அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். சென்ற கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு வாராவாரம் வாரத்தேர்வு வினாக்களை கொடுத்து வந்தோம். இந்த ஆண்டும் முழுபாடத்திட்டத்திற்கு தேவையான கற்றல் வளங்களை நமது வலைதளம் விரைந்து செய்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இனி வாரந்தோறும் நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கு தேவையான வினாத்தாள் PDF வடிவில் வழங்க உள்ளோம். ஆசிரியர்கள் அதனைப் பயன்படுத்தி வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் வைக்க மிகுந்த உதவியாக இருக்கும். மாணவர்களை நாம் ஆரம்பத்திலிருந்தே தயார்ப்படுத்த இந்த வினாத்தாள்கள் உதவிகரமாக இருக்கும். மேலும் இந்த வினாத்தாளின் சிறப்பு காகித பயன்பாடு முடிந்த வரை குறைப்பது. அந்த வகையில் ஒரு தாளில் முன்பின் என வினாத்தாளினை நகல் எடுக்கும் போது அதனை இரு மாணவர்களுக்கு வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களாகிய உங்களுக்கு சிறிது பொருட்செலவினை குறைப்பதற்கு வழிவகுக்கும். இனி வாரந்தோறும் பாடக்குறிப்பேடுடன் வாரத்தேர்வு வினாத்தாள் உங்களுக்கு பகிரப்படும். அதனைக் கொண்டு மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து தமிழ்ப் பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண் பெற வைக்கவும். ஜுன் 13 அன்று பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் வாரம் நல்லொழுக்கக் கல்வி நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் 20-06-2022 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான்காம் வாரம் முதல் நாம் மாணவர்களுக்கு இந்த வாரத்தேர்வு வினாத்தாளினைக் கொடுத்து பயிற்சி வழங்கவும். தமிழ் ஆசிரியர்களுக்கு ஏதேனும் இது சார்ந்து பதிவேடுகள் வேண்டுமென்றால் கூறவும். அதற்கான பதிவேடுகளும் நமது வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி நீங்கள் பதிவேடு தயாரிப்பதற்கு எளிமையாக இருக்கும். என்றும் கல்விப்பணியில் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்.
சரி நாம் ஜூன் 4 வது வாரம் முதல் நமக்குத் தேவையான வாரத்தேர்வுத்தாளினைப் பதிவிறக்கம் செய்வது எப்படி எனக் காணலாம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாரத்திற்கும் கீழ் CLICK HERE என்ற வார்த்தையை அழுத்துவதன் மூலம் உங்களுக்கான சிக்கன வினாத்தாளினை பதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்பு
தமிழ்
வாராந்திரத் தேர்வு வினாத்தாள்
ஜூன் - நான்காம் வாரம்
( 27-06-2022 )
ஜூலை - முதல் வாரம்
வாரத்தேர்வு - வினாத்தாள்
( 04- 07- 2022 )
ஜூலை - முதல் வாரம்
வாரத்தேர்வு - வினாத்தாள்
( 11 - 07- 2022 )