நாள் : 25-07 -2022 முதல் 29 -07-2022
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. கோபல்லபுரத்து மக்கள்
2. தொகா நிலைத் தொடர்கள்
3. திருக்குறள்
அறிமுகம் :
Ø வீட்டில்
விருந்தினர் உபசரிப்பு குறித்து கற்ற பாடக் கருத்துகளை கேட்டு அறிமுகப்படுத்துதல்
Ø தொகைநிலைத்
தொடர்களின் வகைகளைக் கூற வைத்தல்
Ø நீதிகதை
ஒன்றினைக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø கிராமத்து
மனிதர்களின் விருந்தோம்பல் பண்பினை அறிதல்
Ø தொகா
நிலைத் தொடர்களையும், அதன் வகைகளையும் அறிதல்
Ø வாழ்வியல்
கருத்துகளை நீதி நூல்கள் வழியே அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø கதைப்பகுதியினை
மாணவர்களைக் கொண்டு நடிக்க வைத்து விளக்குதல்
Ø தொகா
நிலைத் தொடர்கள் குறித்து விளக்குதல்
Ø தொகா
நிலைத் தொடர்களை நடைமுறை எடுத்துக்காட்டுடன் விளக்குதல்
Ø வாழ்வியல்
கூறும் திருக்குறள் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.
Ø மனப்பாடக்
குறளை இனிய இராகத்தில் பாடுதல்
கருத்து வரைபடம் :
கோபல்லபுரத்து மக்கள்
தொகா நிலைத் தொடர்கள்
திருக்குறள்
விளக்கம் :
கோபல்லபுரத்து மக்கள்
Ø கிராமத்து மனிதர்கள்
வெள்ளந்தி மனிதர்கள்.
Ø அன்னமய்யா, சுப்பையா
கிராமத்து மக்கள்
Ø பரமேஸ்வரன் ஒரு வாலிபன்..
Ø சோர்வற்று இருந்தவனுக்கு
விருந்தோம்பும் மனித மாண்பு
தொகா நிலைத் தொடர்கள்
Ø உருபு மறையாமல் வெளிபட்டு
வருவது.
Ø ஒன்பது வகைகள்
Ø எழுவாய்த் தொடர், விளித்
தொடர்
Ø வினைமுற்றுத் தொடர்,
பெயரெச்சத் தொடர்
Ø வினையெச்சத் தொடர், வேற்றுமைத்
தொடர்
Ø இடைச்சொல் தொடர், உரிச்சொல்
தொடர்
Ø அடுக்குத் தொடர்
திருக்குறள்
Ø திருக்குறள் சிறப்புகள்,
நூற் குறிப்பு , ஆசிரியர் குறிப்பு
Ø ஒழுக்கமுடைமை, பெரியாரைத் துணைக்கோடல்
Ø கொடுங்கோன்மை, கண்ணோட்டம்
Ø ஆள்வினை உடைமை, நன்றி இல் செல்வம்
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை
வாசித்தல்
Ø கிராமத்து மனிதர்களின்
பண்புகளை பற்றி அறிந்து கொள்ளல்
Ø பசியுடன் வந்தவர்களுக்கு
உணவிடும் முறையை அறிதல்
Ø வட்டார வழக்குச் சொற்களை
அறிந்து கருபொருளை உணர்தல்
Ø தொடர்கள் பற்றி அறிதல்
Ø தொகை நிலைத் தொடருக்கும்,
தொகா நிலைத் தொடருக்கும் உள்ள வேறுபாடு அறிதல்
Ø தொகா நிலைத் தொடர்களின்
வகைகளை எடுத்துக்காட்டுடன் அறிதல்
Ø திருக்குறள் சிறப்பு
பற்றி அறிதல்
Ø திருக்குறள் நூல் குறிப்பு,
ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்
Ø திருக்குறள் கூறும் அறக்
கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்
Ø மனப்பாடக் குறளை மனனம்
செய்தல்
மதிப்பீடு :
LOT :
Ø கோபல்ல புரத்து மக்கள்
என்ற கதையினை எழுதியவர் யார்?
Ø தொடர் என்றால் என்ன?
Ø திருக்குறளை இயற்றியவர்
யார்?
MOT
Ø கதையின் கருபொருளாக விளங்குவது
எது?
Ø தொகை நிலைத் தொடருக்கும்,
தொகா நிலைத் தொடருக்கும் உள்ள வேறுபாடு யாது?
Ø ஒழுக்கமுடைமைக் குறித்து வள்ளுவர் கூறியது
யாது?
HOT
Ø பசித்தவருக்கும் உணவிடுதல்
என்ற அறச் செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் குறித்துக்
கூறுக.
Ø தொகா நிலைத் தொடர்களுக்கு
நடைமுறை எடுத்துக்காட்டுகள் தருக.
Ø திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என வழங்கப்படுகிறது?
கற்றல் விளைவுகள் :
Ø சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து
படித்தல்
Ø மொழிப் பயன்பாட்டில் தொகா நிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
Ø நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை