50 மதிப்பெண் கொண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான மாதிரி முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள்
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் அனைத்து மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வேண்டுமாய் வாழ்த்துகிறது உங்கள் தமிழ் விதை. அதற்கு தேவையான கற்றல் வளங்கள் அனைத்தும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தற்சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தில் ஒரு இயல் நடத்தப்பட்டு இருக்கும். நாம் ஒவ்வொரு இயலுக்கும் வினாத்தாள் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம். அத்தோடு நில்லாது இடைப்பருவத் தேர்வுகள்,காலாண்டு,அரையாண்டு,திருப்புதல்த் தேர்வுகள், மாதிரி முழு ஆண்டுப் பொதுத்தேர்வு என அதுவும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளை அடிப்படையாகக் கொண்டு வினாத்தாள் தயாரித்து வழங்க உள்ளோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி நன்கு பயிற்சி பெறுமாய் வேண்டுகிறோம். நீங்கள் நமது வலைதளம் மூலம் வெளியிடப்படும் வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்துக் கொள்ளவும். தேர்வு சமயத்தில் அவை மிகுந்த பயனளிக்கும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இவற்றை தந்து நன்றாக பயிற்சி செய்ய உதவிடுங்கள். அவர்கள் நிச்சயம் நல்ல மதிப்பெண்ணை உங்களுக்கு வழங்குவார்கள்.
முயற்சி + பயிற்சி = வெற்றி
இதுவே நமது தாரக மந்திரமாக இருக்கட்டும்.
குறிப்பு : நகல் எடுக்கும் பொருட்செலவைக் குறைக்கும்ப் பொருட்டு வினாத்தாள் இரு புறம் வினாக்கள் வைத்து தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் ,உங்களின் மாணவர்களுக்கும் பொருட்ச்செலவயையும், அதே சமயம் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டியும் வினாத்தாள் சிக்கனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேர்த்தியாகவும் இருக்கும்.