10TH - TAMIL - NOTES OF LESSON - JULY 2ND WEEK

 

நாள்                 :           11 -07 -2022 முதல்  15 -07-2022        

மாதம்                        ஜூலை            

வாரம்               :           இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :         1.  புயலிலே ஒரு தோணி

   2. தொகைநிலைத் தொடர்கள்
பகுதி - 1

பகுதி - 2


கரு பொருள்:

Ø  கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும், அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்

Ø  எண்ணங்களை விவரித்தும், வருணித்தும் எழுதுதல்

Ø  தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல்.

உட்பொருள்:

Ø  ப.சிங்காரம் அவர்களைப் பற்றி அறிதல்

Ø  புயலின் கோரக்காட்சிகளை கதையின் வாயிலாக அறிதல்

Ø  தொகைநிலைத் தொடர்களின் வகைகளை அறிதல்

கற்றல் விளைவுகள் :

Ø  கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும், அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்

Ø  எண்ணங்களை விவரித்தும், வருணித்தும் எழுதுதல்

Ø  தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  நீங்கள் இதுவரை கேட்டறிந்த சில இயற்கை சீற்றங்கள் குறித்து கூறுக எனக் கூற வைத்து ஆர்வமூட்டல்

Ø  தொகைச் சொற்களை கரும்பலகையில் எழுதி அதன் விரியைக் கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

 வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள், தமிழ் அகராதி,வரைபடம் முதலியன.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

புயலிலே ஒரு தோணி

·         புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்தோனேசியாவிலிருந்து கப்பலில் செல்லும் போது கண்ட புயல் அனுபவம்

·         ப.சிங்காரம் குறிப்பு:

ஊர் : சிங்கம்புணரி

                     வேலைக்காக இந்தோனேசியா சென்றார். அச்சமயம் தென் கிழக்காசிய போர் மூண்டது. அச்சூழலில்

                   அப்பகுதியில் கடலில் நடைபெறும் புயல் அனுபவத்தை கற்பனைகளோடு “ கடற்கூத்து “ என்னும்

                   பெயரில் எழுதியுள்ளார்

·         அடுக்குத் தொடர்கள், வருணைனைக் காட்சிகள்

·         ஒலிக்குறிப்புச் சொற்கள்

தொகைநிலைத் தொடர்கள்

·         தொகைநிலைத் தொடர்கள் : உருபுகள் மறைந்து வருவது

·         ஆறு வகைப்படும்

·         வேற்றுமைத் தொகை  - வேற்றுமை உருபுகள்

      • உருபும் பயனும் உடன் தொக்க தொகை

·         வினைத்தொகை – காலம் கரந்த பெயரெச்சம்

·         பண்புத் தொகை  - மை விகுதி, பண்பு உருபுகள்

      • இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

·         உவமைத் தொகை – உவம உருபுகள்

·         உம்மைத் தொகை – உம் உருபு

·         அன்மொழித் தொகை – தொகைநிலை அல்லாத வேறுசொற்கள் மறைந்து வருதல்

ஆசிரியர் செயல்பாடு:

Ø    ஆசிரியர் பற்றி கூறல்

Ø    இயற்கையின் சீற்றங்கள் பற்றி கூறல்

Ø    இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறல்

Ø    புனைவு கதையில் இடம் பெற்றுள்ள அடுக்குத் தொடர்களையும், ஒலிக்குறிப்புச் சொற்களையும் கூறல்

Ø    கதையினை அதன் உணர்வு அடிப்படையில் வாசித்தல்

Ø    காணொளி காட்சியாக ஒளிபரப்புதல்

Ø    தொகை என்பதனை கூறல்

Ø    தொகைநிலைத் தொடர்களின் வகைகளை கூறல்

Ø    ஒவ்வொரு தொகைநிலைத் தொடர்களின் உருபுகள் மறைந்து வரும் விதம் கூறல்.

Ø    தொகைநிலை தொடர்களை அறிந்து தொடர்களை பயன்படுத்தும் திறன் வளர்த்தல்

மாணவர் செயல்பாடு:

Ø    கதை பகுதியினை பிழையின்றி வாசித்தல்

Ø    கதைப் பகுதியினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø    கதைப்  பகுதியில் இடம் பெறும் அடுக்குத் தொடர்களையும், ஒலிக்குறிப்புச் சொற்களை அறிதல்

Ø    முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள், சில முக்கிய வினாக்களை அறிதல்

Ø    காணொளி மூலம் புயலின் அனுபவத்தை வகுப்பறையில் பெறுதல்

Ø    தொகை என்பது பற்றி அறிதல்

Ø    தொகைநிலைத் தொடர்களின் வகைகளை அறிதல்

Ø    ஒவ்வொரு தொகைநிலைத் தொடர்களின் உறுப்புகளை அறிந்து பயன்படுத்துதல்

கருத்துரு வரைபடம்

புயலிலே ஒரு தோணி

 


தொகைநிலைத் தொடர்கள்

 


 

வலுவூட்டல்:

                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை      மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  வண்ணச் சொற்களை வாசித்தல்

Ø  அடுக்குத் தொடர்களை அறிந்து வாசித்தல்

Ø  ஒலிக்குறிப்புச் சொற்கள், வருணனைத் தொடர்களை வாசித்தல்

Ø  தொகைநிலைத் தொடர்களின் உருபுகளை அறிதல்

Ø  தொகைநிலைத் தொடர்களின் ஆறு வகைகளை அறிதல்

மதிப்பீடு:

LOT

Ø  புயலிலே ஒரு தோணி – கதையின் ஆசிரியர்_________

Ø  சொற்றொடர் என்பது யாது?

MOT

Ø  தொங்கான் என்பது யாது?

Ø  தொகைநிலைத் தொடர்களின் ஆறு வகைகள் யாவை?

HOT

Ø  வெள்ளம் இயற்கை சீற்றத்தின் விளைவுகள் எவ்வாறு இருக்கும்?

Ø  தொகைநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து அவை இடம் பெறுமாறு சில தொடர்களை அமைத்து கூறுக

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post