10TH - TAMIL - NOTES OF LESSON - JULY 3RD WEEK

 

நாள்                 :           18 -07 -2022 முதல்  22 -07-2022        

மாதம்                        ஜூலை            

வாரம்               :           மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                                        1.  விருந்து போற்றுதும்



   2. காசிக்காண்டம்

3. மலைபடுகடாம்


கரு பொருள்:

Ø  நம் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பல் மாண்பினை அறிதல்

Ø  விருந்தினரை வரவேற்கும் முறைகளை இலக்கியங்கள் மூலம் அறிதல்

Ø  ஆற்றுப்படுத்துதல் என்பது குறித்து இலக்கியங்கள் மூலமாக அறிதல்

உட்பொருள்:

Ø  விருந்தினர், விருந்தோம்பல், மக்களின் வாழ்வியலுடன் இணைந்துள்ளதை அறிதல்

Ø  உணவுவகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்துச் சுவைத்து அது போல ஈர்ப்புடன் எழுதப் பழகுதல்.

Ø  உயிரை உணர்வை வளர்க்கக் கூடிய உணவுகளைக் குறித்தும் செய்திகளை திரட்டி வெளிப்படுத்துதல்

கற்றல் விளைவுகள் :

Ø  நம் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் மாண்பினை உணர்ந்து பின்பற்றுதல்

Ø  பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து ஒப்பிட்டு பேசவும், கலந்துரையாடவும் திறன் பெறுதல்

Ø  இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விருந்தோம்பல் கருத்துகளையும் அதன் மொழியையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்

Ø  உணவை ஆக்கும் தன்மை, விருந்தோம்பும் முறை ஆகியவை மொழியில் நயம்படச் சொல்லப்படும் திறம் அறிந்து ஈர்ப்புடன் பேசவும், எழுதவும் திறன் பெறுதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  நீங்கள் விடுமுறையில் உங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிகழ்வினைக் கூறல்

Ø  முன் பின் அறிமுகம் இல்லாத நபர் உங்கள் இல்லத்திற்கு வரும் போது நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?

Ø  பத்தாம் வகுப்பு முடித்தவுடம் உயர்க் கல்வி தொடர யார் யாரிடம் உதவி கேட்பீர்கள்? ஏன்? இவைப் போன்ற அன்றாட வாழ்வில் நடைபெறும் சில நிகழ்வுகளைக் கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

 வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள், தமிழ் அகராதி,வரைபடம் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

விருந்து போற்றுதும்

·         முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் விருந்தினர்

·         அறவுணர்வும், தமிழர் மரபும்

·         தனித்து உண்ணாமை

·         இலக்கியங்களில் விருந்தோம்பல்

      • அல்லில் ஆயினும் விருந்து
      • இன்மையிலும் விருந்தோமல்
      •  நிலத்திற்கேற்ற விருந்து
      • விருந்தை எதிர்கொள்ளும் தன்மை

·         இன்றைய நிலையில் விருந்து பன்பாடு

காசிக்காண்டம்

·         காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல்

·         ஆசிரியர் : அதிவீரராம பாண்டியர்.

·         ஒன்பது விருந்தோம்பல் ஒழுக்கம்:

      • வியந்து உரைத்தல்
      • இனிமையாக பேசுதல்
      • மலர்ச்சியுடன் அவரை நோக்குதல்
      • வரவேற்றல்
      • எதிரில் நிற்றல்
      • மனம் மகிழும் படி பேசுதல்
      • அருகில் அமர்தல்
      • வாயில் வரை பின் தொடர்தல்

                  மலைபடுகடாம்

·         கூத்தராற்று படை எனவும் வழங்கப் பெறும்.

·         இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார்  நன்னன் என்னும் மன்னனைப் பாடியது.

·         கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்.

·         உயிரைக் காக்கும் உணவினைப் பற்றி அறிதல் 

ஆசிரியர் செயல்பாடு:

Ø    ஆசிரியர்  குறிப்பு நூல் குறிப்பு பற்றி கூறல்

Ø    பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø    விருந்து அன்றைய நிலையிலும், இன்றைய நிலையிலும் ஒப்பிட்டு அன்றாட வாழ்க்கை நிகழ்வோடு தொடர்ப்படுத்துதல்

Ø    பண்பாட்டுக் கூறான விருந்தோம்பல் வாழ்வியலுடன் பிணைந்துள்ளதை இலக்கியங்கள் வழியில் உணர்த்துதல்

Ø    காசி நகரத்தின் பெருமைகளைக் கூறல்

Ø    விருந்தினரை உபசரிக்கும் முறையின் ஒன்பது ஒழுக்கங்களை அன்றாட வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்

Ø    மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø    ஆற்றுபடை இலக்கியங்கள் பெரும்பாலும் ஆற்றுப்படுத்தும் இலக்கியங்களாக உள்ளதை உணர்த்துதல்

Ø    செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல்

Ø    கடினச் சொற்களுக்கான பொருள் அறிதல்

Ø    உயிரைக் காக்கும் உணவுவகைகளை கூறல்

மாணவர் செயல்பாடு:

Ø    உரைநடைப் பகுதியினை பிழையின்றி வாசித்தல்

Ø    உரைநடைப் பகுதியினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø    விருந்து,விருந்தினர், விருந்தோம்பல் முறை இவற்றை அறிந்துக்கொள்ளல்

Ø    விருந்தினரை உபசரிக்கும் முறையை இலக்கியங்களில் வழி அறிந்து அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்

Ø    ஆற்றுப்படுத்தும் முறை அறிதல்

Ø    மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்

கருத்துரு வரைபடம்

விருந்து போற்றுதும்

 



காசிக்காண்டம்

 

மலைபடுகடாம்

 

 

வலுவூட்டல்:

                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை      மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  வண்ணச் சொற்களை வாசித்தல்

Ø  சிறு சிறுத் தொடர்களை அறிந்து வாசித்தல்

Ø  செய்யுளினை சீர்ப் பிரித்து வாசித்தல்

Ø  மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்

மதிப்பீடு:

LOT

Ø  விருந்தினர் என்போர் யார் ?

Ø  காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் _______

Ø  ஆற்றுப்படுத்துதல் என்றால் என்ன?

MOT

Ø  நற்றிணைக் கூறும் விருந்தோம்பல் முறை யாது?

Ø  காசிக்காண்டம் கூறும் ஒன்பது விருந்தோம்பல் பண்புகள் யாவை?

Ø  மலைபடுகடாம் பாடலில் குறிப்பிடும் சோறு யாது? அதன் நன்மைகளைக் கூறுக.

HOT

Ø  வீட்டில் அன்றைக்கு திண்ணை வைத்த காரணம் யாது?

Ø  வெகு நாட்களாக காண காத்திருந்த  உங்கள் உறவினரை நீ எவ்வாறு வரவேற்பாய்?

Ø  உணவு சார்ந்த பழமொழியினைக் கூறி அதனை சார்ந்த நிகழ்வினை எடுத்துரைக்க.

Ø   

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post