6TH - TAMIL - NOTES OF LESSON - JULY 3RD WEEK

 

நாள்                :           18-07-2022 முதல்  22-07-2022       

மாதம்                :           ஜூலை

வாரம்               :           மூன்றாம்   வாரம்                                        

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                                      1. காணி நிலம்

            


2. சிறகின் ஓசை

கருபொருள்                              :

Ø  இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்தல்

Ø  பறவைகளுக்கும், சுற்றுச்சுழலுக்கும் உள்ளத் தொடர்பினை அறிதல்

உட்பொருள்                              :

Ø  பாரதி பற்றியும், அவரின் கனவு இல்லத்தினையும் அறிதல்

Ø  பல்வேறு பறவைகள் பற்றியும், வலசைப் போதல் பற்றியும் அறிதல்

கற்றல் மாதிரிகள்                     :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், அரிச்சுவடிகள், தமிழ் அகராதி,காணொளிக் காட்சிகள்

கற்றல் விளைவுகள்                  :

 

Ø  பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களைத் திரும்பக் கூறல்

Ø  மற்றவர்களின் மொழிகள் உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நிலை, அவற்றில் காணப்படும் வேற்றுமைகளை,அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமையைப் பற்றி பேசுதல்.

ஆர்வமூட்டல்                             :

Ø  உனது வீட்டின் அமைப்பினை கூறுக. என வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டல்

Ø  உனது வீட்டின் அருகில் உள்ள பறவைகள் பற்றி கூறுக.

படித்தல்                                    :

Ø  செய்யுளினை பிழையின்றி வாசித்தல்

Ø  செய்யுள் பகுதியினை சீர் பிரித்து படித்தல்

Ø  புதிய வார்த்தைகளுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

 

நினைவு வரைபடம்                   :

காணி நிலம்




 

சிறகின் ஓசை

 

 

தொகுத்து வழங்குதல்              :

 

காணி நிலம்

Ø  ஆசிரியர் குறிப்பு :

o   பெயர் : பாரதியார்

o   இயற்பெயர் : சுப்ரமணியன்

o   சிறப்புப் பெயர் : பாரதி

o   எழுதிய நூல்கள் : பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு

Ø  பாரதியின் கனவு இல்லம்:

o   காணி அளவு நிலம் வேண்டும்.

o   அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.

o   அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்கவேண்டும்.

o   நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.

o   இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்

o   நிலவொளி வீச வேண்டும்

     சிறகின் ஓசை

Ø  பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.

Ø  பெரும்பாலும் நீர் வாழ் பறவைகள் வலசை போகின்றன.

Ø  பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

Ø  வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

o    தலையில் சிறகு வளர்தல்

o    இறகுகளின் நிறம் மாறுதல்

o    உடலில் கற்றையாக முடி வளர்தல்

Ø  சிட்டுக்குருவி அழிவிற்கு காரணங்கள்

Ø  பறவைகளை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை

வலுவூட்டல்                  :

Ø  வலையொளி மூலம்  காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்

 

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  காணி நிலம் கவிதையின் ஆசிரியர் _____

Ø  பெரும்பாலும் ______ பறவைகளே வலசைப் போகின்றன.

MOT :

Ø  பாரதி என பட்டம் வழங்கியவர் யார்?

Ø  பறவைகள் வலசைப் போகும் போது ஏற்படும் மாற்றங்கள் யாவை?

HOT

Ø  உங்கள் வீட்டின் அருகில் என்னென்ன மரங்கள் வேண்டும்? ஏன் அவை வேண்டும்?

Ø  பறவை இனங்கள் அழியாமல் காப்பற்ற நாம் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?

குறைதீர் கற்றல்                        :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்களைக் கொண்டு  பயிற்சி வழங்கி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்

எழுத்துப் பயிற்சி                      :

Ø   பாட நூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை வாசித்தல்

Ø   செய்யுளினை சீர்ப் பிரித்து  வாசித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

Ø   மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்

தொடர் பணி                            :

Ø  உனது கனவு இல்லத்தை வரைந்து வண்ணம் தீட்டி வருக.

Ø  பறவை படங்களைச் சேகரித்து படத் தொகுப்பு உருவாக்குக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post