இளந்தமிழ் வழிகாட்டி
சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 2022 - 23 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள். நமது வலைதளம் மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவர்கள் தமிழ்ப்பாடத்தேர்வில் தேர்ச்சிப் பெறுவதற்கான அனைத்து கற்றல் வளங்களையும் பார்த்து பார்த்து தாமே சுயமாக செய்து வருகிறோம். மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவதற்கான அனைத்து கற்றல் வளங்களும் நமது தமிழ்விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம் மூலம் வழங்கி வருகிறோம்.
தற்போது பத்தாம் வகுப்பில் பயிலும் சராசரி மாணவர்களும் , மெல்லக் கற்கும் மாணவர்களும் தேர்வில் தேர்ச்சிப் பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டியினை வடிவமைத்து வருகிறோம். சென்ற ஆண்டு நமது தமிழ்விதை வலைதளம் மூலம் வெளியிட்ட குறைக்கப்பட்ட தமிழ்ப்பாடத்திற்கான " மெல்லக் கற்போர் சிறப்பு வழிகாட்டி " மூலம் பயின்ற பல மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் 70க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றதாக பல ஆசிரியர்கள் எனக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேப் போன்று நமது வலைதளம் மூலம் வெளியிடப்பட்ட பல வகைப்பட்ட மாதிரி வினாத்தாள்களில் 75% சதவீத வினாக்கள் இடம் பெற்றதாக மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் கூறினர். அவர்களின் இந்த சொல்லுக்காக தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் உழைத்துக் கொண்டு இருக்கிறது. இனி மேலும் உழைக்கும். இதன் பொருட்டு இந்த ஆண்டு முழுப்பாடத்திட்டத்திற்கான சிறப்பு வழிகாட்டியினை வெளியிடுங்கள் என பலரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது வலைதளமானது முழுப்பாடத்திற்குத் தேவையான சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் என இருவருக்கும் பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டியினை மாணவர்களுக்கு நகல் எடுத்துக் கொடுத்து அவர்களின் கற்றலுக்கு ஊக்கப்படுத்தும்.
வழிகாட்டியின் சிறப்புகள்:-
- எளிய முறையில் அரசு விடைக்குறிப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- எந்த ஒரு வினாவும் விடுபடவில்லை
- பாடநூலில் உள்ள ஒவ்வொரு வினாக்களுக்கும் எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
- பாடநூல் மதிப்பீடு வினாக்களிலிருந்து வரிசையாக புத்தகத்தில் உள்ள வினாக்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு இயலுக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு இயலிலும் மனப்பாடப்பாடலுக்கு விரைவுத் துலங்கல் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
- விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் மாணவர்கள் மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடலுக்குப் பொருந்திய காட்சி அமைப்புகளுடன் காணொளியினைக் காண முடியும்.
- ஒவ்வொருப் பாடப்பகுதியிலும் உள்ள செயல் திட்டத்தினை வினாவாக மாற்றி அமைத்து அதனை சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் என இரு பிரிவினரும் பாடங்களை பயிலலாம்.
- கட்டுரை ஏட்டில் கட்டுரை எழுத இப்பகுதியில் உள்ள கட்டுரை வினாக்களை கொண்டு அனைத்து மாணவர்களையும் எழுத வைக்கலாம். ( மீத்திற மாணவர்கள் இந்த கட்டுரைப் பகுதியினை கட்டுரை ஏட்டில் எழுத மட்டும் பயன்படுத்தவும் )
- காகிதப் பயன்பாடு குறைக்கும் வண்ணமும், பொருளாதார சூழ்நிலையை மனதில் கொண்டும் இந்த வழிகாட்டியானது தாளின் இரு புறமும் வரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இயலில் ஏதேனும் ஒரு பகுதி விடுபட்டாலும் அடுத்த இயலின் பகுதியினை பதிவிறக்கம் செய்ய்ம் வண்ணம் அடுத்தடுத்த இயல்களின் இணைய இணைப்பு விரைவுத் துலங்கல் குறியீடுகளாக வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அந்த விரைவுத் துலங்கள் குறியீட்டைப் பயன்படுத்தி.
- தமிழ்விதையின் பத்தாம் வகுப்புக்கென உருவாக்கப்பட்ட பாடப்பகுதிக்கு உரிய காணொளி காட்சிகளின் வலையொளிப் பக்கங்கள் விரைவுத் துலங்கள் குறியீடுகளாய் வழங்கப்பட்டுள்ளது.
- படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது ( நான்கு படிவங்கள் )
- இந்த வழிகாட்டியானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயன் அளிக்கும்.
- இந்த வழிகாட்டியினை நீங்கள் நமது வலைதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வழிகாட்டியினைப் பகிராமல் இந்த இணைய இணைப்பினை பகிர்ந்து உதவும் படி அன்புடன் வேண்டுகிறேன்.
- ஒவ்வொரு இயலும் பதிவிறக்கம் செய்து அதில் மாணவர்களிடம் கொடுத்து அதில் பக்க எண் இட்டுக் கொள்ளவும். பின் அந்த பக்க எண்களை INDEX பக்கத்தில் எழுதிக் கொள்ளவும். முகப்புப் பக்கத்தில் எண்கள் இடுவதன் மூலம் எந்த இயல் எந்த பக்கத்தில் உள்ளது என்பதனை எளிதில் அறியலாம்.
- உங்களின் தொடர்ச்சியான ஊக்கமும்,தேவையும் எங்களை மேலும் உழைக்கத்தூண்டுகிறது. அதனால் இந்த இணைய இணைப்பினை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், நீங்கள் அங்கம் வகிக்கும் உங்களது சமூக ஊடகங்கள், சமூக வலைதளப் பக்கங்கள், முகநூல் பக்கங்கள் என அனைத்துப் பக்கங்களிலும் இந்த இணைப்பினை பகிரவும். தமிழ் நாட்டின் கடைக்கோடி மாணவர்களுக்கும் இவை சென்றடைய வேண்டும். உங்களின் ஆதரவு தொடர்ந்து இருந்துக் கொண்டு இருப்பின் நிச்சயம் இது அனைத்து மாணவர்களையும் சென்றடையும்.
- வேண்டுகோள் : இதில் பிழைகள் அல்லது குறைகள் காணப்பட்டால் தயவுக் கூர்ந்து அதனை எனக்கு தெரியப்படுத்தவும். ஏனெனில் நான் தட்டச்சு செய்யும் போது பிழைகள் ஏற்பட்டு இருக்கலாம். அனைத்து சரியாக உள்ளது என என்னால் கூற இயலாது. முடிந்தவரை நான் அறிந்தவரையில் 99.99% எனது நினைவுக்கு எட்டிய வரை சரியாக இருக்கும் என நம்பிகிறேன். இருப்பினும் உங்கள் மூலம் பிழைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. ஆகவே இதில் பிழைகள் அல்லது வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் தயவுக் கூர்ந்து 8695617154 அல்லது 8667426866 என்ற எண்ணிற்கு WHATSAPP செய்யவும். மேலும் இந்த இரு எண்ணையும் நீங்கள் இருக்கும் குழுவில் இணைத்துக் கொண்டால் அதிலும் கற்றல் வளங்கள் இணைப்புகள் பகிரப்படும். மேலும் உங்கள்து படைப்புகள் நமது வலைதளத்தில் பதிவிட விரும்பினால் thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது படைப்புகளை அனுப்பவும். உங்கள் படைப்பு உங்களது படைப்பாகவே பதிவேற்றம் செய்யப்பட்டு உங்களுக்கான அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படும்.
வழிகாட்டியினைப் பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள DOWNLOAD என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களின் சிறப்பு வழிகாட்டியினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் முதல் வாரம் முதல் பருவத் தேர்வு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இந்த வழிகாட்டியினை பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும். நன்கு பயிற்சி வழங்கி அவர்களின் தேர்ச்சிக்கும் நல்ல மதிப்பெண்ணுக்கும் உறுதுணையாய் இந்த வழிகாட்டி நிச்சயம் 100% உதவும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து நமது வலைதளம் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினா வங்கி + பயிற்சிப் புத்தகம் விரைவில் உங்களுக்கு புத்தகமாக வெளிவரும். அந்த பயிற்சிப்புத்தகத்தின் மாதிரிப் பக்கங்கள் நமது வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காதவர்கள் கீழ் வரும் இணைப்பில் சென்று அதனை பதிவிறக்கம் செய்து எவ்வாறு உள்ளது? என்பதனை பார்வையிடலாம். இதனை உங்கள் SPECIMAN COPY ஆக வைத்துக் கொள்ளலாம். அந்த வினாக்கள் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் வினாவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
வினா வங்கி + பயிற்சிப் புத்தகம் ( மாதிரிப் பக்கங்கள் ) - CLICK HERE
பத்தாம் வகுப்பு - இளந்தமிழ் - சிறப்பு வழிகாட்டி - CLICK HERE