இளந்தமிழ்
பாடத்திற்கான வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 8
பெருவழி
அ) பலவுள் தெரிக:-
1. மேன்மை தரும் அறம் என்பது______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது
ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
2. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பிடுவது _____
அ) காலம் மாறுவதை ஆ) வீட்டைத் துடைப்பதை
இ) இடையறாது அறப்பணி செய்தலை ஈ) வண்ணம் பூசுவதை
3. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.
அ) உதியன்;சேரலாதன் ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்
இ) பேகன்;கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி
4. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் _________
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
ஆ) குறுவினா
1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
அ) அடியெதுகையை எடுத்தெழுதுக..
ஆ) இலக்கணக் குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க
அடிஎதுகை: கொள்வோர் – உள்வாய்
இலக்கணக் குறிப்பு: கொள்க,குரைக்க – வியங்கோள் வினைமுற்று
2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
Ø வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா.
Ø எ.கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
3. குறிப்பு வரைக:- அவையம்
Ø அறம் கூறும் மன்றங்கள்
Ø துலாக்கோல் போல் நடுநிலையானது
Ø மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.
4. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்
5. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக. தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கும்,துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியது.
இ) சிறு வினா.
1. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
Ø வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.
Ø நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்
2. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Ø அகவல் ஓசை பெற்று வரும்.
Ø ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்
Ø ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
Ø வெண்டளை,கலித்தளை விரவி வரும்.
Ø மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்
Ø ஏகாரத்தில் முடிவது சிறப்பு
3. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )
Ø சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் அதை பின்பற்றுதல் வேண்டும்.
Ø பொது போக்குவரத்து பயன்பாடு
Ø மரம் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
Ø ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய மாற்றம் வேண்டும்.
4. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி ஒரு பத்தி அமைக்க.
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின் கந்தை துணியால் துடைத்து, சாயக் குவளையில் கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும்.
ஈ) நெடுவினா
1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
சேலம்
03-03-2021
அன்புள்ள மாமாவுக்கு,
நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.
நன்றி,வணக்கம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அ அ அ அ அ அ அ .
உறைமேல் முகவரி;
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு,,நாமக்கல்.
2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை;அறிக!
-கண்ணதாசன்.
மோனை நயம்:
செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.
கவிஞன் கருப்படு
எதுகை நயம்:
செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.
கருப்படு உருப்பட
சந்த நயம்:
இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.
இயைபு நயம்:
இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.
தெய்வம் செல்வம்
முரண் நயம்:
முரண்பாடாக அமைவது முரண்.
ஆக்கல் × அழித்தல்
மொழியை ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
Once upon a time there were two beggars in Rome. The first begger used to cry in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.
விடை:
முன்பு ஒரு காலத்தில் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவன் நகரத் தெருக்களில் பிச்சை எடுக்கும் போது, “கடவுள் யாருக்கு உதவுகிறாரோ அவனே உதவியைப் பெறுவான்” என்று இறைஞ்சினான்.மற்றொருவன்,” அரசர் யாருக்கு உதவி செய்கிறாரோ அவனே உதவியைப் பெறுவான்” என்று இறைஞ்சினான்.
இது நாள்தோறும் தொடர்ந்தது.
ரோமப் பேரரசர் இதை அடிக்கடி கேள்விப்பட்டார்.
ரோம் நகரத் தெருக்களில் அரசரின் புகழை பரப்பியவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார்தங்க கட்டிகள் நிரப்பிய பெரிய ரொட்டியைத் தயார் செய்து அவனுக்குக் கொடுக்குமாறு ஆணையிட்டார்.ரொட்டி கனமாக இருந்ததால் அவனது நண்பனைக் கண்டவுடன் அதை அவன் விற்று விட்டான்.
மற்றொருவன் அந்த ரொட்டியை வீட்டிற்கு எடுத்து வந்தான்.
ரெட்டியை வெட்டிப் பார்த்தபோது அதில் மின்னும் தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டான்.
கடவுளுக்கு நன்றி கூறினான்.
அன்றிலிருந்து பிச்சை எடுப்பதை நிறுத்தி விட்டான்.
மற்றொருவனோ நகரத் தெருக்களில் பிச்சை எடுப்பதைத் தொடர்ந்தான். அவனின் நடத்தையால் பேரரசர் குழம்பினார்.
அவனை அரசர் முன் வரச்செய்து அவனிடம்,”நான் உனக்கு அனுப்பிய ரொட்டித் துண்டுகளை என்ன செய்தாய்?”என்று கேட்டார்.
