10TH - TAMIL - UNIT 9 - SLOW LEARNERS GUIDE

 

இளந்தமிழ்  வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் - 9
உயிரின் மொழி

 

இயல் – 9

 அன்பின் மொழி

மனப்பாடப் பாடல்                                                 தேம்பாவணி

     





        நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே

                                                                              வீரமாமுனிவர்

 

மதிப்பீடு

) பலவுள் தெரிக:-

1. ‘ இவள் தலையில் எழுதியதோ

    கற்காலம் தான் எப்போதும் ‘ – இவ்வடிகளில் கற்காலம் என்பது

அ) தலைவிதி    ஆ) பழைய காலம்     இ) ஏழ்மை   ஈ) தலையில் கல் சுமப்பது

2. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது  _____

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்      

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

) அறிவியல் முன்னேற்றம்                                 

) வெளிநாட்டு முதலீடுகள்

3. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று _____,______ வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக           ) எலிசபெத் தமக்காக

) கருணையன் பூக்களுக்காக                ) எலிசபெத் பூமிக்காக

4. வாய்மையே மழைநீராகஇத்தொடரில் வெளிப்படும் அணி___________

) உவமை        ) தற்குறிப்பேற்றம்                     ) உருவகம்    ) தீவகம்

5. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது ____________

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்               

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

) குறுவினா

1. தீவக அணிகளின் வகைகள் யாவை?

Ø  முதல் நிலை தீவகம்

Ø  இடை நிலை தீவகம்

Ø  கடை நிலை தீவகம்

2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு. அதற்குரிய காரணமும் உண்டு.

3. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

 

4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்புக்கு அறன், பண்புக்கு பயன்

 

5. ‘ வாழ்வில் தலைக்கனம்’, ‘ தலைக்கனமே வாழ்வு ‘ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

சித்தாளுவின் வாழ்வினைக் கூறுகிறார் நாகூர் ரூமி.

 

) சிறு வினா.

1. ‘ சித்தாளின் மனச்சுமைகள்

    செங்கற்கள் அறியாது ‘ – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

 

2. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

Ø  பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.

Ø  பார்வையற்றவர்  போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல்.

Ø  தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்.

 

 

 

3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

Ø  உயிர் பிழைக்கும் வழி

Ø  உடலின் தன்மை

Ø  உணவை தேடும் வழி

Ø  காட்டில் செல்லும் வழி

 

4. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

 

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

 

ஈ) நெடுவினா

1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

Ø  பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது.

Ø  கருணையனை தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழித் தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

 

2. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

 

வாசிப்போம்                                          நேசிப்போம்

இதழ் வெளியீடு

இதழ்               :           ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

எழுத்தாளர்        :           ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் )

            இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில் வெளிவரும்.

இப்போது பரபரப்பான விற்பனையில்.....

இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு.

உங்கள் பிரதிக்கு முந்துங்கள்…..

நன்றி

 

3. அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

          கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

          எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது. .

 

மொழியை ஆள்வோம்

) மொழிபெயர்க்க:-

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸ்டன் சர்ச்சில்

 

) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-

 

தாமரை இலை நீர்போல

என் நண்பன் தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும் பழகுவான்

 

மழைமுகம் காணாப் பயிர்போல               

 

தாயை இழந்த கருணையன் மழைமுகம் காணாப் பயிர் போல வாடினான்

 

கண்ணினைக் காக்கும் இமைபோல

தாய் தன் மகளை கண்ணினைக் காக்கும் இமைபோல பாதுகாத்து வந்தாள்.

சிலை மேல் எழுத்து போல

இளமையில் கற்ற கல்வி சிலைமேல் எழுத்துப் போல நிலையானது.

 

இ ) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக:-

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

விடை :

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன் ‘ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான் ‘ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன,

 

 

 

ஈ) வாழ்த்துரை எழுதுக.

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

v  அனைவருக்கும் வணக்கம்.

v  நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன்.

v  சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி.

v  மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும்.

v  சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

உ ) குறுக்கெழுத்துப் போட்டி

 

1 கா

லை

 

2 தே

மா

 

ள்

 

 

ணி

ர்

 

தி

 

டு

 

3கு

கா

ரை

த்

நே

4 மூ

ட்

கு

 

று

பா

கீ

ர்

ங்

5 எ

க்

ழ்

ந்

ம்

ம்

ங்

கீ

ப்

கி

7 தி

ரு

மி

தொ

6 தே

 

8செ

க்

பா

ல்

ங்

9 தி

கை

 

10சி

 

ய்

 

11 க

லி

த்

தொ

12 கை

ங்

 

13மெ

 

ள்

 

ளை

த்

க்

14க

ர்

யா

வை

15ஔ

ள்

னை

கி

ம்

ரு

16 உ

 

 

17 பி

18 வி

ளை

 

இடமிருந்து வலம்

1. சிறுபொழுதின் வகைகளுள் ஒன்று(2) – காலை

2. நேர் – நேர் – வாய்பாடு (2) – தேமா

11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று (5) – கலித்தொகை

14. மக்களே போல்வர்(4)- கயவர்.

மேலிருந்து கீழ்

1. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது(5) – கார்காலம்

2. மொழிஞாயிறு (9) – தேவநேயப்பாவனர்

3. நல்ல என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் (5)- குறுந்தொகை

4. கழை என்பதன் பொருள்(4) – மூங்கில்

7. மதியின் மறுபெயர், இது நிலவையும் குறிக்கும் (4) – திங்கள்

10. குறிஞ்சித் திணைக்குரிய விலங்கு (4) – சிங்கம்

12. கைக்கிளை என்பது புறத்திணைகளுள் ஒன்று (4)

வலமிருந்து இடம்

15. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் – ஆசிரியர் (4) – ஒளவையார்

16. மதிமுகம் உவமை எனில் முகமதி (5) – உருவகம்

கீழிருந்து மேல்

5. விடையின் வகைகள் (3) – எட்டு

6. வீரமாமுனிவர் இயற்றிய நூல் (5) – தேம்பாவணி

8. பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் (4) – செங்கீரை

9. முப்பால் பகுப்பு கொண்ட நூல்களுள் ஒன்று (6) – திருக்குறள்

13. மன்னனது உண்மையான புகழை எடுத்துக் கூறுவது (7) – மெய்க்கீர்த்தி

17. 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று (7) – பிள்ளைத்தமிழ்

18. செய்தவம் – இலக்கணக் குறிப்பு (5) – வினைத்தொகை

ஊ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;-

          கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்

            கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை

            காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை

            செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

கம்பன்

உமறுப்புலவர்

காசிம் புலவர்

குணங்குடியார்

சேகனாப் புலவர்

செய்குதம்பி பாவலர்

எ) விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

ஏ) நன்றியுரை எழுதுக.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘ மரம் நடு விழாவுக்கு ‘ வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் ‘ பசுமைப் பாதுகாப்புப் படை ‘ – சார்பாக நன்றியுரை எழுதுக.

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 மொழியோடு விளையாடு

அ) விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க


            


சேலம் மாவட்டம், போக்குவரத்துக் காவல் துறையினரால் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவிருக்கிறது. “ சாலை பாதுகாப்பு “ என்பது நம்முடைய வாழ்க்கை முறை என்பதனை உணர வேண்டும்.

            சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு போக்குவரத்து காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. சாலை விதிகளை மதித்து நடக்கும் போது விபத்துகள் குறையும். மாணவ, மாணவியர்கள் 18 வயது பூர்த்தியடையாமல் வாகனம் ஓட்டக் கூடாது என விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டது.

 

ஆ) கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-

ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

-

-

-

0

௧௧

௧௨

௧௩

௧௪

௧௫

௧௬

௧௭

௧௮

௧௯

0

௨௧

௨௨

௨௩

௨௪

௨௫

௨௬

௨௭

௨௮

௨௯

0

௩௧

-

 

இ) அகராதியில் காண்க:-

 

குணதரன்

நற்குணம் உள்ளவன்

செவ்வை

நேர்மை,மிகுதி

நகல்

சிரிப்பு,ஏளனம்

பூட்கை

கொள்கை,மனவுறுதி

 

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி     

என் லைக்கை பற்றி எழுது என்றான்

பெறுபவர் என் பசியைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் அறத்தில் வணிக நோக்கம் கூடாது என்று





 

 

உ) நிற்க அதற்குத் தக.

ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்.உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள். சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் யாசகம் செய்கிறோம். தொல்லை வேன்டாம் என்று கருதி, வேண்டா வெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்.

நீங்கள் செய்த,பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.

 

1.      வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்து உதவியபோது

1.      இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு, அவருக்கு மகிழ்ச்சி

2.     உறவினருக்கு என் அம்மா பணம் கொடுத்து உதவியபோது

2.     கல்லூரி படிப்பை தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு.

3.     முதியவருக்கு, பயணச்சீட்டு எடுத்து கொடுத்தேன்

3.     அவரது முகத்தில் காணப்பட்ட, மனநிறைவும், மனஅமைதியும் மகிழ்ச்சியும், என்னை மகிழச் செய்தது.

4.     ஒருவேளை உணவு வழங்கியபோது

4.     பசிப்பிணி தீர்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது

5.     மயங்கி விழுந்த முதியவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினேன்.

5.     என்னாலும், உதவி செய்ய முடியும் என்ற உணர்வு எழுந்தது

 

ஆக்கம்

திரு.வெ.ராமகிருஷ்ணன்

தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி.

  தொடர்புக்கு : 8667426866, 8695617154

 இயல் - 9க்கான இளந்தமிழ் சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 30 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

1 Comments

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

  1. தமிழாசிரியப் பெருமக்களுக்கு காலத்தினால் செய்யும் மிக்க பேருதவி தங்கள் சேவை...பணி சிறக்க வணக்கத்துடன் வாழ்த்துகள்..நன்றி.

    ReplyDelete
Previous Post Next Post