பத்தாம் வகுப்பு
தமிழ் – பணித்தாள் – வாரத்தேர்வு -1
பாடம் : இயல் : 1 மதிப்பெண்கள் : 40
அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது _____
அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்
2. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___________________
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே ________________
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
5. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை _
அ) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை
ஆ ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 5 ×2=10
1. வேங்கை - என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
4. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
5 தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
இ ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 4×3=12
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘
இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
3. ‘ அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது,பிறந்தது,பிறவாதது ‘ இவை எல்லாம் அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை.எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
ஈ ) அடிமாறாமல் எழுதுக . 1×5=5
1. ‘ அன்னை மொழியே ‘ – எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடலை எழுதுக.
உ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. 1×4=4
ஊ ) கலைச் சொல் தருக.. 4×1=4Vowel –
Consonant –
Homograph –
Monolingual –
CLICK HERE TO GET PDF