“அது கனமாகவும் சரியாக வேகாமலும் இருந்ததால் அதை என் நண்பனிடம் விற்று விட்டேன்” என்றான் அவன்.
பிறகு,”கடவுள் யாருக்கு உண்மையிலேயே உதவுகிறாரோ, அவனே உண்மையில் உதவியைப் பெறுகிறான்” என்றார் பேரரசர்.
அத்துடன், அந்தப் பிச்சைக்காரனை அரண்மனையை விட்டு வெளியேற்றினார்.
ஆ) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
1. மனக்கோட்டை - தேர்தலில் வேட்பாளர் ஆனவுடன் முதலமைச்சர் ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டாதே
2. அள்ளி இறைத்தல் – கர்ணன் எளியவர்களுக்கு அள்ளி இறைத்து கொடை தர்மம் செய்தான்.
3. கண்ணும் கருத்தும் – தமிழ்ச்செல்வன் கண்ணும் கருத்துமாய் படித்து போட்டித் தேர்வில் வென்றான்
4. ஆறப்போடுதல் – கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்
இ) பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;-
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.
விடை:
“ தம்பி? எங்கே நிற்கிறாய்?
“ நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணே! எதிர்ப்புறம் உள்ள ஒரு தேநீர் கடையில் இருக்கிறது.
“ அங்கே தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படிச்சிக்கிட்டு இரு. நான் விரைவாக வந்துடுவேன்”
“ அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா ! அவனைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது”
“ அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கான்.உங்க ஊருக்கு அவனைக் கூட்டிக்கிட்டு வருகிறேன்”
“ சிறு வயதில் பார்த்தது அண்ணா! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”
“ இப்போது உயரமாக வளார்ந்துட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது! எங்களுடன் வருவான் பாரு!
“ சரி, கைப்பேசியை வை. நான் கிளம்பிவிட்டேன்”.
ஈ) கடிதம் எழுதுக.
உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
, சேலம் – 636001.
ஐயா,
பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல் – சார்பு
வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இடம் : சேலம் இப்படிக்கு,
நாள் : 04-03-2021 தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ.
உறை மேல் முகவரி:
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
, சேலம் – 636006
உ) நயம் பாராட்டுக:-
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- வள்ளலார்.
திரண்ட கருத்து:
கோடையில் இளைப்பாறா உதவும் மரமாகவும்,அதன் நிழலாகவும்,கனியாகவும் இருப்பவனே! ஓடையில் ஓடும் சுவைதரும் நீராகவும், மலர்ந்த மணமலராகவும்,மெல்லிய பூங்காற்றாகவும் திகழ்பவனே! விளையாட்டுப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவா! பலர் கூடும் பொது இடத்தில் நடனம் ஆடுகின்ற இறைவா! என் பாமாலையை ஏற்று அருள் புரிவாயாக என வள்ளலார் இறைவனை வணங்குகிறார்.
மையக் கருத்து :
எல்லாமுமாகத் திகழும் இறைவனை வாழ்த்தி வணங்குவதே இப்பாடலின் மையக் கருத்து.
சொல் நயம் :
குளிர்தருவே,தருநிழலே,சுகந்த மணமலரே ,மெல்லிய பூங்காற்றே ஆகிய அழகான சொற்கள் பாடலுக்கு நயம் கூட்டுகின்றன.
பொருள் நயம் :
“ சுகந்த மணமலரே. மென் காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே, ஆடையிலே எனை மணந்த மணவாளா “ ஆகிய சொற்கள் ஆழமான பொருளை உடையன.
சந்த நயம் :
இப்பாடல் பாடுவதற்கு ஏற்ற சந்த நயத்துடன் அமையப் பெற்றுள்ளது.
மோனை நயம் :
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கோடை - கொள்ளும் வகை
மேடையிலே – மென்காற்றிலே
எதுகை நயம் :
முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
கோடையிலே - ஓடையிலே
உகந்த - சுகந்த
முரண் நயம் :
முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.
கோடையிலே X குளிர்தருவே
இயையு நயம் :
பாடலில் இறுதி எழுத்தோ. அசையோ, சீரோ, இயைந்து வருவது இயைபு நயம்.
கனியே - மலரே
காற்றே - பயனே
அணிநயம் :
இபாடலில் இறைவனை மரமாகவும், நிழலாகவும்,கனியாகவும், தண்ணீராகவும், மணமலராகவும், பூங்காற்றாகவும்,சுகமாகவும் உருவகம் செய்து பாடியுள்ளமையால், இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
பா வகை :
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பா வகையைச் சார்ந்துள்ளது.
