பத்தாம் வகுப்பு
தமிழ்
வாராந்திரத் தேர்வு - 3
வினாத்தாள்
ஜூலை - முதல் வாரம்
( 11 -07-2022 )
பத்தாம் வகுப்பு
தமிழ் – பணித்தாள் – வாரத்தேர்வு - 3
பாடம் : இயல் : 1 மதிப்பெண்கள் : 40
அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 4×3=12
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘
இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
3. ‘ அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது,பிறந்தது,பிறவாதது ‘ இவை எல்லாம் அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை.எல்லாம் எமக்குத் தெரியும்.இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
ஆ ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 2×8=16
1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக..
2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
இ) நயம் பாராட்டுக 5×1=5
1 தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே - கா.நமச்சிவாயர்
4. நிற்க அதற்குத் தக. 5×1=5
இன்சொல் வழி
தீய சொல் வழி
பிறர் மனம் மகிழும்
அறம் வளரும்
புகழ் பெருகும்
நல்ல நண்பர்கள் சேருவர்
அன்பு நிறையும்
பிறர் மனம் வாடும்
அறம் தேயும்
இகழ் பெருகும்
நல்ல நண்பர்கள் விலகுவர்
பகைமை நிறையும்
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
5) கலைச்சொல் தருக:- Homograph – Monolingual –
CLICK HERE TO GET PDF