

Ø  இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர் யார்?

MOT:

Ø  காட்டு வளத்தை குறிக்கும் குறியீடு என அழைக்கப்படும் விலங்கு எது?

Ø  யானைகள் குறித்து இந்திய வன மகனின் கருத்து யாது?

HOT :

Ø  காட்டுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.

Ø  மரங்களை நாம் ஏன் வளர்க்க வேண்டும் என்பதற்கு ஆக்கப்பூர்வமான பதிலைக் கூறுக.

குறைதீர் கற்றல்                        :

Ø   மதிப்பீட்டு வினாக்களைக் கொண்டு பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

எழுத்துப் பயிற்சி                      :

Ø   பாடநூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருக.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை வாசித்தல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து  வாசித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களை வாசித்தல்

Ø   சிறு சிறு தொடர்களைப் படித்தல்

தொடர் பணி                            :

Ø  காட்டு விலங்குகளின் படங்களை சேகரித்து படத் தொகுப்பு உருவாக்குக

Ø  உனது வீட்டில் அல்லது பள்ளியில் வளர்க்க ஆசைப்படும் மரம் பற்றியும் அதன் பயன்களையும் எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post