மொழியோடு விளையாடு
அ) கண்டுபிடித்து எழுதுக:-
ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....
ஒன்று
கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
இரண்டு
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்
மூன்று
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்
நான்கு
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்
ஐந்து
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்
ஆறு
படைக்குடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
ஏழு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
எட்டு
கோயில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
பத்து
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
ஆ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-
கானடை
கான் அடை – காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
வருந்தாமரை
வரும் + தாமரை – வருகின்ற தாமரை மலர்
வரும் + தா + மரை – தாவுகின்ற மான் வருகிறது
வருந்தா + மரை – துன்புறாத மான்
பிண்ணாக்கு
பிள் + நாக்கு – பிளவுப்பட்ட நாக்கு
பிண்ணாக்கு – கடலை,எள் அரைக்கும் போது கிடைப்பது
பலகையொலி
பல + கையொலி – பல கைகளால் சேர்ந்த ஒலி
பலகை + ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
இ) செயல் திட்டம்:
ஒளவையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் ஆத்திசூடி ஆகிய இரண்டின் பத்துத் தொடர்களை ஒப்பிட்டு அதன் கருத்துகள் குறித்து எழுதுக.
ஒளவையார் ஆத்திச்சூடி
பாரதியார் ஆத்திசூடி
அறஞ் செய விரும்பு
தருமம் செய்ய நீ விரும்புவேண்டும்
அச்சம் தவிர் – பயத்தினை போக்க வேண்டும்
2. ஆறுவது சினம்
கோபத்தை தவிர்க்க
ஆண்மை தவறேல் – மனவலிமை இழக்காதே
3. இயல்வது கரவேல்
யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
இளைத்தல் இகழ்ச்சி – பின் வாங்குதல் இகழ்வதர்கு உரியது.
4. ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
ஈகை திறன் – கொடுத்தலை மனதில் கொள்
5. உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே.
உடலினை உறுதிசெய் – உடம்பை திடமாக்கு
6. ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
ஊண்மிக விரும்பு
உணவு உண்ண விரும்பு
7. எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
எண்ணுவ துயர்வு
உயர்வாக எண்ண வேண்டும்
8. ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
ஏறுபோல் நட – நிமிர்ந்து செல்
9. ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.
ஐம்பொறி ஆட்சிகொள் – ஐம்புலனையும் அடக்கி ஆள்
10. ஒப்புரவு ஒழுகு
உலக நடைமுறைகளை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
ஒற்றுமை வலிமையாம் – ஒற்றுமையே பலம்
ஈ ) அகராதியில் காண்க.
ஆசுகவி
கொடுத்தப் பொருளைப் பற்றி உடனே பாடும் பாட்டு
மதுர கவி
சொற்சுவை,பொருட்சுவை நிரம்பிய பாட்டு
சித்திர கவி
சித்திரத்தில் அமைப்பதற்கேற்ப பாடும் பாட்டு
வித்தாரகவி
விரித்துப் பாடும் பாட்டு
உ) கலைச்சொல் அறிவோம்
Belief
நம்பிக்கை
Renaissance
மறுமலர்ச்சி
Philosopher
மெய்யியலாளர்
Revivalism
மீட்டுருவாக்கம்
ஊ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
என்னை எழுது என்று சொன்னது
இந்தக் காட்சி
கொடுப்பவன் என் கொடையைப் பற்றி எழுது என்றான்
பெறுபவன் என் வறுமையைப் பற்றி எழுது என்றான்
நான் எழுதுகிறேன் கொடையை தடுக்காதே என்று
எ) நிற்க அதற்குத் தக.
நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ,உடன் பிறந்தவருடனோ எதிர் பாராமல் சச்சரவு ஏற்படுகிறது…. இந்த சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களை பேசுகிறோம்; கேட்கிறோம்;கை கலப்பில் ஈடுபடுகிறோம்; இது காறும் கற்ற அறங்கள் நமக்கு கைகொடுக்க வேண்டாமா?
மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.
1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்
2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்
2. மன அமைதிப் பெறலாம்.
3. உண்மை பேசுதல்
3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்
4. உதவி செய்தல்
4. மன மகிழ்ச்சி கிடைக்கும்
5. அன்பாய் இருத்தல்
5. அனைவரும் நண்பராகிவிடுவர்
இயல் - 8க்கான இளந்தமிழ் சிறப்பு வழிகாட்டியினைப் பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்