புதிய பாடக்குறிப்பேட்டின் படிநிலைகள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது
நாள் : 01-08-2022 முதல் 05-08-2022
மாதம் : ஆகஸட்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. புலி தங்கிய குகை
2. பாஞ்சைவளம்
அறிமுகம் :
Ø நம் நாட்டை யார் யார் பாதுகாக்கிறார்கள்? அவர்களின்
பணி எவ்வாறு அமைகிறது?
Ø நீ அறிந்த தமிழக விடுதலைப்
போராட்ட வீரர்கள் பற்றிக் கூறுக
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø சங்க இலக்கியங்கள் வழியே
மக்களின் வீரத்தை அறிதல்
Ø வீரபாண்டிய கட்டபொம்மன்
வீர மண்ணின் வீரத்தைப் பற்றி அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø புறநானூறு
பற்றிக் கூறல்
Ø சங்க
கால பெண்பாற் புலவர்களின் கல்விச் சிறப்பு
Ø மக்களின் வீரம் பற்றி
சங்க இலக்கியமான புறநானூறு வழியாக அறிதல்
Ø வீரபாண்டிய கட்டபொம்மன்
பற்றி அறிதல்
Ø பாஞ்சாலங்குறிச்சி மண்ணின்
வீரம் பற்றி அறிதல்
நினைவு வரைபடம் :
புலி
தங்கிய குகை
பாஞ்சைவளம்
விளக்கம் :
புலி
தங்கிய குகை
Ø காவற்பெண்டு
பெண்பாற் புலவர்
Ø தன்
மகனின் வீரத்தை பற்றிக் கூறுகிறார்
Ø புலி
தங்கிய குகை போன்று பெற்றெடுத்த வயிறு உள்ளது.
Ø மகன்
போர்களத்தில் இருக்கக் கூடும்
பாஞ்சைவளம்
Ø பாஞ்சாலங்குறிச்சியின்
வளத்தை கதைப்பாடல்கள் வழி அறிதல்
Ø கோட்டைகள்
வலிமையாக இருக்கும்
Ø மேடைகள்
அமைந்திருக்கும்
Ø முயல்
வேட்டை நாயைப் பிடித்து விரட்டி விடும்
Ø பசும்
புலியும் நீர் நிலையின் ஒரே துறையில் நின்று நீர் குடிக்கும்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o செய்யுளினை சீர் பிரித்து
வாசித்தல்
o செய்யுளின் பொருள் உணர்ந்து
படித்தல்
o புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
o சங்க கால மக்களின் வீரத்தை
இலக்கியங்கள் மூலம் அறிந்து போற்றுதல்
o கட்டபொம்மன் வரலாற்றை
கதைப்பாடல்கள் வழி அறிதல்
o பாஞ்சாலங்குறிச்சியின்
வளத்தை அறிந்து போற்றுதல்
o சங்க இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாழ்வியலுடன்
ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT
:
Ø சங்க கால பெண்பாற் புலவர்களில்
ஒருவர் _________
Ø பாஞ்சாலங்குறிச்சியின்
மன்னன் யார்?
MOT
Ø தம் வயிற்றுக்கு தாய்
எதனை உவமையாகக் கூறுகிறார்?
Ø பாஞ்சாலங்குறிச்சியின்
கோட்டைகள் எவ்வாறு இருந்தன?
HOT:
Ø தாய் தன் வயிற்றை புலி
தங்கிய குகை என ஒப்பிட காரணம் யாது?
Ø வீரபாண்டிய கட்டபொம்மன்
பெரிதும் போற்றப்பட காரணம் என்ன?
கற்றல் விளைவுகள் ::
Ø ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை
உணர்ந்து அதன் பயன்பாட்டைக் கூறல்
Ø புறநானூற்று பாடலின் மையக் கருத்து
வெளிப்படும் வகையில் வாய்விட்டுப் படித்தல்
Ø கதைப் பாடல்களைப் படித்து நயங்களை அறிதல்
தொடர் பணி :
Ø சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதி வருக.
Ø உனது பெற்றோரிடம் வேறு நாட்டுப்புற கதைப் பாடல்களை அறிந்து எழுதி
வருக