6TH - TAMIL - 1ST TERM - COMPOSITION-PDF

 WWW.KALVIVITHAIGAL.COM

ஆறாம் வகுப்பு - தமிழ்

முதல் பருவம் 

கட்டுரைகள்

இயல்-

கடிதம் எழுதுக

விடுப்பு விண்ணப்பம்

அனுப்புதல்

        க.அஞ்சலாதேவி,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

பெறுதல்

       வகுப்பாசிரியர் அவர்கள்,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

ஐயா,

        வணக்கம்.எனது அண்ணன் திருமணம்  நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                        இப்படிக்கு, 

                                                                                                                        தங்கள் மாணவி,

                                                                                                                                 க.அஞ்சலாதேவி

இடம்: கோரணம்பட்டி

நாள்: 30-06-2022.

________________________________________________________________________________________________

இயல்-கட்டுரை எழுதுக

இயற்கையைக் காப்போம் 

முன்னுரை

           இயற்கை மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைச் சூழல்

       இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இயற்கை மாசடைதல்

            இயற்கை பல விதங்களில் மாசு அடைகிறது. மனிதர்களாகிய நாம் நம்முடைய சுயலாபத்திற்காக  பல்வேறு விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்.

·         நெகிழ்களோடு குப்பைகளை எரித்தல்.

·         நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கலக்குதல்.

·         வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தி நில மாசு ஏற்படுத்துகிறோம்.

இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

·         கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் கலக்காமை

·         நெகிழி மற்றும் குப்பைகளை எரிக்காமை

·         பொதுப் போக்குவரத்து பயன்பாடு

·         மின் சிக்கனம்,நீர் சிக்கனம்

·         இயற்கை உரங்கள் பயன்பாடு

முடிவுரை

    இயற்கையை பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தூய்மையான இயற்கையை வழங்கிடுவோம்.

_____________________________________________________________________________________________

இயல்-கட்டுரை எழுதுக

அறிவியல் ஆக்கங்கள்

முன்னுரை

            இன்று நாம் அறிவியல் ஆக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். எங்கும் அறிவியல் எதிலும் அறிவியல் என இவ்வுலகம் இயங்கி வருகிறது. நாள் தோறும் புது புது அறிவியல் ஆக்கம்  நிறைந்த செயல்பாடுகளும், கருவிகளும் வந்துக் கொண்டே உள்ளன,

மருத்துவத்துறை

            மருத்துவத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை நாம் காணலாம். முன்பெல்லாம் அறுவை சிகிச்சை எல்லாம் உடலை கிழித்து தான் செய்யப்பட்டது. இன்று சிறு கீறல் இல்லாமல் லேசர் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உடலின் பாகங்கள் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யபடுகிறது.

போக்குவரத்துத் துறை

            மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முன்பு கால்நடைகள் கொண்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. இன்று விரைவாக செல்லக் கூடிய அதி நவீன வாகனங்கள் அறிவியலின் ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகளாக உள்ளன.

தகவல் தொழில்நுட்பம்

   இன்று உலகம் இணைய வ்ழியில் நொடிப் பொழுதில் உலக நடப்புகளை அறிந்துக் கொள்ள இணைய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணையம் மூலம் உலகமே ஒரு கிராமம் போல மாறிவிட்டது.

முடிவுரை

            அறிவியலின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் மனித வளர்ச்சியின் ஒரு மைல் கல். இவற்றால் நன்மைகள் உண்டு எனினும் தீமைகளும் இருக்கச் செய்கின்றன. மனிதர்களாகிய நாம் நன்மை தரும் செயல்களை செய்து நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வோம்.

.

____________________________________________________________________________________

CLICK HERE TO GET PDF 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post