10TH - TAMIL - WEEKLY TEST - AUGUST 1ST WEEK - PDF

 

பத்தாம் வகுப்பு

தமிழ்  – வாரத்தேர்வு -7

பாடம் : இயல் : 3                                                                 மதிப்பெண்கள் : 40

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                            6×1= 6

I. ) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                          

1. 1. கூத்தராற்றுப் படை என வழங்கப்படும் நூல்------

அ) முல்லைப்பாட்டு ஆ) தனிப்பாடல் திரட்டு        இ) மலைபடுகடாம்   ஈ) நற்றிணை

2 காசிக்காண்டம் என்பது –

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்               

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்             

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

3. உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் எனக் கூறும் நூல்

அ) காசிக்காண்டம்  ஆ) விவேக சிந்தாமணி         இ) மலைபடுகடாம் ஈ) நற்றிணை

4. மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து – பழைய சோற்றினைப் பற்றி கூறும் நூல்

) குறுந்தொகை    ) மலைபடுகடாம்  ) முக்கூடற்பள்ளு          )  விவேக சிந்தாமணி

5. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்      ஆ) கூவிளம் புளிமா நாள்     இ) தேமா புளிமா காசு         ஈ) புளிமா தேமா பிறப்பு                                                        

6. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு         ) எழுவாய்         ) உவம உருபு     ) ரிச்சொல்

I) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:-                          3×2=6

( வினா எண் : 14 கட்டாயமாக விடையளிக்க வேண்டும் )

11. விடைக்கேற்ற வினா அமைக்க:-

அ. கொற்கையின் அரசர் அதிவீர ராமபாண்டியர்.

ஆ. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

12. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

13. ‘ இறடிப் பொம்மல் பெறுகுவிர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

14. ‘ அறிவு ‘ என முடியும் குறளை எழுதுக.

IV) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                          3×2=6

15. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

16. கலைச்சொல் தருக:- அ. EPIC LITERATURE             ஆ. FOLK LITERATURE

16. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ. சிலை – சீலை              ஆ. மலை - மாலை

17. பழமொழியை நிறைவு செய்க.

அ. ஒரு பானை ____________                 ஆ. அளவுக்கு மீறினால் ______________

V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                             2×3=6

( வினா எண் – 18 கட்டயமாக விடையளிக்க வேண்டும் )

பிரிவு -1

18. “ விருந்தினனாக “ எனத் தொடங்கும் காசிக்காண்டப் பாடலை அடிபிறழாமல் எழுதுக

19.         அ) புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

            ஆ. திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

            இப்படியாகக் காலமாற்றம் , தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக

20. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது.

பிரிவு -2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;-                               2×3=6

வினா எண் : 23 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

21. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக..

23. “ சிறு தாம்பு தொடுத்த “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை அடிமாறாமல் எழுதுக.

24. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

     கோலோடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

VI) கீழ்க்காணும்  வினாவிற்கு  விடையளி:-                                  1×4=4

24. அ.) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-

 

 

 

 

 

 


VII) அனைத்து வினாக்களுக்கு விடையளி                                                  1×6 = 6

25.அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

(அல்லது )

26. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

CLICK HERE TO GET PDF



Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post