ஏழாம் வகுப்பு - தமிழ்
முதல் பருவம்
கட்டுரைகள்
இயல்-1
தாய்மொழிப்பற்று
முன்னுரை
உலகில் பல ஆயிரகணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள் எமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும் ஒன்று . இக்கட்டுரையில் எமது தாய்மொழி பற்றி விரிவாக காண்போம்.
தாய்மொழி
உலகத்திலே எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய தாய்மொழி மிகவும் உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும் அவர்களுக்கு சிறந்த உணர்வை எப்போதும் தரும்.
தாய்மொழிப் பற்று
· யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் – என்கிறார் பாரதியார்
o தாய்மொழி மீதான் பற்று ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானதாகும். எமது தாய்மொழியான தமிழ் பழமையானது பெருமை மிக்கது
· நாம் எமது கல்வியை தாய்மொழியில் கற்பது எமக்கு சால சிறந்ததாகும். இதுவே எமது அறிவை பெருக்கும்.
தாய்மொழிக் கல்வியும் சுய சிந்தனையும்
காந்தியடிகள் ஒருவன் தாய்மொழியில் கல்வி கற்றால் தான் சிறப்படையும் என்கிறார். தாய்மொழி வழியில் கல்வி பயிலும் போது புரிதல் எளிதாகிறது.
உலகத்தின் வளர்ந்த நாடுகள் தமது நாட்டு குழந்தைகளுக்கு தாய்மொழி மூலமாகவே கல்வியினை வழங்குகின்றன.
முடிவுரை:
அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்ள எமது தாய்மொழியில் கல்வி கற்பதனை நாம் எப்போதும் பெருமையாக கருத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறோம். நாம் நமது தாய்மொழியை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்.
இயல்-2 கடிதம் எழுதுக
சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம்
12,முகில் நகர்,
திருநெல்வேலி-1,
20-06-2022.
அன்புள்ள நண்பா,
நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவில் நான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.
ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு வரவேற்கிறது என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என அனைத்து இடங்களும் மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம் கிடைத்தால் சென்று வரவும்
இப்படிக்கு,
உனது அன்பு நண்பன்,
த.இளமாறன்.
உறைமேல் முகவரி:
சு.கவியரசு,
4,கம்பர் தெரு,
ஈரோடு
இயல்-3 கட்டுரை எழுதுக
நான் விரும்பும் தலைவர் காமராசர்
முன்னுரை:
கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் .வளமான தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழை மாணவர்கள் கல்விக்கண் திறந்தனர். பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும்.
இளமைக்காலம்:
காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பைசத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது.
அரசியல் :
தேசத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பின்னர் காங்கிரசில் இணைந்தார் 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார்
கல்விப்பணி:
பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார். மதிய உணவுத் திட்டத்தினைத் தொடங்கினார். பல கிராமங்களில் பள்ளிகளை துவங்கினார்.
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
· நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.
· கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.
முடிவுரை:
காமராஜர் தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.
CLICK HERE TO GET PDF