7TH - TAMIL - NOTES OF LESSON - JULY - 4TH WEEK

 

  புதிய பாடக்குறிப்பேட்டின் படிநிலைகள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது

நாள்               :           25-07-2022 முதல் 29 -07-2022       

மாதம்                :           ஜூலை

வாரம்               :           ஜூலை – நான்காம்   வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  1. நால்வகை குறுக்கங்கள்

                                       2. திருக்குறள்                                            


அறிமுகம்                                 :

Ø   தமிழ் எழுத்துகளின் வகைதொகைகளை கேட்டு அதன் வழியே சார்பெழுத்துகளை அறிமுகம் செய்தல்

Ø  நீதிகதைகளைக் கூறல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  எழுத்துகள் குறுகி ஒலிக்கும் இடங்களை அறிந்து பயன்படுத்தல்

Ø  நீதி நூல்கள் வழியே கருத்துகளை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  தமிழ் எழுத்துகளின் வகை,தொகைகளை கூறல்

Ø  சார்பெழுத்துகளின் வகைகளை கூறல்

Ø  ஐகார குறுக்கம், ஒளகார குறுக்கம், மகர குறுக்கம், ஆய்த குறுக்கம். – பற்றி கூறல்

Ø  திருக்குறள் சிறப்பு கூறல்

Ø  அழுக்காறாமை, புறங்கூறாமை,அருளுடைமை,வாய்மை, இறைமாட்சி – அதிகாரங்கள் வழி அறப்பண்புகளை அறிதல்

நினைவு வரைபடம்                   :

                                                                                                  நால் வகை குறுக்கம்



திருக்குறள்



 

விளக்கம்  :

 

நால்வகை குறுக்கங்கள்

 

Ø  குறுக்கங்கள் குறைந்து ஒலிக்கும்

Ø  ஐகார குறுக்கம் :

o    ஐ என்னும் நெட்டெழுத்து முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை

o    இடையிலும் இறுதியிலும் ஒரு மாத்திரை வரும்

Ø  ஒளகார குறுக்கம் :

o    ஓள என்னும் நெட்டெழுத்து முதலில் மட்டுமே குறுகி வரும். ஒன்றரை மாத்திரை அளவு ஒலிக்கும்.

Ø  மகர குறுக்கம் :

o    மகர மெய் அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரை அளவு ஒலிக்கும்

Ø  ஆய்த குறுக்கம் :

o    ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரை அளவு ஒலிக்கும்.


திருக்குறள்

Ø  அழுக்காறாமை :

o    பொறாமை குறித்து கூறல்

Ø  புறங்கூறாமை :

o    புறங்கூறுதல் பற்றிய கருத்துகள்

Ø  அருளுடைமை :

o    அருள் செல்வத்தைப் பற்றிய கருத்துகள்

Ø  வாய்மை :

o    வாய்மை என்னும் அறம் குறித்து கூறல்

Ø  இறைமாட்சி :

o    அரசின் செயல் குறித்த கருத்துகள்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  தமிழ் எழுத்துகளின் வகை தொகை அறிதல்

o  சார்பெழுத்துகள் பற்றி அறிந்துக் கொள்ளல்

o  குறுக்கம் குறைந்து ஒலிக்கும் என அறிதல்

o  நால்வகை குறுக்கங்களையும் அறிந்து அதற்கான சொற்களையும் அறிதல்

o  திருக்குறள் பற்றி அறிதல்

o  திருக்குறள் பாடப் பகுதியில் உள்ள அதிகாரங்களை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

o  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  ஐகாரக் குறுக்கத்திற்கு நீ வழங்க கூடிய தொடர்கள் கூறுக.

Ø  சார்பெழுத்துகள் வகைகள் அறிந்து அதில் குறுகி ஒலிக்கும் வகைகளை கூறுக

Ø  உனது வீட்டின் அருகில் இருப்பவர் உன்னை விட உயர்ந்த பொருளை வாங்குகிறார் எனில் நீ வெளிப்படுத்தும் பண்பு யாது?

Ø  உன்னைப் பற்றி ஒருவர் இல்லாத ஒன்றை கூறும் போது நீ அதனை எவ்விதம் எடுத்துக் கொள்வாய்?

கற்றல் விளைவுகள்                  :

Ø   எழுத்துகளின் வகை தொகை அறிதல்

Ø   அவற்றில் குறுக்கங்கள் பற்றி அறிதல்

Ø   அறக் கருதுகளைக் கூறும் திருக்குறள் பற்றி அறிதல்

Ø   பாடப்பகுதியில் உள்ள திருக்குறள் கூறும் கருத்துகளை அறிதல்

தொடர் பணி                            :

Ø  ஐகார, ஒளகார குறுக்கம், மகர குறுக்கம், ஆய்த குறுக்கம் இவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களை எழுதி வருக.

Ø  உனது பாடப் பகுதியில் இடம் பெற்ற திருக்குறள் கருத்துகளின் அடிப்படையில் கதை ஒன்றினை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

                                               

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post