நாள் : 11-07-2022 முதல் 15-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. எழுத்துகளின் வகை தொகை
2. சிலப்பதிகாரம்
கருபொருள் :
Ø தமிழ் எழுத்துகளின் வகை
தொகை அறிதல்
Ø இயற்கையின் சிறப்புகளை
அறிதல்
உட்பொருள் :
Ø தமிழ் எழுத்துகளின் வகை
தொகை அறிந்து பயன்படுத்துதல்
Ø சிலப்பதிகாரம் மூலம்
மழையின் பயனை அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், அரிச்சுவடிகள், தமிழ் அகராதி
கற்றல் விளைவுகள் :
Ø தமிழ் எழுத்துகளின் வகை
தொகை அறிதல்
Ø
இயற்கையின்
சிறப்புகளை இலக்கியங்கள் வழியாக அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø தமிழ் எழுத்துகளை கரும்பலகையில்
எழுதி அவற்றைக் கேட்டறிந்து ஆர்வமூட்டல்
Ø மழை உங்களுக்கு பிடிக்குமா?
மழையினால் ஏற்படும் பயன்கள் கூறுக.
படித்தல் :
Ø இலக்கணப் பகுதியினை பிழையின்றி
வாசித்தல்
Ø செய்யுள் பகுதியினை சீர்
பிரித்து படித்தல்
Ø புதிய வார்த்தைகளுக்கு
அகராதிக் கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
நினைவு வரைபடம் :
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
சிலப்பதிகாரம்
தொகுத்து வழங்குதல் :
தமிழ்
எழுத்துகளின் வகையும் தொகையும்
Ø தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்
247.
Ø உயிர் எழுத்துகள் 12
, மெய்யெழுத்துகள் 18
Ø உயிர் மெய்யெழுத்துகள்
216 , ஆய்த எழுத்து 1
Ø குறில் 1 மாத்திரை ,
நெடில் 2 மாத்திரை
Ø சொற்களில் உள்ள மாத்திரை
அளவுகள் அறிதல்
Ø மெய்யெழுத்துகளின் வகைகள்
அறிதல் : வல்லினம், மெல்லினம், இடையினம்
சிலப்பதிகாரம்
Ø சிலப்பதிகாரம் பற்றிய
நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø வெண்ணிலாவைப் போற்றுதல்
Ø கதிரவனைப் போற்றுதல்
Ø மாமழையைப் போற்றுதல்
லுவூட்டல் :
Ø வலையொளி மூலம் தமிழ்
எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
LOT
:
Ø தமிழில் உள்ள மொத்த எழுத்துகளின்
எண்ணிக்கை ______
Ø சிலப்பதிகாரத்தை இயற்றியவர்_____
Ø உலகம் ஐம்பூதங்களால்
ஆனது எனக் கூறியவர் _______
MOT :
Ø மெய்யெழுத்துகளின் வகைகள்
யாவை?
Ø சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டவை
யாவை?
HOT
Ø உனக்குப் பிடித்த பொருட்களின்
பெயர்களைக் கூறி அவை பெறும் மாத்திரைகளை அளவுகளை கூறுக.
Ø இயற்கையைப் போற்றும்
வழக்கம் ஏற்பட காரணமாக எவற்றை கருதுகிறீர்கள்?
குறைதீர் கற்றல் :
Ø
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்களைக் கொண்டு பயிற்சி வழங்கி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்
எழுத்துப் பயிற்சி :
Ø பாட நூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
படங்களில் காணப்படும் எழுத்துகளை வாசித்தல்
Ø
வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை வாசித்தல்
Ø
செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்
Ø மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்
தொடர் பணி :
Ø உனது வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி அந்த பெயர்களின்
மாத்திரை அளவு காண்க
Ø இயற்கைக் காட்சி ஒன்று வரைந்து வண்ணம் தீட்டி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை